அதிகார மோதல்: ராமதாஸ் தலைமையில் நாளை பாமக புதிய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள அதிகார மோதல் காரணமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் பல புதிய மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாமகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக,  ராமதாஸ் இதுவரை  55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் மாற்றியுள்ளார். அவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  ஏற்பட்டு வந்த  கருத்து … Read more

Israel Vs Iran: “Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

கடந்த சில நாள்களாக, ‘ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு’ என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலின் பின்னணி என கூறப்படுகிறது. ஈரான் அதிபர் அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் … Read more

ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்…

புளோரிடா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  வரும் 19ந்தேதி  பயணமாகிறார்கள் என நாசா அறிவித்துஉள்ளது. ஏற்கனவே ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 பயணம் 5 முறை தொழில்நுட்ப கோளாறுகளால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு … Read more

“டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' – மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 2018 முதல் 2024 வரை அலெக்சாண்டர் விமான குழுவினர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அணுகும் முறையை பயன்படுத்தி அவர்களுக்கான சலுகைகள் மூலம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். Flight (Representational Image) அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஸ்பிரிட், யுனைடெட், டெல்டா போன்ற முக்கிய அமெரிக்க விமான நிறுவனங்களில் டிக்கெட் … Read more

ரூ397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

சென்னை; தமிழ்நாட்டில், மின்மாற்றி கொள்முதலில் (டிரான்ஸ்பார்மர்) முறைகேடு நடைபெற்றுள்ளதாக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச்சேர்ந்த முன்னாள் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறையில் மின்மாற்றி கொள்முதல் டெண்டர் தொடர்பான முறைகேடு வழக்கில் அந்த துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ397 … Read more

Tourist family: `ஆட்டோவில் கிடைத்த மகிழ்ச்சி, அளவிட முடியாது' -இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்சி

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் ஆட்டோவில் பயணித்த போது, அங்கு நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவிந்த், சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர் ஆகிய நடிகர் பட்டாளத்தை வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி ஜனரில் மக்களுக்கு எடுத்துக்காட்டிருந்தனர். இந்த படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் … Read more

தமிழ்நாட்டில் மேலும், 25மாவட்ட மருத்துவமனைகள், 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில்  உள்ள 19 மாவட்டங்களில் விரைவில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்,  25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில், மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டிற்கான மருத்துவ பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து, மயக்கவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறியதாவது, மக்கள் நல்வாழ்வுத்துறையில் தொடர்ந்து மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் மரணங்களை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

விமான விபத்து பற்றி முன்கூட்டியே கணித்த சாமியார்; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பெலகாவி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென்று அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்பட 241 பேர் உடல் கருகி பலியானார்கள். விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்கிற பயணி மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார். மேலும் விமானம் மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி உருக்கமான … Read more

`திருமாவளவன் பேரணியில் ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி மறுப்பு' – காவல்துறை சொன்ன காரணம்

திருச்சி மாநகரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, ‘மதசார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை இந்த பேரணிக்கு மாநகர காவல் துறை அனுமதி கொடுத்துள்ளது. அதேநேரம், பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இந்த பேரணியை நடத்த வேண்டும். சாலையின் குறுக்கே மேடை அமைத்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடையாது. வேண்டுமானால் சிறிய … Read more

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

சென்னை: தமிழ்நாட்டில்  டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார்  2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை … Read more