பதம் பார்த்த கூர்மையான ஆயுதங்கள், தீப்பந்தம்.. மேற்கு வங்கத்தில் யானை உயிரிழந்த சோகம்

கொல்கத்தா: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு கடந்த திங்கள் கிழமை யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. யானைகள் தினம் கொண்டாடப்பட்டு ஒரு வாரம் முடிவதற்குள் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு யானை மிகவும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் Source Link

விபத்தில் சிக்கிய நாடோடி பழங்குடியின பெண்; ஆதார் இல்லாததால் பரிதவிப்பு- சிகிச்சைக்கு உதவிய ஆட்சியர்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கொங்கரை மாம்பட்டு ஊராட்சி, ஈஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வருபவர் நாடோடிப் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி (60). இவர் கடந்த மாதம், 20-ம் தேதி இரவு சாலை விபத்தில் சிக்கியிருக்கிறார். அதில் கை, கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அவரின் உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், லட்சுமிக்கு ஆதார் அட்டை இல்லை எனக் காரணம் காட்டி, அடுத்த … Read more

விவசாயத்திற்கு பயன்படுத்தாத மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு…

விவசாயத்திற்காக பெறப்பட்ட மின் இணைப்பை வேறு பயன்பாட்டுக்கு உபயோகிப்பது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து விவசாய மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது. இந்த நிலையில், விவசாய நிலங்கள் குறைந்துவருவதாகவும் அந்த நிலங்கள் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கருத்தில் … Read more

போலீஸை விரட்டிய பெண்கள்.. பெண் டாக்டர் கொலையால் கொந்தளித்த கால்பந்து ரசிகர்கள்! பதறும் கொல்கத்தா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தான் இன்று திடீரென்று கால்பந்து ரசிகர்கள் நடத்திய போராட்டத்தால் கொல்கத்தாவில் நடைபெற இருந்த துரந் Source Link

உத்தரபிரதேசம்: பேருந்து மீது வேன் மோதி பயங்கர விபத்து – 10 பேர் உயிரிழப்பு

புலந்த்ஷாஹர், உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் பேருந்து மீது வேன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சேலம்பூர் பகுதியில் புடான்-மீரட் மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி எதிரில் வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக … Read more

மேரேஜ் லைஃபை நாசமாக்குறது இதெல்லாம்தானா..? | காமத்துக்கு மரியாதை – 192

காதலிக்கும்போதோ, திருமணமான புதிதிலோ இருவரும் ஈருடல் ஓருயிராக இருப்பார்கள். மோகம், ஆசையெல்லாம் முடிந்து வழக்கமான வாழ்க்கை முறைக்கு வந்தபிறகும், அதே காதலுடன் வாழ்க்கையைக் கொண்டாடினீர்களென்றால் நல்லது. ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை. ஒருவர் மீது ஒருவருக்கு கோபம், வெறுப்பு, பகை, ஏன் சிலருடைய மனதில் போட்டி மனப்பான்மைகூட வந்துவிடுகிறது. இந்த உணர்வுகளோடு தாம்பத்திய உறவுக்கு முயன்றால், பதற்றத்தில் விந்து முந்துதலில் ஆரம்பித்து ஆண்மைக்குறைபாடு வரைக்கும் ஏற்படலாம். கணவருக்கு விந்து முந்தினால், மனைவிக்கும் உறவில் உச்சக்கட்டம் கிடைக்காது … Read more

கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட் : ஆக. 19 முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரளாவில் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 22 வரை கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, தவிர ஆலப்புழா, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவின் கொச்சி மற்றும் உள்மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ள வானிலை ஆய்வு … Read more

மக்களை தவறாக வழிநடத்தும் மம்தா ராஜினாமா செய்யணும்! கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம்-நிர்பயா தாய் பரபர

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக 2012 டெல்லி கூட்டுப் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தாய் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மம்தாவை கடுமையாக விமர்சித்த அவர், நிலைமையைக் கையாள தவறி மம்தா பதவி விலக வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார். Source Link

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் அந்தரங்க உறுப்பை தோசை கரண்டியால் தாக்கிய இளம்பெண்

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த பிவண்டி பகுதியில் 26 வயதுமிக்க இளம்பெண் வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அனில் சத்தியநாராயணன். இந்த நிலையில், சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வாலிபர் மதுபோதையில் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் வாலிபரிடம் தப்பிக்க சமையல் அறைக்கு ஓடினார். அங்கும் பெண்ணை துரத்தி சென்ற வாலிபர் தனது அந்தரங்க உறுப்பை காட்டி … Read more

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்: `டீ தண்ணி குடிக்க 1 கி.மீ போக வேண்டியிருக்கு'- உணவகம் இயக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், புது நத்தம் சாலையில் அமைந்துள்ளது, கலைஞர் நூற்றாண்டு நூலகம். வாசகர்கள் படிப்பதற்காகக் கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதலமைச்சரால் நிறுவப்பட்டது. அனைத்து விதமான தொழில்நுட்பத்துடன் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது இந்நூலகம். 2.7 ஏக்கர் பரப்பளவில் 3.62 லட்சம் நூல்கள், ஆறு தளங்களைக் கொண்டு மிகவும் பிரமாண்டமாக வாசகர்களுக்கு ஏற்ப அனைத்து விதமான வசதிகளும் இந்நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனித்தனியே பிரிவுகள் வைக்கப்பட்டு, … Read more