மேலும் பல ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய தயாராகும், சேல்ஸ் ஃபோர்ஸ்  அமேசான் நிறுவனங்கள்…. ஊழியர்கள் கலக்கம்

வாஷிங்டன்: உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிவிட்டர் மற்றும் மெட்டா, அமேஷான் உள்பட பல  முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே கிட்டத்தட்ட 1லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்த … Read more

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டு 12% விபத்துகள் குறைப்பு: ஆணையர் கபில் குமார்

சென்னை: சென்னையில் கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டு 12% விபத்துகள் மற்றும் மரணங்கள் குறைந்துள்ளது என சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையின் தீவிர நடவடிக்கையினால், 10% வழக்குகள் பதிவு அதிகமாகியுள்ளது.

ரூ.36,00,000 முறைகேடு; தணிக்கையின்போது அதிர்ச்சி – முன்னாள் வங்கி அதிகாரி சிக்கியதன் பின்னணி என்ன?

சென்னை தி.நகர் ஜி.என் செட்டி ரோடு பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக சுகுமார் (50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2019-ம் ஆண்டில் வங்கியில் தணிக்கை செய்தபோது வங்கியின் மனித வள நிர்வாக மேலாளராகப் பணியாற்றிய ஆனந்தராஜ் மற்றும் சிலர் முறைகேடு செய்ததைக் கண்டுபிடித்தார். பின்னர் இது குறித்து சுகுமார், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். … Read more

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்…

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என சுவிஸ் புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது. தாலிபான்களின் கடினமான கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற விரும்புகிறார்கள் அந்நாட்டு மக்கள் பலர். அதிகரிக்கும் ஆப்கன் புகலிடக்கோரிக்கைகள் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுவிட்சர்லாந்தில் அளிக்கப்பட்ட 3.568 புகலிடக்கோரிக்கைகளில் 1,266 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களால் அளிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருபவர்களில் பெரும்பான்மையோர் இளம் ஆண்கள். ஆண்களைவிட அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பெண்கள் அதிகம் வருவதில்லை. அதற்குக் காரணம், தங்கள் … Read more

பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா சந்திப்பு…

டெல்லி: பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார்.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்ய நாதெள்ளா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.   இந்த சந்திப்பு குறித்து சத்ய நாதெல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , பிரதமருடனான தனது சந்திப்பை … Read more

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

மும்பை: 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. சென்ற ஆண்டை போல் இந்தாண்டும் இரு அணிகள் மீண்டும் நேருக்கு நேர் மோத உள்ளதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தங்கபாலு விளக்குவாரா?| speech, interview, statement

தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேச்சு: மத்திய பா.ஜ., அரசு, இனம், மொழி, பாகுபாடுடன் மக்களை பிரித்து வைக்கிறது. இச்சூழலில் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி, காங்., முன்னாள் தலைவர் ராகுல், 110 நாட்களை தாண்டி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராகுலால் மட்டுமே நாட்டின் ஒற்றுமையை காப்பாற்றி, ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தங்கபாலு விளக்குவாரா? தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார் பேட்டி: பிரதமர் மோடி, வரும் லோக்சபா தேர்தலில், … Read more

உ.பி: டூ வீலர் மீது மோதிய கார்; 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த உணவு டெலிவரி ஊழியர்!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவின் மைன்புரியில் வசிக்கும் கவுஷல் யாதவ் என்பவர், உணவு டெலிவரி நிறுவனமொன்றில் டெலிவரி பார்ட்னராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இவர் புத்தாண்டு அன்று இரவு ஒரு மணியளவில் நொய்டாவின் செக்டார் 14 மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, கவுஷலின் பைக் மீது அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியிருக்கிறது. உணவு டெல்வரி இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய பிறகு, விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு அவர் … Read more

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு லொட்டரியில் அடித்துள்ள அதிர்ஷ்டம்…

கனடாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சேர்ந்து வாங்கிய லொட்டரியில் அரை மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளதால் அவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் பரிசு ஒன்ராறியோவில் வாழும் ஒரே குடும்பத்தினரான Siobhan Quinlan, Barbara Quinlan, David Quinlan, Andrea Merrick, David Merrick மற்றும் Shannon Steele ஆகியோர் சேர்ந்து அந்த லொட்டரிச்சீட்டை வாங்கியுள்ளார்கள். தற்போது அவர்களுக்கு ஆளுக்கு 83,333 டொலர்கள் கிடைத்துள்ளது. இலங்கை பணத்தில் இது சுமார் 2 கோடியே 25 … Read more

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் தகனம் – அமைச்சர் முத்துசாமி, கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு…

ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் மாரடைப்பு காரணமாக நேற்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல் இன்று   ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக,  ஈரோட்டில் உள்ள மின் மயானத்துக்கு திருமகன் ஈவெரா உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில்,  மாநில காங்கிரஸ் தலைவர்  கே.எஸ். அழகிரி, கே.வி. தங்கபாலு, அமைச்சர் சு. முத்துசாமி, ஜோதிமணி எம்.பி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஈரோடு: … Read more