குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும்! டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 15)  குரூப்-1, 1 ஏ தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என  டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர்  தெரிவித்து உள்ளார். இன்று நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகர், “சென்னையில் ஏறத்தாழ 170 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 72 பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. … Read more

'தெய்வத்தின் குரல் 8 – ம் பாகம்' உள்ளிட்ட 5 நூல்கள் வெளியீடு- மகாபெரியவர் பக்தர்கள் மகிழ்ச்சி!

நடமாடும் தெய்வமாக இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் மகாபெரியவர் ஆற்றிய அருளுரைகளின் தொகுப்பே, ‘தெய்வத்தின் குரல்.’ 7 தொகுதிகளாக வெளியான இந்த நூல்களை தொகுத்து நமக்கு அளித்தவர் ரா. கணபதி என்னும் தமிழறிஞர். கல்கி முதலான புகழ்பெற்ற இதழ்களில் பணியாற்றிய ரா.கணபதி, தன் வாழ்வில் 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்றாலும் தெய்வத்தின் குரல் அவரின் மாபெரும் தொண்டாகக் கருதப்படுகிறது. மகாப்பெரியவரின் அனுமதியோடு இவர் இந்தப் பணியைச்செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில் 7 தொகுதிகளும் வெளியாயின. … Read more

கடத்தல் புகார்: ஜெகன்மூர்த்தி உள்பட புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் கைது?

சென்னை:  சிறுவனை கடத்தியதாக புகாரின் பேரில்,  புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி யை போலீசார்  நேற்று (ஜுன் 14ந்தேதி) கைது செய்ய சென்ற நிலையில், அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேலும் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில்,  அவரது கட்சி தொண்டர்களும் சாரை சாரையாக வந்து போராட்டதால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து,  இன்று போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரம் கட்சி … Read more

Israel – Iran Conflict: ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் இந்நிலையில் இன்று மீண்டும் ஈரானில் உள்ள எரிசக்தி … Read more

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பாஜக! தி இந்து செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை:  கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பாஜக, தனது  பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்,  தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி  முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் , பிரதமர் மீன்வளத் திட்டம் , உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள … Read more

குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை; ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் அவலம்

மும்பை, மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அவிதா (வயது26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் ஆம்லன்சுக்காக 108-க்கு போன் செய்தனர். ஆனால் தற்போது ஆம்புலன்ஸ் இல்லை என பதில் தெரிவிக்கப்பட்டது. காலை 8 மணி வரை திரும்ப திரும்ப போன் செய்தும் கூட அவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை. இதன் காரணமாக குடும்பத்தினர் தனியார் வாகனம் … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 15.6.25 முதல் 21.6.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் Source link

விபத்து எதிரொலி: 9 போயிங் விமானங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுபெற்றதாக அறிவிப்பு…

டெல்லி : அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா தன்னிடம்  உள்ள விமானங்களில்   9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை  மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு பெற்றதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் ஜூன்  12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இந்த  விமான  விபத்து காரணமாக  இதுவரை   274 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் … Read more

மத்தியபிரதேசம் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

போபால், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்தியபிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று மாலை அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் … Read more

TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி… ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!

டிஎன்பிஎல் பத்தாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கோவை அணி வீரர் முதலில் இன்னிங்ஸை தொடங்கிய லைக்கா கோவை கிங்ஸ் தொடக்கம் முதலே சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஸ்வர் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். … Read more