உ.பி., கூட்டு பலாத்கார விவகாரம் பொய் புகார் என போலீஸ் விளக்கம்| Dinamalar

புதுடில்லி, உத்தர பிரதேசத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண், பொய் புகார் அளித்து நாடகம் ஆடுவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். உத்தர பிரதேசம் காஜியாபாத் ஆஷ்ரம் சாலை ஓரத்தில் சாக்கு மூட்டையில் ஒரு பெண் மயங்கிய நிலையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சென்று அந்தப் பெண்ணை மீட்டு, முதலுதவிக்குப் பின், புதுடில்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சித்ரவதை புதுடில்லியில் வசிக்கும் 36 வயதான அந்தப் பெண் சமீபத்தில், உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் வசிக்கும் சகோதரர் … Read more

'அரசியல், பொருளாதார சிக்கல்' – திணறும் பிரிட்டன் அரசு!

பிரிட்டன் பிரதமராகக் கடந்த 2019-ம் ஆண்டு முதல் போரிஸ் ஜான்சன் இருந்து வந்தார். ஆரம்பக் காலத்தில், முந்தைய பிரிட்டன் பிரதமர்களான கேவிட் கேமரூன், தேசரா மே ஆகியோரால் செய்ய முடியாத சில விஷயங்களை, போரிஸ் ஜான்சன் செய்து விட்டதாக அவரின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இதனால் தொடக்கத்தில் அவருக்கு மக்கள் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. போரிஸ் ஜான்சன் நாளடைவில் அவரின் ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாகக் கொரோனா உச்சத்திலிருந்த சமயத்தில் பிரிட்டனில் ‘லாக்டெளன்’ அறிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை சார்வி

இந்தோனேசியா: இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்களை வென்று வென்றுள்ளார். இதுமட்டுமின்றி சர்வதேச செஸ் கூட்டமைப்பின் சிறப்பு பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.

ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 பதக்கங்களை வென்று அசத்திய இந்திய சிறுமி

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்களை பெற்று இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார் அசத்தியுள்ளார். மேலும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு பட்டத்தையும் சிறுமி சார்வி அனில்குமார் பெற்றுள்ளார்.

சிறுமி தற்கொலை வழக்கு; போலீஸ் ஏட்டுக்கு ஆயுள்: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

சிறுமி தற்கொலை வழக்கு; போலீஸ் ஏட்டுக்கு ஆயுள்: கிரைம் ரவுண்ட் அப் தட்சிண கன்னடா: பணம் கேட்டு தனக்கு தொல்லை கொடுத்ததால், தற்கொலை செய்து கொண்ட சிறுமி வழக்கில், மாவட்ட ஆயுதப்படை பிரிவு ஏட்டுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, ‘போக்சோ’ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தட்சிண கன்னடா, மங்களூரு பாஜ்பே சித்தார்த்தா நகரை சேர்ந்தர் பிரவீன் சலியன், 35. மாவட்ட ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். 2015ல், முகநுாலில் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நீண்ட … Read more

இந்தித் திணிப்பு விவகாரம்: தொடரும் அண்ணாமலை Vs திமுக

தமிழ்நாட்டில், இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வும், போராட்டங்களும் நீண்டகாலமாக இருந்துவருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது, இந்தித் திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை தமிழக மாணவர்கள் நடத்தினர். அதன் பிறகும், இந்தித் திணிப்பு முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அமித் ஷா காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமல்லாமல், பா.ஜ.க ஆட்சியிலும் இந்தித் திணிப்பு முயற்சி தொடர்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழிக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துத் தெரிவிப்பதும், அதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு … Read more

அக்டோபர் 22: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 154-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 154-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,580,916 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,580,916 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 632,320,782 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 611,120,532 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,678 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெறுப்பு பேச்சு வழக்கில் அரசுக்கு கோர்ட் எச்சரிக்கை| Dinamalar

புதுடில்லி :’வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுக்களை ஒடுக்க நடவடிக்கை எடுங்கள், இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு மற்றும் அதனால் ஏற்படும் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக்கோரி, ஷாஹீன் அப்துல்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சுகளில் ஆளுங்கட்சி தலைவர்கள் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டு … Read more

ஒன் பை டூ

கோவை செல்வராஜ், செய்தித் தொடர்பாளர், ஓ.பி.எஸ் அணி “நியாயமான கேள்வி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில், அம்மாவை வாகனத்திலிருந்து கீழே தள்ளிய பிறகு சசிகலா அம்மையாரும், அவரின் குடும்பத்தினரும்தான் அம்மாவைப் பாதுகாத்தனர். அ.தி.மு.க அப்போது ஜெ-ஜா அணிகளாகப் பிரிந்து, தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அம்மாவுக்குத்தான் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவு இருந்தது. அம்மாதான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலையும் ஏற்பட்டது. அதற்குப் பிறகு சசிகலாதான், ஜானகி அம்மையாரை நேரில் சந்தித்துப் பேசினார். … Read more