2 மடங்கு பயணிகள் அதிகம் வருகை – தெற்கு ரயில்வே

சென்னை: பயணிகள் வருகை 2 மடங்கு அதிகரித்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் – பிப்ரவரி 2023 வரை 11 மாத கால கட்டத்தில் 58.26 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் இந்த நிதியாண்டில் இரண்டு மடங்கு அதிகமாக பயணிகள் பயணித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை-‘இரண்டு ஆண்டுகளில், தெற்கு ரயில்வேயில், 70 சதவீத வழித்தடங்களில் மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் என்று தெற்கு … Read more

திசையன்விளை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"உங்களைப் போன்ற மனிதர்கள் உலகிற்குத் தேவை!"- ஹ்ரித்திக் ரோஷன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் சமீபத்தில் இந்தியில் உருவான `விக்ரம் வேதா’ திரைப்படத்தில் சைஃப் அலி கானுடன் இணைந்து நடித்திருந்தார். இதையடுத்து தற்போது தனது அடுத்த படமான ‘Fighter’ திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் கொண்ட ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்திற்கு முன் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். View this post on Instagram … Read more

போர் முடியும்போது உலகம் அழிந்திருக்கும்… டைம் ட்ராவலர் பரபரப்புத் தகவல்

தன்னை 2858ஆம் ஆண்டிலிருந்து வந்துள்ள டைம் ட்ராவலர் என அழைத்துக்கொள்ளும் ஒருவர், 2038இல் உலகம் அழிந்துவிடும் என்று கூறியுள்ளார். ஏலியன்களுடன் போர்  ஏற்கனவே இந்த மாதம் பூமிக்கு ஏலியன்கள் வந்துவிட்டதாக தெரிவித்துள்ள அந்த டைம் ட்ராவலர், 2024ஆம் ஆண்டு, அதாவது, அடுத்த ஆண்டு ஏலியன்களுடனான போர் துவங்கும் என்று கூறியுள்ளார். உலகத்தின் அழிவு எப்போது? உலகத்தின் அழிவு எப்போது நடக்கும், எப்படி நடக்கும் என்பது தனக்குத் தெரியும் என்று கூறியுள்ள அந்த டைம் ட்ராவலர், 2024இல் துவங்கும் … Read more

பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்: பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறிய போது பசுவை கொல்பவர்கள் மற்றும் பசுவை கொல்வதை அனுபதிப்பவர்கள் நரகத்தில் சித்திரவதை அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தனர். மேலும் நாட்டில் பசுவதையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பசுவை பாதுகாக்கப்பட்ட விலங்காகவும், தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் … Read more

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து பாட்னாவுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்

கோவை: ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து பாட்னாவுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது. கோவையிலிருந்து நாளை இரவு 8.45க்கு புறப்படும்சிறப்பு ரயில் 7ஆம்தேதி காலை 7மணிக்கு பாட்னா சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா வழியே பாட்னா சென்றடையும்.

சென்னை: தங்க வளையல் திருட்டு; அம்மா, மகன் கைது – பர்தா அணிந்து வந்தும் சிக்கவைத்த செல்போன் சிக்னல்

சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஜாம்பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இரண்டு பெண்கள் பர்தா அணிந்து வந்தனர். புதிய டிசைன்களைக் கேட்ட அந்தப் பெண்கள், அதைப் பார்த்திருக்கின்றனர். ஆனால் டிசைன்கள் பிடிக்கவில்லை என்று கூறி விட்டு அவர்கள் இருவரும் சென்றுவிட்டனர். இதையடுத்து அந்தப் பெண்கள் சென்ற பிறகு ஒன்றரை சவரன் தங்க வளையல் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து நகைக்கடை ஊழியர் மகேஷ் என்பவர், உரிமையாளர் … Read more

மன்னருக்கான அந்தஸ்து வேண்டும்… சார்லஸ் மன்னருக்கு விடாமல் குடைச்சல் தரும் இளவரசர் ஆண்ட்ரூ

விண்ட்சர் மாளிகையில் இருந்து வெளியேற இளவரசர் ஆண்ட்ரூவுக்கு கூறப்பட்டுள்ள நிலையில், தமக்கு மன்னருக்கான அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையுடன் சார்லஸ் மன்னரை அவர் தொந்தரவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்னருக்கான அந்தஸ்து பிரித்தானிய ராஜ குடும்பத்தில் நிதிச்சுமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கும் ஆண்டு உதவித்தொகையை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது அரண்மனை. @getty அதன் ஒரு பகுதியாக தற்போது 30 படுக்கையறை கொண்ட விண்ட்சர் மாளிகையில் இருந்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற்றப்பட இருக்கிறார். ஆனால், … Read more

முதல்வரின் தென்மாவட்ட பயணத்தை ஒட்டி அவர் செல்லும் வழித்தடங்களில் மார்ச் 6, 7-ல் ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: முதலமைச்சரின் தென்மாவட்ட பயணத்தை ஒட்டி அவர் செல்லும் வழித்தடங்களில் மார்ச் 6, 7-ல் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் 6-ம் தேதி மதுரையிலிருந்து நெல்லைக்கும், 7-ம் தேதி நெல்லையிலிருந்து மதுரைக்கும் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்கிறார்.

டெல்லி: “சிபிஐ அதிகாரிகள் மனரீதியாக துன்புறுத்துகிறார்கள்" – மணீஷ் சிசோடியா

டெல்லி ஆம் ஆத்மி அரசின் துணை முதல்வரான மணீஷ் சிசோடியாவை, மதுபானக்கொள்கையில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். சி.பி.ஐ தரப்பில் சிசோடியாமீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. சி.பி.ஐ-யின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மியும் பிற எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க-வைச் சாடிவருகின்றன. மணீஷ் சிசோடியா இத்தகைய சூழலில் மணீஷ் சிசோடியா, தன்மீதான வழக்கு பதிவை ரத்து செய்யக் கோரியும், சி.பி.ஐ காவலிலிருந்து ஜாமீன் வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், … Read more