பாஜகவின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி, டெல்லியில் உள்ள தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் பாஜகவின் புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும் மத்திய மந்திரியுமான ஜெ.பி. நட்டா, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, டெ ல்லி பாஜக தலைவர்கள் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட், பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ஹர்ஷ் மல்ஹோத்ரா, கமல்ஜீத் செஹ்ராவத், யோகேந்தர் சந்தோலியா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் … Read more

மராட்டியம் கனமழைக்கு 11 பேர் பலி; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

புனே, மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதில், மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கார் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பும் என தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நகரங்களிலும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மராட்டியத்தில் கனமழைக்கு 11 … Read more

போலி நகையை அடகு வைத்து மோசடி: தலைமறைவாக இருந்த பெண் 3 ஆண்டுக்கு பிறகு கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செறுவன்னூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா (வயது 38). இவர் கடந்த 2022-ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 226 கிராம் நகையை அடகு வைத்து ரூ.9 லட்சம் பணம் பெற்றார். பின்னர் நிதி நிறுவன ஊழியர்கள் தணிக்கை செய்த போது, வர்ஷா அடகு வைத்தது போலி நகை என்பதும், ரூ.9 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுப்பற்றி நிதி நிறுவனத்தினர் வர்ஷாவிடம் கேட்டு உள்ளனர். இதையடுத்து அவர் … Read more

விழுப்புரம்: `கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியும், போலீஸும்தான் காரணம்!’ – தவெக நிர்வாகி தற்கொலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட விற்பட்டு கிராமத்தின் த.வெ.க செயலாளராக இருந்த ஐயப்பன், இன்று மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய ஐயப்பனை மீட்ட உறவினர்கள், அவரை மருத்துமனைக்கு தூக்கிச் சென்றனர். … Read more

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமனம்!

சென்னை:  கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமனம்  செய்யப்பட்டு உள்ளார். அதன்படி, ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக  நியமிக்கப்பட்டு உள்ளது. கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம், ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார், இன்று காலை முதல் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  கடந்த 27.09.2025 … Read more

அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை

புதுடெல்லி, அக்டோபர் மாதம் நாடு முழுவதும் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் வரவுள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர்5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதுதவிர, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபரில் மட்டும் 15 நாட்களுக்கும் மேல் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முக்கிய விடுமுறைகளின் விவரம் வருமாறு:- … Read more

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு; தவெக மாவட்டச் செயலாளர் கைது; போலீஸார் விசாரணை!

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைப் பொறுத்தவரை ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையும், இன்னொருபக்கம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் ஆணையத்தின் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட … Read more

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் பலி: ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை

கரூர்: நடிகர் விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில்  சிக்கி 41 பேர் பலியானது குறித்து அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதி, மருத்துவமனை என பல பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடமும், பொதுமக்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெததீசன் நேற்று முதல்நாளாக, கரூர் சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் விசாரணை நடத்திய நிலையில்,  41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு … Read more