இன்று வாஜ்பாய் நினைவு தினம் : பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை

டில்லி இன்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் என்பதால் அவர் நினைவிடத்தில் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாகத் தனது 93 வயதில் காலமானார். அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே டில்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இன்று  அவரது நினைவிடத்தில் … Read more

மைசூரு தசரா போட்டி சுற்றுலா துறை அறிவிப்பு| Mysore Dussehra Contest Tourism Department Notification

மைசூரு: உலக பிரசித்தி பெற்ற, தசரா திருவிழா நெருங்கும் நிலையில், கர்நாடக சுற்றுலாத் துறை, ‘பிராண்டிங் மைசூரு’ போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது: நான்கு கட்டங்களாக, போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில், முதல் பரிசு 30,000 ரூபாய், இரண்டாம் பரிசு 10,000, மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் வழங்கப்படும். சிறப்பு போட்டிக்கு பெயரை பதிவு செய்து கொள்ள, ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 4 வரை … Read more

தஞ்சாவூர்: மகள் காதலுக்கு எதிர்ப்பு; காதலனை கொன்ற கூலிப்படை – தந்தை, மகன், மகள் உட்பட 8 பேர் கைது!

தஞ்சாவூர் அருகே மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை, மகளை காதலித்த இளைஞரை கூலிப்படையை ஏவி கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள் உள்பட எட்டு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட காதலன் சக்திவேல் தஞ்சாவூர் அருகே உள்ள திருமலைசமுத்திரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (23). சொந்தமாக லோடு ஆட்டோ வைத்திருந்த இவர் … Read more

இன்று முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை பயணம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ராமநாதபுரம் சுற்றுப்பயணத்துக்காக இன்று மதுரை செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும்  ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  எனவே அவர் இன்று  மாலை சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை செல்கிறார்  அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை முனிச்சாலை பகுதிக்கு வருகிறார். அங்கே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ரிங்ரோடு … Read more

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற கவர்னர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு| Governor Thavarchand Khelat calls to make India a developed country

பெங்களூரு : ”நாட்டுக்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால், சுதந்திர நுாற்றாண்டில் பொற்காலம் அமையும்,” என, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசினார். சுதந்திர தின விழாவை ஒட்டி, பெங்களூரில் உள்ள ராஜ்பவனில், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று தேசியக்கொடி ஏற்றினார். அவர் ஆற்றிய உரை: கர்நாடகா ஒரு முற்போக்கான மாநிலமாகும். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்காக, ஐந்து வாக்குறுதி திட்டங்களை அரசு வகுத்துள்ளது. இதில், ‘கிரஹ ஜோதி, அன்ன பாக்யா, கிரஹ லட்சுமி’ அரசு … Read more

நீதியை நிலைநாட்டுவோம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி| Chief Justice assured that justice will be done

புதுடில்லி : ”எந்தவொரு வழக்காக இருந்தாலும், அதில் நீதியை நிலைநாட்டும் நோக்கத்துடனேயே நீதிபதிகள் செயலாற்ற வேண்டும்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, புதுடில்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: எந்தவொரு வழக்காக இருந்தாலும், அதன் முடிவு எப்படி … Read more

ஜனாதிபதியின் சுதந்திர தின தேநீர் விருந்து..கலந்து கொண்ட பிரதமர் மோடி..!

புதுடெல்லி, இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது . டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோட்டை கொத்தளத்தில் 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிலையில் நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு … Read more

லிப்ட் கேட்டே பயணிக்கும் பிரான்ஸ் இளைஞர்; 7 மாதங்களில் 14 நாடுகளை சுற்றி வந்து சாதனை| A French youth who travels by asking for a lift has reached 14 countries in 7 months and is a record

மைசூரு:போக்குவரத்துக்கு ஒரு பைசா கூட செலவழிக்காமல், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஏழு மாதங்களாக, 14 நாடுகளை சுற்றி வந்துள்ளார். அனைத்து இடங்களிலும், ‘லிப்ட்’ கேட்டே சுற்றுப்பயணம் செய்து, சாதனை படைத்து வருகிறார். பொதுவாக, நகரில் ஓரிடத்தில் இருந்து சில கி.மீ., துாரம் பயணிக்கவும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்லவும், வாகனங்களில், ‘லிப்ட்’ கேட்டு செல்வோரை பார்த்திருக்கிறோம். ஆனால், மேற்கு ஐரோப்பிய நாடான பிரான்சின், 23 வயதான மெக்கானிக்கல் இன்ஜினியர் லுாகாஸ் வென்னார், … Read more

பொது கழிவறை திட்டத்தின் முன்னோடியும், சமூக ஆர்வலருமான பிந்தேஷ்வர் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி, நாட்டில் பொது கழிவறை திட்டத்தின் முன்னோடியாக கருத்தப்படுபவர் பிந்தேஷ்வர் பதக் (வயது 80). சமூக ஆர்வலரான இவர் 1970ம் ஆண்டு தொண்டு நிறுவனத்தை தொடங்கி பொது கழிவறை கட்டுவதை ஊக்கப்படுத்தி வந்தார். மேலும், திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதற்கு எதிரானவும், மனிதக்கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பிந்தேஷ்வர் பதக்கின் திட்டத்தால் அவரின் தொண்டு நிறுவனம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமான கழிவறைகள் … Read more