வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.