தலைப்பு செய்திகள்
மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – இறுதியில் தர்மமே வெல்லும்! ஆதவ் அர்ஜுனா
சென்னை: மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜூனா”கரூரில் ஏற்பட்ட இழப்பையும், வலியையும் சராசரி மனிதனாக கடந்து செல்லும் மனநிலையில் நான் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 27 அன்று கரூர் … Read more
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம்! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஏற்கனவே தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளது. மத்தியஅரசு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அதுபோல பாஜக தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் அதிமுக உள்பட சில கட்சிகள் நிவாரணம் வழங்க யோசித்து … Read more
Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?
Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத் தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்து வந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்குமாறும் சொல்கிறார். இது உண்மையா? பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தம் சுண்டிப்போகுமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் ‘இல்லை’ என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்லப்படுவதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன. … Read more
ஹோண்டா CB350c விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள் – Honda CB350c on-road price and specs
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய CB350C மோட்டார்சைக்கிளில் இரு விதமான வேரியண்டின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், விலை விபரம் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Honda CB350C சிபி350 வரிசையில் இந்நிறுவனம் மூன்று மோட்டார்சைக்கிள்களை கொண்டு வெவ்வேறு விதமான சிறிய டிசைன் மாற்றங்களை பெற்று பொதுவாக ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளும் நிலையில், மிக கடுமையான போட்டியாளரான ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 சந்தையில் அமோக வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. CB350 என்ஜின் … Read more
காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? – நிபுணர் விளக்கம்
காலை முதல் இரவுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. பல் துலக்குவது தொடங்கி இரவில் உறங்கச் செல்வதுவரை ஒவ்வொன்றுக்கும் சில வரையறைகள் உள்ளன. அவற்றை மீறாமல் அந்தச் செயல்களைச் செய்தால் ஆரோக்கியம் மேம்படும். எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும். விளக்குகிறார் பொது மருத்துவர் சிவராமக் கண்ணன். எதை, எப்போது செய்ய வேண்டும்? காலை 7:00 குறைந்தது 15 நிமிடங்கள் உடல்மீது வெயில்படுமாறு நிற்க வேண்டும். இது நம் உடலியக்கக் கடிகாரத்தைச் சரியாக … Read more
சத்தீஷ்கார்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப்படையினர் அதிரடி
ராய்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் ஒடிசா மாநில எல்லையில் உள்ள சிந்த்காடக் கிராமத்துக்கு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் … Read more
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
திஸ்பூர், அசாமின் உடல்குரி பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 10.37 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.73 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.29 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. அசாமில் அடிக்கடி … Read more