பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்.. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டும்- மத்திய அரசு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை மனுதாரரரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கிய தலைவருமான அக்பர் லோன், கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாகிஸ்தான் வாழ்க என முழக்கம் எழுப்பியதாகவும், அதற்காக இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. … Read more

வாழ்த்துங்களேன்…

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! வாழ்த்துங்களேன் அன்பார்ந்த வாசகர்களே! உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, … Read more

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது!

சென்னை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதகளை நாளை வழங்கப்படுகிறது. 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் … Read more

புதுச்சேரி முதல்-மந்திரியிடம் ஆசி பெற்ற நடிகர் யோகிபாபு

புதுச்சேரி, புதுச்சேரி அரியாங்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் நடிகர் யோகிபாபு கலந்து கொண்டார். பின்னர் அவர், சட்டசபைக்கு சென்று முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்தார். அப்போது யோகிபாபுவிடம் நலம் விசாரித்த ரங்கசாமி, “சொந்த ஊர் சென்னைதானா?” என கேட்டார். அதற்கு யோகிபாபு, “பூர்விகம் ஆற்காடு. பிறந்தது சென்னை. தந்தை ராணுவத்தில் வேலை பார்த்தவர். நானும் ஆசைப்பட்டு ராணுவத்துக்கு சென்று ஓராண்டில் திரும்பி விட்டேன்” என்று குறிப்பிட்டார். தற்போது என்ன படம் நடிக்கிறீர்கள்? என்ன படம் … Read more

Udhayanidhi: “இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்களா?" – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

“ஒழித்துக் கட்டுவேன் என்கின்ற அந்த சொல், இந்து மதத்தின்மீதும், பண்பாட்டின்மீதும் நம்பிக்கை வைத்திருக்கிற மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டித்திருக்கிறார். ஆர்.பி.உதயகுமார் சென்னையில் த.மு.எ.க.ச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையாகியிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள், உதயநிதியின் பேச்சைக் கண்டித்து வருகிறார்கள். டெல்லி காவல் நிலையத்தில் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் … Read more

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்… அனிருத்துக்கு போர்ஷே கார் பரிசளித்த கலாநிதி மாறன்…

விக்ரம், பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய வசூல் சாதனையை முறியடித்து 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம். இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தை ஊக்கப்படுத்தும் விதமாக பெரிய தொகைக்கு செக் ஒன்றும் பி.எம்.டபுள்யூ காரையும் பரிசளித்தார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். அதேபோல் இயக்குனர் நெல்சனுக்கும் ஊக்கத்தொகையும் போர்ஷே கார் ஒன்றையும் பரிசளித்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு போர்ஷே கார் … Read more

அமலாக்கத்துறை சோதனை : ரூ.2.32 கோடி பறிமுதல் | Enforcement Directorate raid: Rs 2.32 crore seized

புதுடில்லி :ராஜஸ்தானில், ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை செயல்படுத்துவதில் நடந்த முறைகேடு தொடர்பாக, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளில், 2.32 கோடி ரூபாய் ரொக்கம், தங்கக் கட்டிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. நம் நாட்டில் உள்ள கிராமங்களில், அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகிக்கும் வகையில், மத்திய அரசின் நீர்வளத் துறை, ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில், இந்தத் … Read more

அனைவரையும் சமமாக பார்க்காத எந்த மதமும் மதம் அல்ல; அது நோய்தான் – கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே

பெங்களூரு, அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி தனது விமர்சனத்தை முன்வைத்தார். சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. சனாதன கொள்கை பற்றி பேசியதற்காக தன் மீது வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன். எனது … Read more

”சனாதனம் குறித்த கருத்தில் உதயநிதி யார் மனதையும் புண்படுத்தவில்லை!” – அமைச்சர் அன்பில் மகேஸ்

“சனாதனத்தில் சில கோட்பாடுகள் வைத்திருக்கின்றனர். சம தர்மமோ, சம நீதியோ இல்லாதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிர்ப்பாகத்தான் உதயநிதி கருத்து தெரிவித்திருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை” என தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். அன்பில் மகேஸ் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ, மகளிர் சுய உதவிக்குழு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் … Read more

பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் தலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை  வழங்கினார். மேலும்,  பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகளையும் முதல்வர் வழங்கினார். உழவர் நலத்துறை சார்பில் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு ரூ.35 கோடியில் 3907 பவர்டில்லர்கள், … Read more