காதலர்களை மிரட்டி ஜிபே-வில் பணம் பறிப்பு; டிஜிட்டல் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!

தஞ்சாவூர் அருகே உள்ள அதினாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் வயது 24. இவர், இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இளம்பெண்ணை அவரின் சொந்த ஊரான அரியலுார் மாவட்டம், திருமானுாரில் விடுவதற்காக தமிழரசன் தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார். ஜிபே தஞ்சாவூர் – திருவையாறு பைப்பாஸ் சாலை எட்டுகரம்பை பகுதியில் சென்றபோது, இளம்பெண் … Read more

ஆற்காடு சுரேஷ் மனைவி ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைது

சென்னை தலைமறைவாக இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ், கொலை செய்யப்பட்டார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என ஆற்காடு சுரேசின் உறவினர்கள் கருதி வந்தனர். ஆற்காடு சுரேசின் பிறந்தநாளான கடந்த ஜூலை 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதால் ஆற்காடு சுரேசின் சகோதரர் பொன்னை பாலு உட்பட … Read more

கர்நாடகா: `உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் வங்கதேச பிரதமர் நிலைதான்..'- ஆளுநரை எச்சரித்த காங்கிரஸ் தலைவர்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூர் நகர மேம்பாட்டு ஆணையம் இழப்பீடு நிலம் ஒதுக்கியதில் மோசடி நடந்திருப்பதாக, சித்தராமையாவுக்கெதிராக எழுந்த புகாரில், வழக்கு பதிவுசெய்து விசாரிக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். மறுபக்கம், பா.ஜ.க இந்த விவகாரத்தை முன்வைத்து சித்தராமையா பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவருகிறது. சித்தராமையா – காங்கிரஸ் அதேசமயம், இது பிற்படுத்தப்பட்ட முதல்வருக்கு எதிராக ஆளுநர் மூலம் மத்திய பா.ஜ.க அரசு செய்யும் சதி என காங்கிரஸ் விமர்சித்து … Read more

ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி… தமிழக அரசுடன் டாடா நிறுவனம் கைகோர்க்கிறது…

ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம் – வடகால் பகுதியில் 18,000 பேர் தங்கும் வகையில் மெகா தங்கும் விடுதியை தமிழக அரசு கடந்த வாரம் திறந்துவைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு-விடம் அந்நிறுவன பணியாளர்களுக்கான விடுதிகளின் சாவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் … Read more

வெடிகுண்டு வழக்கு முதல் சிஎம் பதவி வரை.. ஜார்க்கண்ட்டில் கலகம் செய்யும் சம்பாய் சோரன்! யார் இவர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கே ஜேஎம்எம் கட்சித் தலைமைக்கு எதிராகச் சம்பாய் சோரன் கலகம் செய்துள்ளார். அங்கே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த கலகத்தைச் செய்த சம்பாய் சோரன் யார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். மூத்த ஜேஎம்எம் Source Link

வயநாடு நிலச்சரிவு: நிவாரணத் தொகையில் இ.எம்.ஐ. பிடித்தம் செய்த வங்கிகள் – பினராயி விஜயன் கண்டனம்

திருவனந்தபுரம், கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி … Read more

UPSC Lateral Entry: `முற்றிலும் தவறு… அரசிடம் கேள்வியெழுப்புவேன்'- மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சமீபத்தில், Lateral Entry எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. UPSC | யு.பி.எஸ்.சி அலுவலகம் மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்வதை எதிர்த்த மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, “இது தலித்துகள், … Read more

வாடகை கொடுக்காமல் ஏமாற்றிய இசையமைப்பாளர் : காவல்துறை விசாரணை

சென்னை சென்னை காவல்துறை வீட்டு வாடகை கொடுக்காத விவகாரத்தில் பிரபல இசையமைப்பாளரிடம் விசாரணையை தொடங்க உள்ளது. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். நேற்று ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,  “ரூ.20 லட்சம் வாடகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்தார். அவரை போனில் தொடர்பு கொண்டாலும் பதில் அளிக்கவில்லை. முறைப்படி எந்த தகவலும் … Read more

நுரையீரலில் வீக்கம்.. பெண்ணுறுப்பில் காயம்… \"மம்தா மேல நம்பிக்கையே இல்லை: கொல்கத்தா டாக்டர் அப்பா

கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில், அரசியல் கடந்தும் நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. அத்துடன், அவசர அவசரமாக என்னுடைய மகளின் உடல் எரிக்கப்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்று உயிரிழந்த பெண்ணின் அப்பா எழுப்பியிருக்கும் கேள்விகள், மேற்கு வங்கத்தை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது.பெண் டாக்டரை, மருத்துவமனையில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக அடுத்த 6 Source Link

கவர்னர் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்

பெங்களூரு, மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தான் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார். இந்த நிலையில் கவர்னரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் முதல்-மந்திரி சித்தராமையா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க … Read more