ஜிஎஸ்டி குறைப்பு – முதல்வேலைக்கு ரூ.15ஆயிரம்: பிரதமர் மோடியின் 79வது சுதந்திர தின பேச்சின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள்…

டெல்லி:  நாட்டின் 79வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 12வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி யின் சுதந்திர தின உரையின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு இரட்டை தீபாவளி என்றும் கூறினார். தீபாவளியையொட்டி ஜிஎஸ்டியில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும், வரவிருக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை மக்களுக்கான “இரட்டை தீபாவளி” என்று குறிப்பிட்ட பிரதமர், ஜிஎஸ்டி வரி குறைப்பு மட்டுமின்றி, புதிதாக வேலைக்கு சேரும் எல்லா இளைஞர்களுக்கும் ரூ.15,000 ஊக்க … Read more

11 மணி நேர ED சோதனை: கைகுலுக்கி அனுப்பிய அமைச்சர், சூட்கேஸுடன் சென்ற அதிகாரிகள் – என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் வீட்டில் காலை 7.30 மணிக்கு அமலாக்கதுறையினர் சென்று செக்யூரிட்டி கார்டுகளை வெளியேற்றி விட்டு சோதனையில் ஈடுபட்டனர். இவரது வீட்டில் மட்டுமல்லாமல் சீலப்பாடியில் உள்ள அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் வீடு, மகள் இந்திராணி வீடு மற்றும் அமைச்சர் பெரியசாமிக்கு சொந்தமாக வத்தலகுண்டு சாலையில் உள்ள அலமேலு மற்றும் இருளப்பா மில்களிலும் சோதனை நடைபெற்றது. அமைச்சர் பெரியசாமியின் இல்லம் தகவலறிந்து வந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் … Read more

மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்! மத்தியஅரசு பதில்….

டெல்லி: மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்  என  குடியரசுத் தலைவருக்கு, ஆளுநருக்கு கெடு விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில்,  மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஜனாதிபதிக்கு மூன்று மாத காலக்கெடுவும், ஆளுநர்களுக்கு ஒரு மாத காலக்கெடுவும் ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்திருந்தது. இந்த விவகாரத்தில் மாநிலஅரசுகள் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், மத்தியஅரசு … Read more

மூன்றே போட்டிகளில் கோலியின் சாதனையை முறியடித்த `பேபி ஏபி' பிரேவிஸ்; எப்படி சாத்தியமானது?

பேபி ஏபி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டெவால்ட் பிரேவிஸ், டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான கோலியின் சாதனையை வெறும் மூன்றே போட்டிகளில் முறியடித்திருக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இதில், ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டிம் டேவிட்டின் (83 ரன்கள்) அதிரடியால் 178 குவித்த ஆஸ்திரேலியா, 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. THREE NO-LOOK SIXES IN … Read more

சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது

திருவனந்தபுரம்: ஆவணி மாதப்பிறப்பையொட்டி, இன்று மாலை 5மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்குப் பூஜை மிகவும் புகழ் பெற்றவை. இதையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அப்போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். இதுமட்டுமின்றி ஒவ்வொரு … Read more

புதுச்சேரி: தடையை மீறி கடலில் குளித்ததால் நேர்ந்த சோகம்; இளம்பெண் உட்பட 3 ஐ.டி ஊழியர்கள் உயிரிழப்பு

79-வது சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அத்துடன் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும், இளம்பெண்களும் குவிந்திருக்கின்றனர். அதனால் கடற்கரை மற்றும் சுற்றுலாத்தலங்களில் வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. சடலமாக பவன்குமார், பிரெட்ஜ்வால் மேத்தி, மேகா அதன்படி பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 25 வயது பவன்குமார், … Read more

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் ரூ.243.31 கோடியாக உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 2020-21ல் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24ல் சுமார் 5மடங்கு உயர்ந்து ரூ.243.31 கோடியாக உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022ல் 1.4 லட்சமாக நிலையில், 2023ல் 11.7 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சுற்றுலா, புதுமை காணும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது; அறிவு வளர்ச்சிக்கும், ஆற்றலின் பெருக்கத்திற்கும் துணைபுரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் … Read more

Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்…" – அமைதிக்கு அமெரிக்கா காட்டும் வழி என்ன?

ஆகஸ்ட் 14ம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் மற்றும் நேட்டோ தலைவர்களை அழைத்து, ரஷ்யா போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்றும் விரிவான ஒப்பந்தத்துக்கு தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. Trump – Zelenskyy உரையாடல் அலாஸ்காவில் புதினுடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாஷிங்டன் டிசிக்கு செல்லும்போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை அழைத்துப் பேசியிருக்கிறார் ட்ரம்ப். அவர்களது உரையாடல் சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்டதாகக் கூறப்படுகிறது. அதில், … Read more

நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம்! டாக்டர் ராமதாஸ்….

தைலாபுரம்:  நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம்  நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், தான்  அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை என்று கூறினார். ‘பொதுக்குழு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்”பொதுக்குழு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்றும்,  புதுச்சேரி ‘சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நாளை (ஆகஸ்ட் 17) பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும், அதில் எந்த … Read more