மொட்டை அடித்து, கைகள் மற்றும் கால்களைச் சேர்த்துக் கட்டிய நிலையில் கைதிகள்! மாபெரும் சிறைச்சாலை திறப்பு

எல் சால்வடார் என்ற நாட்டில் மிகப் பிரமாண்டமான சிறையைத் திறந்ததோடு அதில் 40 ஆயிரம் கைதிகளை அடைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. அதிக அளவில் குற்றம் மத்திய அமெரிக்க நாடுகளிலே மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடாக எல் சால்வடார் என்ற நாடு பார்க்கப்படுகிறது. இந்த நாட்டின் மக்கள் தொகை கிட்டதட்ட 6.9 மில்லியன் ஆகும். இதனிடையே இந்த நாட்டில் அதிக அளவில் குற்றங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி கேங் வார் நடக்கும் இந்த நாட்டில் கொலை … Read more

இந்தியாவில் வேலையிழப்பு ஏற்பட்டால் 25% பேரால் சம்பளமில்லாமல் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாது : ஆய்வில் தகவல்

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த சில மாதங்களில் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இதில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் இதுபோன்று திடீர் வேலையிழப்பு ஏற்பட்டால் சாமானியர்களின் நிதி நிலைமை என்னவாக இருக்கும் என்று பினோலஜி வென்சர்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 59176 ரூபாய் சராசரி மாத வருமானமுள்ள 3 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் வேலையிழப்பு … Read more

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்..!!

டெல்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகிறார். டெல்லியில் மார்ச் 1, 2ம் தேதிகளில் நடைபெறும் ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் சீனா பங்கேற்கிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் கேங் மார்ச் 2ம் தேதி டெல்லி வருகிறார். 2019ல் இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்ட பிறகு சீனாவின் உயர் மட்ட தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவில் 1300 ஆண்டுகள் பழமையான புத்த தூபி கண்டுபிடிப்பு!

1300 ஆண்டுகள் பழமையான புத்த தூபி ஒடிசாவின் ஜாஜ்பூரில் உள்ள கோண்டலைட் கல் சுரங்க தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சுரங்க தளத்தில், பௌமகரா வம்சத்தின் 1300 ஆண்டுகள் பழமையான புத்த தூபியை இந்திய தொல்லியல் துறை (ASI) கண்டுபிடித்துள்ளது. 4.5 மீட்டர் உயரமுள்ள இந்த தூபி ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சுகுவாபாடா குக்கிராமத்தில் உள்ள பரபாடியில் உள்ள கண்டோலைட் சுரங்க தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. Photo Credit: BISWARAN கண்டுபிடிக்கப்பட்ட … Read more

ரூ.1,300 கோடி சொத்து வரியை வசூல் செய்த சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னை  மாநகராட்சி பகுதியில்  இதுவரை ரூ.1,300 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சொத்து வரி கட்ட மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், சொத்து வரி, மின்கட்டணம், கழிவுநீர் வரி உள்பட பல வரிகளை உயர்த்தியுள்ளது. சென்னை போன்ற நகர்புறங்களில் சொத்து வரி 50 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் … Read more

சிறுமலர் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: பள்ளிச் சிறுமிகளோடு இணைந்து கேக் வெட்டினார்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறுமலர் பள்ளியில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளிச் சிறுமிகளோடு இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

கோர்ட்டில் டிப் டாப்பாக உலா வந்த `போலி' வக்கீல்; நம்பி ஃபீஸ் கட்டி ஏமாந்த பெண்! – என்ன நடந்தது?

​தேனி மாவட்டம், அரண்மனைபுதூரை​ச்​ சேர்ந்தவர் துர்க்கை அம்மாள்​. இவர் தன்னுடைய தந்தை பாண்டியன், பூர்வீக சொத்தை மகன், மகள்களுக்குத் தெரியாமல் வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தி​​லுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொ​டர முடிவெடுத்திருக்கிறார். இதையடுத்து அவர் நீதிமன்றம் சென்றபோது ​​அங்கிருந்த சக்திவேல் என்பவரிடம், `சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும், யாரைப் பார்ப்பது’ எனக் கேட்டிருக்கிறார். ​ தேனி நீதிமன்றம் வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்து ​​வழக்கறிஞர் போல் இருந்த ​அவர், ​​“நானும் வழக்கறிஞர்தான். … Read more

பழைய ஓய்வூதிய திட்டம்? அனைத்து துறைகளிடமும் அறிக்கை கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, அது தொடர்பாக அனைத்து துறைகளும் அறிக்கை தாக்கல் செய்ய  நிதித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசுசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து துறை … Read more

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.