பல நோய்களுக்கு செயற்கை உரமே காரணம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

போபால், மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய காலத்தில் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக ரசாயன உரங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், விவசாயிகளின் வருமானம் குறையாது. மாறாக, அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் தூய்மையானதாக இருக்கும். இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, தண்ணீர் பயன்பாட்டையும் குறைக்கும். மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும். நாடு முழுவதும் … Read more

கோவை இடிகரை ஸ்ரீரங்கநாதர் கோயில்: நோய் தீர்க்கும் சடாரி; வரம் தரும் சத்தியநாராயண பூஜை!

பெருமாள் ஸ்ரீரங்கநாதராக சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஸ்ரீராமாநுஜர் வழிபட்ட தலங்கள் என்றால் மிகவும் சிறப்பினை உடையன. அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் இடிகரை. ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டுப் பல இடங்களுக்கும் பயணம் செய்தபோது பல புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தார். மேலும் பல கோயில்களைப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டு வந்தார். அந்தத் தலங்களில் நித்ய ஆராதனை நடைபெறவும் ஏற்பாடுகள் செய்தார். அவ்வாறு ஸ்ரீராமாநுஜர் தங்கியிருந்து வழிபட்ட திருத்தலங்களில் ஒன்றுதான் இடிகரை. கோவை மாவட்டம், … Read more

தாய்லாந்து-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை தகர்ப்புக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி, தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் எல்லையில் கம்போடியா பகுதியில் இருந்த 29 அடி உயர விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவம் இடித்து அகற்றியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:- தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு இந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். … Read more

பாலியல் புகார் கூறி ரூ.10 கோடி பணம் பறிக்க முயற்சி – 2 பெண்கள் கைது

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் கோயல். இவரது மகன் ரித்தம். கடந்த நவம்பர் 5-ந்தேதி ரித்தமுக்கும், யஷஷ்வி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 14-ந்தேதி, அம்போலி பகுதியில் உள்ள ஓட்டலில் ரித்தம் தனது நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். விருந்து முடிந்த பிறகு ரித்தம், யஷஷ்வி, அவரது தம்பி ஆகியோர் ஓட்டலில் உள்ள லிப்ட்டில் தரைத்தளத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த லிப்டில் மற்றொரு பெண் ஏறினார். திடீரென … Read more

சினிமா, ஹோட்டல், டூர் எல்லாவற்றுக்கும் கடன், ‘இம்சை’யை இனிமையாக நினைத்து ஏமாறும் ‘இ.எம்.ஐ தலைமுறை’!

இன்றைய தலைமுறையினரின் பண மேலாண்மை, முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக மாறிவருகிறது. முன்பெல்லாம் கடன் என்றாலே பத்தடி தள்ளி நிற்பார்கள். அப்படியே கடன் வாங்கினாலும் அது முக்கியமான, அவசரத் தேவைகளுக்கானதாகவே இருக்கும். இன்றோ, கடன் என்பது, பலரின் வாழ்க்கைமுறையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர், கடனை வசதியான வாழ்க்கைக்கான தீர்வாகவே பார்க்கத் தொடங்கியுள்ளனர். ‘வேலைக்குச் சேர்ந்ததுமே தனிநபர் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலான கடன்கள் வாழ்க்கைமுறை செலவுகளுக்காகவே வாங்கப்படுகின்றன’ என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தப் … Read more

ஒடிசாவில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை; பயங்கரவாத எதிர்ப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல் – அமித்ஷா

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் சக்காபட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் குறிப்பாக 69 வயதான முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் கணேஷ் உய்கே என்பவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1.1 … Read more

2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு – பிரதமர் மோடி

புதுடெல்லி, குஜராத் மாநிலம் ஜுனகத்தில் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:- இந்தப் போட்டியில் பங்கேற்ற சில வீரர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் உற்சாகம், மன உறுதி, ஆர்வம் ஆகியவற்றில் இந்தியாவின் வலிமையின் ஒரு சிறு பார்வையை என்னால் காண முடிந்தது. வீரர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அதே நம்பிக்கையை ஊட்டுகிறது. அதனால்தான், ஸ்டார்ட்-அப்கள், விண்வெளி, அறிவியல், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் இளைஞர்கள் தங்கள் … Read more

விக்டோரியா பொது அரங்கத்தினை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்! ஆனால்…?

சென்னை: சென்னையில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை பொதுமக்கள் நாளை முதல் (டிசம்பர் 26) பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் இதுகுறித்து முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் விக்டோரியா பப்ளிக் ஹால் என்பதை தேர்வு செய்து கட்டணமின்றி முன்பதிவு செய்து பார்வையிடலாம். காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பார்வையிடலாம். விக்டோரியா அரங்கை பாா்வையிட … Read more

“தவறான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் நடைமுறைகள்” : ராஜாஜியின் பார்வையில் தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் ராஜாஜி இந்திய ஜனநாயகத்தை அதிகாரத்தின் மேடையாக அல்ல, மனச்சாட்சியின் வெளிப்பாடாகவே பார்த்தவர். பலர் ஆட்சியைப் பற்றியும், வெற்றியைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த காலத்தில், அவர் தேர்தல் என்ற அமைப்பை பற்றி ஆழமாக சிந்தித்தார். தேர்தல் என்பது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; … Read more