நோயாளிகள் இனி பயனாளர்கள்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவ பயனாளிகள் அல்லது மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் இனி ‘நோயாளி’ இல்லை: ‘மருத்துவப் பயனாளிகள்’ என்று அழைக்கப்படுவர்  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக,   அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு உயர் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த  தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  முதலமைச்சர் மு.க. … Read more

`ஓட்டு கேட்டு வராதீங்க'-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்பு – நடந்தது என்ன?

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 8-ஆவது வார்டில் நந்தவனத்தோட்டம் என்ற பகுதி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் மாவட்ட அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிளக்ஸில், 40 ஆண்டுகளாக நந்தவனத்தோட்டம் பகுதியில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்கு கேட்டு வந்தபோது, அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்வதற்கு கூட இப்பகுதிக்கு வரவில்லை. ஆகவே, மீண்டும் … Read more

PIN மறந்துவிட்டீர்களா? பிரச்சனை இல்லை — முகம் & கைரேகை மூலம் UPI பணப்பரிமாற்றம்!

இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் (NPCI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சேர்ந்து, பயோமெட்ரிக் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் அடிப்படையிலான UPI அங்கீகார முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இது குறித்த அறிவிப்பை நேற்று மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025ல் NPCI மற்றும் RBI வெளியிட்டது. இந்த புதிய நடைமுறை மூலம் இனி, முக அங்கீகாரம் அல்லது கைரேகை (Fingerprint) மூலம் UPIல் … Read more

மும்பை: பாலத்தின் தடுப்பை உடைத்து கடலுக்குள் பாய்ந்த கார்; குடிபோதையில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையையொட்டி கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கடலில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்தக் கடல் பாலத்தில் பதிவாலா (29) என்பவர் தனது காரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். ஆனால் திடீரென கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு மேம்பாலத்தின் தடுப்பையும் உடைத்துக்கொண்டு கடலுக்குள் சென்றது. கடற்பகுதி மணற்பாங்கான இடமாக இருந்தது. கார் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்தது. காருக்குள் இருந்த பதிவாலா காரில் … Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் விழுப்புரத்தில் இன்று  2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேங்மேன்களை கள  உதவியாளர்களாக மாற்றக் கோரி  மாநிலம் முழுவதும் 12 மையங்களில் காத்திருப்பு போராட்டத்தை மின்வாரிய ஊழியர்கள்  தொடங்கி உள்ளனர். விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் இரண்டாவது நாளாக இன்று (அக்.8) காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு … Read more

''கன்னட திரைத்துறையில் எனக்கு தடையா?'' – நடிகை ரஷ்மிகா மந்தனாவின் 'பளிச்' பதில்

தெலுங்கு திரையுலகின் இயக்குநர் ஆதித்யா சர்போத்தார் இயக்கும் படம் தாமா. இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா – நடிகை ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் நடந்துவருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ‘நுவ்வு நா சொந்தமா’ பாடல் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கிடையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு நடிகை ரஷ்மிகா பேட்டியளித்திருக்கிறார். அதில், “ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: அத்தியாயம் … Read more

தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள்! அன்புமணி காடடம்

சென்னை; 7வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்ற குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள்பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள் என உச்சநீதிமன்ற தீர்ப்பை  பாமக தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  சம்பவமான போரூர் அருகே  7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட  குற்றவாளி தஷ்வந்த்-ஐ உச்சநீதிமன்றம்  விடுதலை செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் … Read more

பீகார் தேர்தல்: நீக்கப்பட்ட 3.6 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள்.. தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

புதுடெல்லி, பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 6, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ந்தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதையொட்டி அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்தது. அப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை 7 கோடியே 89 லட்சத்தில் இருந்து 7 … Read more

Bihar Election: நிதிஷ் தக்க வைப்பாரா? தேஜஸ்வி ஆட்சியைப் பிடிப்பாரா? பரபரக்கும் பீகார் தேர்தல் களம்

முடிந்த காங்கிரஸ் ஆதிக்கம்.. தொடங்கிய லாலுவின் எழுச்சி! பீகார் மாநிலத்திற்கான முதல் சட்டமன்றத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போது முதல் 1990 வரை காங்கிரஸ் கட்சியே அந்த மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. 1967-ல் காங்கிரஸ் தலைமையிலும், எம்.எல்.ஏ-க்களும் ஆதிக்க சாதியினரே அதிகம் இருப்பதாகவும், மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கோரிக்கைகளை காங்கிரஸ் பூர்த்தி செய்யவில்லை எனச் சர்ச்சை வெடித்தது. இதை ஜனதா தளம் கட்சியிலிருந்த லாலு பிரசாத் யாதவ் மிகவும் கச்சிதமாகப் … Read more

தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக நாகமலைக் குன்று காடுகள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை:  தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாகும். ஏற்கனவே மதுரை அரிட்டாபட்டி, திண்டுக்கல் காசம்பட்டி வீரா கோவில், ஈரோடு எலத்தூர் ஏரி பல்லுயிர் தலமாக உள்ளன.  இதைத்தொடர்ந்து, 32.28 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நாகமலை குன்று நாலாவது  பல்லுயிர் பராம்பரிய … Read more