ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அருகே ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அருகே ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், காரில் பயணம் செய்த பெண் நிகழ்விடத்தில் பலியான நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொச்சி விமான நிலையத்தில் 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் | Gold worth Rs 43 lakh seized at Kochi airport

திருவனந்தப்புரம்: கேரளா கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பயணி ஒருவரிடம் இருந்து, 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 900.25 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர். திருவனந்தப்புரம்: கேரளா கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பயணி ஒருவரிடம் இருந்து, 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 900.25 கிராம் தங்கத்தை புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

“ஆமை புகுந்த வீட்டைப் போல, பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது!" – ப.சிதம்பரம் தாக்கு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு திருநகர் காலனி தபால் அலுவலகம் பகுதியில் நேற்றைய தினம் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான செல்வராஜ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன், தி.மு.க அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தத் … Read more

சிற்பி திட்டத்தில் அரசு பள்ளியை சேர்ந்த 5,000 மாணவர்கள் இயற்கையுடன் இணைந்த கல்வி சுற்றலா சென்ற ரயிலை தொடங்கி வைத்தார் தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை: சிற்பி திட்டத்தில் அரசு பள்ளியை சேர்ந்த 5,000 மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். 5000 மாணவர்கள் ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியகத்திற்கு ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர். இயற்கையுடன் இணைந்த கல்வி சுற்றலா சென்ற ரயிலை தலைமை செயலாளர் இறையன்பு தொடங்கி வைத்தார். 5000 மாணவ, மாணவிகள் 4 சிறப்பு ரயில்களில் சிற்பி திட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் கல்வி சுற்றுலா சென்றனர்.

ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி| 2nd Test against Aussies: India win big

புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 263, இந்தியா 262 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 61/1 ரன் எடுத்திருந்தது. ஹெட் (39), லபுசேன் (16) … Read more

அரசியல் மேடையில் நெஞ்சு வலி;23 நாள்களாக நடந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடிகர் நந்தமுரி தாரக ரத்னா

2002  ஆம் ஆண்டு கோதண்டராமி ரெட்டியின் இயக்கத்தில், ‘ஒகடோ நம்பர் குராடு’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நந்தமுரி தாரக ரத்னா. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்  என்.டி. ராமராவின் பேரனும், சினிமா ஒளிப்பதிவாளர் மோகன கிருஷ்ணாவின் மகனுமான இவர், பல தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு  ஓடிடியில் வெளியான ‘9 ஹவர்ஸ்’ என்ற வெப் சீரிஸில் நடித்த இவர் பலரின் பாராட்டைப் பெற்றிருந்தார்.  நந்தமுரி தாரக ரத்னா இதனிடையே முழுநேர அரசியலில் நுழைய … Read more

'பிறந்ததும் இறந்துவிடும்' குழந்தையின் மரணத்திற்காக காத்திருக்கும் தம்பதி! கருக்கலைப்பு சட்டத்தால் வேதனை

அமெரிக்காவில் புளோரிடாவின் புதிய கருக்கலைப்பு சட்டத்தால், பிறந்தவுடன் இறந்துவிடும் என்று தெரிந்தே குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்க தம்பதி இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் டெபோரா டோர்பர்ட் (Deborah Dorbert) மற்றும் அவரது கணவர் லீ டோர்பர்ட் (Lee Dorbert), தங்கள் குழந்தை Potter syndrome எனும் ஆபத்தான கரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. அனால், உச்சநீதிமன்றத்தால் கருக்கலைப்பு உரிமை ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட புளோரிடா சட்டத்தின் காரணமாக மருத்துவர்களால் இந்த … Read more

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி இளைஞர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி இளைஞர் உயிரிழந்துள்ளார். சிவராத்திரியை ஒட்டி வார்ப்பட்டு கிராமத்தில் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் இளைஞர் சிவா என்பவர் உயிரிழந்துள்ளார். 

“சிவசேனா பெயர், சின்னத்தை வாங்க ரூ.2,000 கோடி கைமாறியிருக்கிறது!" – சஞ்சய் ராவுத் புகார்

மகாராஷ்டிரா சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக முதல்வர் ஷிண்டே தலைமையில் ஓர் அணியும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வந்தது. இதையடுத்து சிவசேனாவின் சின்னத்தை முடக்கிவிட்டு இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உண்மையான சிவசேனாவாக அறிவித்திருக்கிறது. இதனால் உத்தவ் தாக்கரே தன்னுடைய தந்தை உருவாக்கிய சிவசேனாவையும், வில் அம்பு சின்னத்தையும் இழந்திருக்கிறார். தேர்தல் கமிஷன் இந்த விவகாரத்தில் அவசரப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். சஞ்சய் … Read more

நிறைய நாள் உயிரோடு இருக்கணும் என்று ஆசை இல்லை! அன்றே கூறிய நடிகர் மயில்சாமி

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் மயில்சாமி தனக்கு நீண்ட காலம் உயிருடன் இருக்க ஆசை இல்லை என்று கூறியிருந்தார். நல்லவன் வாழ்வான் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, தனது வீட்டிற்கு நல்லவன் வாழ்வான் என்று பெயரிட்டதாகவும், மேடை ஒன்றில் பேசியபோது பலருக்கு உதவி செய்வது தான் தனது ஆசை என்று கூறியிருந்தார். அதேபோல், நிறைய நாள் உயிரோடு இருக்கணும் என்று ஆசை இல்லை.ஆனால் இருக்கும்வரை உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது … Read more