PMK: 'எனக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்; ஆனால்…' – ராமதாஸ்

திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், தனது தாய் சரஸ்வதியின் பிறந்தநாளைக் கொண்டாட தைலாபுரம் சென்றிருந்தார் அன்புமணி. அப்போது, அங்கே ராமதாஸையும் சந்தித்து இருந்தார் அன்புமணி. ஆனால், ‘இருவருக்கும் இடையேயும் பேச்சுவார்த்தை நடந்ததா?’ என்பது தெரியவில்லை. இந்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது… பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் “எங்களுடைய 36 தீர்மானங்கள் ஒரு சமுதாயத்திற்கானது மட்டுமல்ல… அது தமிழ்நாட்டின் அனைத்து சமுகத்திற்கானதும் ஆகும். எப்போதும் … Read more

கைகொடுத்த படிப்பு; ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த காவலர் – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

திருப்பூர், வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங்கு ரோடு ஏவிபி பள்ளி அருகே வெள்ளிக்கிழமை இரவு போலீஸார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, ஆட்டோ அருகில் சென்று பார்த்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்வதும், அதனால், வலியால் அவர் துடித்து வருவதும் தெரியவந்தது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் … Read more

சம்மத உறவு குற்றமாகாது…

சம்மத உறவு குற்றமாகாது… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் 18 என்ற நம்பருடன் மாறி மாறி வயசுடன் விளையாடிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. 18 வயது பூர்த்தியாகாத ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கில் ஒருவனுக்கு (காதலனுக்கு) ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறது விசாரணை நீதிமன்றம். ஆனால் சம்பந்தப்பட்ட பெண் 18 வயது பூர்த்தியாக வெறும் 19 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதோடு பெண்ணின் சம்மதத்தின் பெயரிலேயே உறவு நடந்திருக்கிறது … Read more

PMK: ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு; 'நோ' அன்புமணி; காந்திமதி பிரசன்ட் – என்ன நடக்கிறது?

இன்று திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. கடந்த வாரம், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லாபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் மேடையில் ராமதாஸிற்காக ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமதாஸ் அதில் பங்கேற்கவில்லை. மேலும், அந்தக் கூட்டத்தில், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. காந்திமதி ‘நோ’ அன்புமணி இந்த நிலையில் தான், இன்று … Read more

மணிப்பூர் கவர்னர் அஜய் பல்லாவுக்கு நாகாலாந்து கவர்னராக கூடுதல் பொறுப்பு; ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

புதுடெல்லி, நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல. கணேசன் சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மாலை 6.23 மணியளவில் காலமானார். அவருக்கு கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு பிறந்தவரான இல. கணேசன் 1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து தமிழகத்தில் அக்கட்சியின் அடித்தள விரிவாக்கத்திற்கு உதவினார். அமைப்பு செயலாளர், தேசிய செயலாளர், … Read more

'ரஷ்யா தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், நாங்கள்…' – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் இந்தச் சந்திப்பில் எட்டப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்று இரு நாட்டு அதிபர்களும் கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில், நாளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார். ஜெலன்ஸ்கி – ட்ரம்ப் ஜெலன்ஸ்கி பதிவு ட்ரம்ப் – புதின் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார். அதில், … Read more

சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெண் எம்.எல்.ஏ., யோகி ஆதித்யநாத்துடன் சந்திப்பு

லக்னோ, உத்தர பிரதேசத்தில் சட்டசபை கூட்டத்தொடரின்போது, சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வான பூஜா பால், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்தும், அவரை புகழ்ந்தும் பேசினார். 2047-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை என்ற பெயரில் அவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய பூஜா பால், என்னுடைய கணவரை (ராஜு பால்) கொலை செய்தது யாரென எல்லோருக்கும் தெரியும். எனக்கு நீதியை பெற்று தந்ததற்காகவும், ஒருவரும் என்னுடைய குறையை கேட்காதபோது அதனை கேட்டதற்காகவும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவிக்க … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 17.8.25 முதல் 23.8.25 | Indha Vaara Rasi Palan | துல்லிய பலன்கள்!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் Weekly Horoscope: வார ராசி பலன் 17.8.25 முதல் 23.8.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides his expert predictions for the week of August 17rd – Augest 23 th, 2025, whether you are … Read more

இந்தியாவுக்கு வந்து சேர்ந்த சுபான்ஷு சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு

புதுடெல்லி, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில், சுக்லாவுடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர். அவர்கள் 4 பேரும் விண்வெளியில் 18 நாட்கள் வரை தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். … Read more

வேண்டப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உணவோடு கஞ்சா சட்னி சப்ளை; உத்தரப்பிரதேசத்தில் கடை உரிமையாளர் கைது

உணவில் எத்தனையோ விதமான புதிய வகைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் கவர்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஒரு உணவக உரிமையாளர் வாடிக்கையாளர்களை கவர சாப்பாட்டில் கஞ்சாவைக் கலந்துகொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்லால்கஞ்ச் பகுதியில் பிரமோத் என்பவர் தெருவோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர். அவர்களில் தனக்கு வேண்டப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சட்னி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த சட்னிக்காகவே அதிகமான … Read more