திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13.5 கோடி லட்டுகள் விற்று புதிய சாதனை

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ‘லட்டு’ உலக பிரசித்தி பெற்றதாகும். லட்டு பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கோவிலில் 2024-ம் ஆண்டு 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025-ம் ஆண்டு 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் … Read more

"ஜீ தமிழின் பதிலைப் பொறுத்தே அடுத்த மூவ்" – தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புக் கோரும் டிவி நடிகர் சங்கம்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டி ஜீ தமிழ் சேனலுக்குக் கடிதம் தந்துள்ளது சின்னத்திரை நடிகர் சங்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் 100 சதவிகித வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த பரத் தலைமையிலான அணி தேர்தலின்போதே இது தொடர்பான ஒரு வாக்குறுதியைத் தந்திருந்தது. தற்போது ஜீ தமிழ் சேனலுக்குச் சங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பி, இது தொடர்பாகப் பேச நேரம் … Read more

குவியும் பக்தர்கள்: சபரிமலையில் 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம்

சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சபரிமலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். … Read more

நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

புதுடெல்லி, மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா தலைமை நீதிபதியாக ரேவதி பிரசாந்த் மோகித் டேரே மற்றும் பாட்னா தலைமை நீதிபதியாக சங்கம் குமார் சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். மேகலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி பிரசாந்த் மோகித் டேரோ மும்பை ஐகோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். அதேபோல, சங்கம் குமார் சாஹூ ஒடிசா நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். மேகாலயா தலைமை நீதிபதியாக … Read more

தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூல்

ஐதராபாத், தெலுங்கானாவில் மதுபான விற்பனை 2025 டிசம்பரில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் அங்கு மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூலாகியுள்ளது. இது வழக்கமான மாதாந்திர சராசரியை விட மிக அதிகமாகும். ஆண்டு இறுதி மற்றும் பண்டிகைக் கால விடுமுறையையொட்டி மதுபான விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று, மதுபான விற்பனை ரூ.352 கோடியைத் தொட்டது. டிசம்பர் 30 அன்று பதிவான ரூ.375 கோடியுடன் சேர்த்து, … Read more

சென்னையில் ஏர் டாக்ஸி சேவை எப்போது?

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை  நடைமுறைக்கு வர உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் Air Taxi சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்  அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ககும் வகையில், ஏர் டாக்ஸி சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி நிறுவனத்தைச் சார்ந்த இபிளான் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்தியாவில் மக்கள் பெருக்கம் மற்றும் வாகனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சாலைகளில்  ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள காரணமாக … Read more

தமிழகத்தில் முதன் முறையாக சோலார் படகு சேவை தொடக்கம்! திமுகஅரசு அசத்தல்….

சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக சூரிய ஒளி சக்தியால் இயங்கும் சோலார் மின் படகுகள் சேவையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்த படகு சேவை  கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ள  பிரபலமான  அலையாத்தி காடுகளைக்கொண்ட  பிச்சாவரம் படகு சவாரி இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம். இங்குள்ள  அலையாத்தி காடுகள் வழியாக இயக்கப்படும்   படகு சேவை பெரும் பிரபலமானது.  இங்குள்ள அலையர்த்தி காடுகள்,  இரண்டாவது பெரிய அலையாத்தி காடுகள் என … Read more

2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம்!!

டெல்லி: 2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில்  முதன்முறையாக  தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டு குடியரசு தின விழாவில், முதன்முறையாக,  விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள், தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு வலிமை … Read more