தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா… மீண்டும் உலக அரங்கில் ஜொலித்த இந்தியாவின் வைர ஈட்டி!

ஹங்கேரி தலைநகரமான புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம், உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார் நீரஜ் சோப்ரா. தகுதிச்சுற்றின் முடிவில் முதலிடத்திலிருந்தது நீரஜ்தான். அந்த இடத்தை இறுதிச்சுற்றிலும் அவர் விட்டுத்தருவதாக இல்லை. எப்போதும் தனது முதல் இரண்டு … Read more

உலகநாயகன் கமலஹாசனுக்கு முகவரி தந்த தயாரிப்பாளர் அருண் வீரப்பன் காலமானார்…

ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மருமகனும் ஃகியூப் டெக்னாலஜிஸ் (Qube Technologies) நிறுவனத்தின் தலைவருமான அருண் வீரப்பன் நேற்று மாலை காலமானார். 90 வயதான அருண் வீரப்பன் வயது மூப்பின் காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை மரணமடைந்தார். ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பு நிர்வாகியாக பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ள இவர் … Read more

அமித்ஷா தலைமையில் இன்று குஜராத்தில் மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம்.. 3 மாநில முதல்வர்களும் பங்கேற்பு

காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று குஜராத் மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களையும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் 26வது கவுன்சில் Source Link

பட்டியலினத்தை சேர்ந்த 4 பேரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து சித்ரவதை – நடந்தது என்ன?!

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் ஹரேகாவ் என்ற கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 4 இளைஞர்களை மரத்தில் தலைகீழாக கட்டி தொடங்க விட்டு அடித்து சித்ரவதை செய்வது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. இந்த வீடியோ குறித்து தெரிய வந்தவுடன் போலீஸார் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் 6 பேர் சேர்ந்து ஆடு மற்றும் புறாக்களை திருடியதாக குற்றம் சாட்டி பட்டியலினத்தை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 4 இளைஞர்களை மரத்தில் தலைகீழாக கட்டி … Read more

சென்னை தினக்  கொண்டாட்டத்தில் குதிரை வண்டி சவாரியை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை சென்னை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் குதிரை வண்டி சவாரியை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் சென்னை தினத்தைக் கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குதிரை வண்டி சவாரியினை … Read more

புழல் சிறையில் துணை ஜெயிலரை தாக்கிய நைஜீரிய கைதி

சென்னை சென்னை புழல் சிறையில் துணை ஜெயிலரை ஒரு நைஜீரிய கைதி தாக்கி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இசுபா அகஸ்டின் என்ற நபர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அகஸ்டினிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகள், இயர் பட்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இசுபா அகஸ்டின் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். துணை ஜெயிலர் சாந்தகுமார் சிறைக்குள் ரோந்து சென்ற … Read more

ரூ.9.5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்| Smuggled gold worth Rs.9.5 crore seized

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் விஜயவாடா: ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த வாகனச் சோதனையின்போது, 9.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆந்திராவின் போலபள்ளி சுங்கச்சாவடி பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், நம் அண்டை நாடான இலங்கை, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. World Athletics Championship 2023 ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்றிரவு நடைபெற்ற WAC-2023 இறுதிச் சுற்றில் 84.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். WAC போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்ற சாதனையையும் நீரஜ் … Read more

இளையராஜா காலில் விழுந்து ஆசிபெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்

சென்னை இந்த ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் சென்ற வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் ‘புஷ்பா’ படத்தில் நடித்த நடிகர் அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இந்த … Read more