டிரம்ப் – புடின் சந்திப்பு… அலாஸ்கா இதமான சூழலை ஏற்படுத்துமா ?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினை நாளை சந்திக்க உள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போரை நிறுத்த கடந்த மூன்றரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் எந்த ஒரு பலனையும் அளிக்கவில்லை. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த போரை நிறுத்த அதிகாரிகள் மட்டத்தில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார். தவிர, ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரித்தார். இருந்தபோதும் டிரம்பின் எந்தவொரு நடவடிக்கையும் அவருக்கு … Read more

செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது

இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து பிஎம்டபிள்யூ கார்களின் விலையும் 3% வரை மூலப்பொருட்களின் விலை உட்பட பல்வேறு காரணங்களால் உயருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ குழம இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. விக்ரம் பவா கூறுகையில், தொடர்ச்சியான அந்நிய செலாவணி தாக்கம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி, போக்குவரத்து செலவுகள் போன்ற காரணிகள் மூலப்பொருள் மற்றும் மற்ற இதர செலவுகளின் காரணமாக விலை உயர்வை தவிர்க்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளார், மேலும், … Read more

Anupama: ''அப்படத்தில் எனக்கு வசதியில்லாத உடைகளை அணிந்தேன்; மக்கள் வெறுத்தனர்!" – அனுபாமா பரமேஷ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் ‘பரதா’ என்ற தெலுங்கு திரைப்படம் இம்மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இவர் நடித்திருந்த ‘டிராகன்’ படமும் வெளியாகியிருக்கிறது. இதைத் தாண்டி மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘பைசன்’ படமும் தீபாவளி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன் இப்படி பரபரப்பான லைன்-அப்களுடன் சுற்றி வரும் அனுபமா பரமேஸ்வரன், ‘டில்லு ஸ்கொயர்’ படத்தில் நடித்ததனால் மக்கள் அவரை வெறுத்ததாக சமீபத்திய நேர்காணல் … Read more

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது  வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,  சுதந்திர இந்தியாவில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! இந்நாளில் நாடெங்கும்  அமைதியும், அன்பும், சகோதரத்துவமும்  தழைத்தோங்க பத்திரிகை.காம் வாழ்த்துகிறது…   – ஆசிரியர்-

21,000க்கு கூடுதலான முன்பதிவுகளை கடந்த கியா காரன்ஸ் கிளாவிஸ்

  கியா இந்தியாவின் எம்பிவி ரக காரன்ஸ் கிளாவிஸ் மற்றும் காரன்ஸ் கிளாவிஸ் EV என இரண்டும் சுமார் 21,000 முன்பதிவுகளை கடந்துள்ள நிலையில், EV மட்டும் 1000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்த மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று எலக்ட்ரிக் மற்றும் ICE என இரு மாடல்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் வசதிகளை பகிர்ந்த் கொண்டிருக்கின்ற நிலையில் ICE முறை கிளாவிஸ் ரூ.11.50 லட்சம் தொடங்கி தோராயமாக … Read more

J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அச்சம்!

ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புள்ளாகி இருக்கின்றனர். உத்தரகாண்ட் வெள்ளம் அதேபோல கடந்த வாரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருந்தனர். ஜம்மு & காஷ்மீரின் ஜோசிதி கிஷ்த்வாரில் மேக … Read more

நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்…

டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும்  நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை. இதை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் 3000  ரூபாய்க்கான  வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்  நடைமுறை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமுலாகிறது. இந்த திட்டத்தின்படி,  தனியார் வாகனங்களுக்கு (பர்சனல் டிரான்ஸ்போர்ட்  – சொந்த வாகனங்கள்) 200 கட்டணமில்லா பயணங்களும் வழங்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ‘பாஸ்டேக்’ … Read more

Mahindra BE 6 Batman Edition – மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிசன் ரூ.27.79 லட்சத்தில் வெளியானது

300 யூனிட்டுகள் மட்டும் தயாரிக்கப்பட உள்ள மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிசன் ஆனது Pack Three வேரியண்டின் அடிப்படையிலான வசதிகளுடன் பேட்மேன் கதாநாயகனால் ஈர்க்கப்பட்ட வசதிகளுடன் ₹27.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டு சர்வதேச பேட்மேன் தினமான செப்டம்பர் 20 ஆம் தேதி டெலிவரி வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சார்ஜர் மற்றும் பொருத்துவதற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். 7.2 kW சார்ஜருக்கு ₹50,000 கூடுதலாகவும் அல்லது … Read more

“யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன்பு சமம்" – நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. … Read more

வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II நிலையங்களை இணைக்கும் ‘ஸ்கைவாக்’ மேம்பாலம்! ஒப்பந்தம் வழங்கியது மெட்ரோ ரயில் நிறுவனம்!!

சென்னை; வடபழனியில் புதிதாக அமைய உள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி,  வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II ஐ இணைக்கும் ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II நிலையங்களை இணைக்கும் ஸ்கைவாக் ஒன்றை 120 நாட்களில் கட்ட CMRL ₹8.12 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இது தடையற்ற, டிக்கெட் … Read more