தங்கையின் லிவ்-இன் பார்ட்னரைக் கொன்று, உடலை ஆற்றில் வீசிய சகோதரன்! – மும்பையில் அதிர்ச்சி

மும்பை, கல்யான் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் ஷேக். இவரது சகோதரி டிட்வாலா என்ற இடத்தைச் சேர்ந்த சபாஷ் ஷேக் (25) என்ற வாலிபருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இதன் மூலம் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருந்தது. ஈஸ்வர் ஷேக் தனது சகோதரி சபாஷ் ஷேக்குடன் உறவில் இருப்பதை விரும்பவில்லை. அதோடு சபாஷ் ஷேக்கும் அவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்த பெண்ணும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வது வழக்கம். இந்நிலையில் திடீரென சபாஷ் ஷேக் அவரது வீட்டிற்கு இரண்டு … Read more

பதிவு கட்டணம் உயர்வு : அடுக்குமாடிக் குடியிருப்புகள் விலை அதிகரிப்பு

சென்னை பதிவு கட்டணம் உயர்ந்துள்ளதால் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.  இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு ரூ.50 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கும் நிலையில் விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் எனத் தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினால் போதுமானதாக … Read more

சந்திரயான்-3 எடுத்த ‘நிலா’ வீடியோ! நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழையும்போதே வேலையே காட்டிருக்கே!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 3 புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. Source Link

Moon video taken by Chandrayaan 3 spacecraft : ISRO release | சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் காணொளி : இஸ்ரோ வெளியீடு

பெங்களூரு: சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் காணொளி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நேற்று (05 ம் தேதி) நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள உயர் தொழில் நுட்ப கேமரா மூலம் எடுத்த காணொளியை இன்று (06ம் தேதி) இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பெங்களூரு: சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் காணொளி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.நிலவின் தென் துருவத்தை … Read more

"திமுக உட்கட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றால், கனிமொழிதான் தலைவர்..!" – அண்ணாமலை

`என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்ணாமலை மதுரை நகருக்குள் தனது பாதயாத்திரையின்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “அமித் ஷா சொன்னது என்னவென புரிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியாது. நம்முடைய தாய் மொழியில் எல்லா கல்வியும் மாற வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார். ஐந்தாவது தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர் மோடி என்றால் … Read more

மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : ஒருவர் கைது

மும்பை மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து மும்பை புறநகர் ரெயிலில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார். காவல்துறையினர் உடனடியாக அந்த மொபைல் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். அந்த அழைப்பு மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  காவல்துறையினர் அங்கு சென்று மிரட்டல் விடுத்த நபரைக் … Read more

Cross Border Marriages Online | ஆன்லைனில் எல்லை தாண்டும் திருமணங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோத்பூர்: சமீப காலங்களில் இந்தியா -பாக்., இடையே எல்லை தாண்டிய திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரு நாடுகளிடையே ஆன்லைனில் திருமணம் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் காதல் கொண்ட உ.பி., மாநிலத்தை சேர்ந்த சச்சின் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இடையே நடந்த எல்லை கடந்த திருமணம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணான அஞ்சு முறையான … Read more

`அண்ணாமலையின் பாதயாத்திரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை!' – மாணிக்கம் தாகூர் எம்.பி தாக்கு

நாடு முழுவதும் 508 ரயில்வே நிலையங்கள் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன. அதன்படி தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 18 ரயில் நிலையங்களில் இன்று அம்ரித் பாரத் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக விருதுநகர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 7.73 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு … Read more

ராகுல் காந்தியிடம் மத்திய அரசு பயப்படுகிறது. : சஞ்சய் ராவத்

டில்லி ராகுல் காந்தியிடம் மத்திய அரசு பயப்படுவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததையடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர்.பதவி பறிக்கப்பட்டது. கடந்த 4-ந் தேதி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. எனவே காங்கிரஸ் மற்றும் கூட்டணி தலைவர்கள் ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து நாடாளுமன்ற உறுப்பினர். பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி  … Read more

Who will win the upcoming 12th Wrestling Federation elections? | வரும் 12 -ல் நடைபெறும் மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் வெல்லப்போவது யார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி வரும் 12 ம் தேதி நடைபெறும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் வெல்லப்போது யார் என்ற பரபரப்பு ஆரம்பாகி உள்ளது. பா.ஜ.,எம்.பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருபவர் பிரிஜ் பூஷன் சிங். இவர் 12 ஆண்டுகளாக தொடர்ந்து மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார் மேலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் … Read more