தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக வதந்தி பரப்புகிறது! தேஜஸ்வியாதவ்…

பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாவதாக பாஜக போலியாக வதந்தி பரப்புகிறது என பீகார் துணைமுதல்வர் தேஜ;ஸ்வியாதவ் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவன பணிகளில்  வடமாநித்தவர்களே பணியாற்றி வருகின்றனர். அவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பல வன்முறை, திருட்டு போட்ட முறைகேடுகளும் அதிகரித்து வருகிற்து. இதையடுத்து, மாநிலத்தில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், தமிழனின் பணியை ஆக்கிரமித்து வரும் … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று செயல்படும் என அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி இன்று பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

தீவிர இதயத்துடிப்பால் அவதிப்பட்ட நோயாளி; சென்னை மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை!

சென்னையில், இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) பிரச்னை இருந்த 42 வயது நோயாளிக்கு, இதய மின் உடலியங்கியல் இடையீட்டு செயல்முறை சிகிச்சையை, சென்னை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டு, அவரை காப்பாற்றி இருக்கிறது. இதயத்தின் கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) என்பது, இதயத் துடிப்பின்மை எனவும் அறியப்படுகிறது. இதயத்தின் கீழறைகளின் மின்சார சார்ட் சர்கியூட்களில் தோன்றும் இது, அதிவேகமாகக் கடத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு படபடப்பு, தலைச்சுற்றல், வலிப்பு போன்ற தாக்கங்கள் வழக்கமாக ஏற்படுகின்றன. சில … Read more

பொலிஸார் 79 பேரை பணயக் கைதிகளாக சிறைபிடிப்பு: கலவரத்தில் முடிந்த பழங்குடி மக்கள் போராட்டம்

கொலம்பியாவில் சாலை விதிகளை மேம்படுத்தி தர கோரி பொலிஸார் 79 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சாலை வசதிகள் கோரி போராட்டம் கொலம்பியாவின் கக்கெட்டாவில் உள்ள பழங்குடி மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளையும், சாலைகளையும் மேம்படுத்தி தர வேண்டும் என்று அங்குள்ள எண்ணெய் மற்றும் சுரங்க நிறுவனங்களிடம் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினர். சீன நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறுகள் செல்லும் சாலையில் பழங்குடி மக்கள் தங்கள் போராட்டத்தை நிகழ்த்தினர். 79 … Read more

உலகளவில் 68.04 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.03 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.32 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,803,746 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.03 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,803,746 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,486,975 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,290,195 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,608 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெருப்போடு விளையாடும் மத்திய அரசாங்கம்!

மீண்டும் ஒருமுறை நெருப்போடு விளையாடியிருக்கிறது மத்திய அரசாங்கம். ஆம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை ஒரு தவணையில் ரூ.50 வரை உயர்த்தியதன்மூலம் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,168.50-ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி விலையேற்றியதன்மூலம் பொருளாதாரத்தின் வறிய நிலையில் இருக்கும் சாதாரண மக்களை மத்திய அரசாங்கம் வாட்டி வதைக்கத் துணிந்திருக்கிறது.சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 100% உயர்ந்திருக்கிறது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சிலிண்டரின் விலை … Read more

மார்ச்-04: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 287வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஆங்கில கால்வாயில் பயணித்த படகில் தீ விபத்து: விரைந்த பிரித்தானிய உயிர்காக்கும் படகுகள்

பிரித்தானியாவின் ஆங்கில கால்வாயை பயணிகள் படகு ஒன்று கடந்து கொண்டு இருக்கும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. படகில் பற்றிய தீ டோவரில் இருந்து கலேஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஐல் ஆஃப் இன்னிஸ்ஃப்ரீ (Isle of Innisfree) என்ற படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. படகு கால்வாயின் பாதி தூரத்தில் இருந்த போது இன்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. The Isle of Innisfree/Sky News இந்த சம்பவத்தின் போது படகில் 94 பயணிகள் மற்றும் … Read more

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் காலமானார்! முதல்வர் இரங்கல்

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மறைமலைநகர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானார். பிரபல புகைப்பட கலைஞர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் ஜேக்கப்(37) சிறந்த புகைப்பட கலைஞராக பார்க்கப்பட்டார், இவரது பெரும்பாலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் பலவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் க்ளவுட் கிட்சன் மற்றும் What a Karwad என்ற … Read more