வினேஷ் போகத் 140 கோடி மக்களின் இதயங்களில் சாம்பியனாக இருக்கிறார் – ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு 140 கோடி மக்களின் … Read more

இந்திய தூதரக ஊழியர்களை வங்கதேசத்திலிருந்து திரும்ப மத்திய அரசு உத்தரவு

டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 % இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலா் மாயமாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இதைக் கண்டித்து பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா மற்றும் அவரின் அரசுக்கு எதிராக ‘மாணவா் … Read more

8.8.2024 – விசேஷமான நாளா? அதிர்ஷ்டத்தை அள்ளித்தருமா Lion's Gate Portal? நமது ஜோதிடம் சொல்வது என்ன?

இன்று 8-ம் தேதி. 2024 ம் ஆண்டு. இந்த நாளை லயன் கேட் ஓப்பனிங் நாள் (Lion’s Gate Portal) என்றும் இந்த நாளில் காலை 8 மணி 8 நிமிடம் அல்லது மாலை 8 மணி 8 நிமிடத்துக்கு 8 (infinity) போல பூஜை அறையில் வரைந்துவைத்து தெய்வத்தை வழிபட வேண்டும் என்றும், அவ்வாறு வழிபட்டால் நம் மனதின் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்றும், காரணம் சூரியன் அந்த நாளில் சிம்ம ராசிக்குள் பிரவேசிக்க அதற்கான … Read more

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மகன் நமல் போட்டி

கொழும்பு அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டியிடுகிறார்.   கடந்த 2022 ஆம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவியில் இருந்து அகற்றிய மக்கள் எழுச்சிக்குப் பின்னர், இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், கடுமையான போட்டியுடன் நான்கு முனைப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, சமகி ஜன பலவேகய … Read more

தோழி பிறந்தநாளுக்கு ஐபோன் கிஃப்ட்… அம்மாவுக்கு அதிர்ச்சி கொடுத்த 9-ம் வகுப்பு மாணவனின் செயல்!

டெல்லியில் 9-ம் வகுப்பு மாணவன், தனது தோழியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காகவும், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ஆப்பிள் ஐபோன் வாங்கித் தருவதற்காகவும் வீட்டில் தனது அம்மாவின் தங்க நகைகளைத் திருடி விற்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட சிறுவனின் தாயார், தனது வீட்டிலிருந்த நகைகளை யாரோ திருடிவிட்டதாக ஆகஸ்ட் மூன்றாம் தேதி போலீஸில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில் புகார்தாரரின் வீட்டிலிருந்து … Read more

இங்கிலாந்து கலவரம் : வலதுசாரிகளின் வன்முறை தொடர்வதை அடுத்து எம்.பி.க்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தல்…

இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் கடந்த வாரம் 3 சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. சிறுமிகளை கொலை செய்த நபர் குறித்து சமூக வலைதளத்தில் வெளியான வதந்தியை அடுத்து இனக்கலவரமாக பரவியது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வேல்ஸில் பிறந்த 17 வயது ஆக்செல் ருடகுபனா என தெரியவந்தது. அவரது பெற்றோர் ருவாண்டா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இதனால் கலவரக்காரர்கள் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தவர்களை தாக்கத் … Read more

சோதனை ஓட்டத்தில் புதிய ஹோண்டா அமேஸ் அறிமுகம் எப்பொழுது.?

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் செடான் மாடல் ஆனது புதுப்பிக்கப்பட்ட மாடலாக வருகின்ற ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது உள்ள மாடலின் வசதிகளில் கூடுதலான இன்டீரியர் அம்சங்கள் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த மாடலானது ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற ஹூண்டாய் ஆரா மற்றும் புதிதாக வரவுள்ள 2024 மாருதி சுசூகி டிசையர் போன்ற மாடல்களுக்கு கடும் சவாலினை … Read more

வங்கதேச கலவரம்… ஷேக் ஹசீனா கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்பு!

வங்கதேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 33 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதன் பின்னணியில் ஷேக் ஹசீனா அரசுக்கெதிராக தேசிய அளவில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தைத் தடுக்க ஷேக் ஹசீனா அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஒரு கட்டத்தில் மாணவர்கள் போராட்டம் கலவரமாக வெடித்தது. வங்கதேசம் – கலவரம் – ஷேக் ஹசீனா இதில் கொத்து கொத்தாக மாணவர்கள் உயிரிழந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் போராட்டம் தொடர்ந்தது. அதையடுத்து, விடுதலைப் போராட்ட வீரர்களின் … Read more

ஒலிம்பிக் கமிட்டி கோகோ கோலாவுடனான தனது உறவுகளைத் துண்டிக்க வேண்டும்… சுகாதார நிபுணர்கள் கருத்து…

தொற்றுநோயைத் தூண்டும் மோசமான ஆரோக்கியமற்ற தயாரிப்புகளை ஸ்பான்சர்ஷிப் மூலம் உலகெங்கும் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் கோகோ கோலா நிறுவனத்துடனான உறவை ஒலிம்பிக் கமிட்டி துண்டிக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC)ன் தலைவர் தாமஸ் பாக், “உலகெங்கும் ஆரோகியமான சமூகத்தை உருவாக்க விளையாட்டுத் துறையினர் தயாராக இருப்பதாக” கூறியுள்ளார். ஆனால் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் கோகோ கோலாவுடனான உறவு அவரது இந்த பேச்சுக்கு மாறாக உள்ளது என்று சர்வதேச … Read more