ஆளும் கட்சி எம்எல்ஏவை ஆவேசமாக சிறைபிடித்த மக்கள்.. ஆம்பூரே அரண்டு போச்சு.. நடுரோட்டில் பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆளும்கட்சி எம்எல்ஏ பொது மக்களால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து உள்ளது பாப்பனப்பல்லி ஊராட்சி.. இங்கு ஆறு மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த மக்கள் இன்று பொங்கி எழுந்தனர். Source Link

காங்கோ தூதராக மதன்லால் ராய்கர் நியமனம்| Appointment of Madan Lal Roykar as Ambassador to the Congo

புதுடில்லி: காங்கோ நாட்டிற்கான தூதராக மதன் லால் ராய்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புதுடில்லி: காங்கோ நாட்டிற்கான தூதராக மதன் லால் ராய்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

`இந்து மதத்தைத் தவிர, அனைத்து மதங்களும் சம்மதம் என்கிறார்கள்..!' – திமுக-வினரைச் சாடும் அண்ணாமலை

`சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சனாதன தர்மம் குறித்து அவதூறாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அண்ணாமலை அதில், “சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என புதிய விளக்கம் கொடுத்து சமாளிக்க … Read more

சனாதனத்துக்கு எதிராகப் பேசினால் நாக்கை பிடுங்குவோம்,  : மத்திய அமைச்சர் மிரட்டல்

டில்லி மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவ்த் சனாதனத்துக்கு எதிராகப் பேசினால் நாக்கை பிடுங்குவோம் எனக் கூறி உள்ளார்.   சில நாட்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகையில் ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களைப் போல ஒழிக்க வேண்டும்’ என்று பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவிக்கப்பட்டன.  உத்தர பிரதேசத்தில் சாமியார் ஒருவர் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் தலையைக் … Read more

தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு; உறவினரை வெட்டிக் கொன்ற நபர் கைது!

தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலைசெய்யப்பட்டவரின் உறவினரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரின் மகன் மகேந்திரன் (வயது 40), ஒர்க் ஷாப் வைத்து நடத்திவருகிறார். மகேந்திரனின் மனைவி பெயர் மகாலட்சுமி. இனாம்ரெட்டியாப்பட்டியில், அந்தோணிசாமிக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டம் தொடர்பான வேலைகளை மகாலட்சுமியும், அந்தோணிசாமியும் கவனித்து வருகின்றனர். இவர்களின் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (34). உறவினர்களான அந்தோணிசாமியும், … Read more

12 ஆம் வகுப்பு பாடத்தில் சனாதன தர்ம ஆதரவு கருத்துக்கள்

சென்னை தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதன தர்மத்துக்கு ஆதரவாகக் கருத்துக்கள் இடப்பட்டுள்ளன, தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்  சனாதன தர்மத்திற்கு எதிராகப் பேசியது நாடு முழுவதும் விவாதத்தை உண்டாக்கி உள்ளது. அவர் சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். அவரை இந்து அமைப்பினரும், பாஜகவினரும்  தொடர்ந்து விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சை நியாயப்படுத்துவதுடன், சனாதனத்தை … Read more

தொடரும் சிறைவாசம்.. \"ஹவுஸ் அரஸ்ட்\" கேட்ட சந்திரபாபு நாயுடுவின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்

அமராவதி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனக்கு ஜாமீன் கோரி ஒரு மனுவும் வீட்டுக்காவலில் வைக்க கோரி ஒரு மனுவும் என இரண்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்த நிலையில், வீட்டுக்காவல் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, அங்கு Source Link

தமிழகத்திற்கு காவிரியில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர்: கர்நாடகாவிற்கு பரிந்துரை| 5 thousand cubic feet of Cauvery water for Tamil Nadu: Cauvery Management Committee Recommendation for Karnataka

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: காவிரியில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. டெல்டா சாகுபடிக்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என தமிழகம் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனக்கூறி கர்நாடகா மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காவிரி … Read more