“பல பிரச்னைகளுக்கு காங்கிரஸ் இன்னும் பலமாகக் குரல் கொடுத்திருக்கலாம்!" – சசி தரூர்

சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது நாளான நேற்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க உள்ளடக்கிய இந்தியாவுக்கு ஆதரவாக, நமது கருத்தியல் நிலைப்பாட்டில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். பல சமயங்களில் நீதியை புறந்தள்ளிவிடாமல் இருப்பது மிகவும் அவசியம். பில்கிஸ் பானோவின் வழக்கு, கிறிஸ்தவ தேவாலயங்கள்மீதான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, முஸ்லிம் வீடுகளை புல்டோசர் வைத்து … Read more

ஹொங்ஹொங்கில் பல துண்டுகளாக மீட்கப்பட்ட மொடல் அழகியின் உடல்., 3 பேர் கைது

ஹொங்ஹொங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள வாடகை வீட்டில் மொடல் அழகியின் உடல் துண்டாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பல துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளுடன், இறைச்சி வெட்டும் இயந்திரம், மின்சார ரம்பம் மற்றும் சில ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. ஹொங்ஹொங் மொடல் அழகி அப்பி சோய் (Abby Choi) ஒரு சர்வதேச மாடலாக இருந்தார் மற்றும் பாரிஸில் நடந்த எலி சாப் ஸ்பிரிங் சம்மர் 2023 ஹாட் கோச்சர் ஷோவில் பங்கேற்று, புகைப்படம் எடுக்கப்பட்டதில் மேலும் பிரபலமானார். … Read more

சென்னையில் ரூ.71.3 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற விமான நிலைய ஊழியர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.71.3 கோடி மதிப்புள்ள 2.6 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற ஊழியரை கைது செய்துள்ளனர். விமான நிலைய ஊழியர் ரமேஷை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பிடித்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒற்றுமை தின போட்டிகளில் 5 லட்சம் பேர் பங்கேற்றது மகிழ்ச்சி: பிரதமர் மோடி மன் கி பாத் உரை

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான மன் கி பாத் வானொலி … Read more

100 ஆண்டுகளுக்கு முன் `பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்' சொன்ன பண ரகசியம்… | பர்சனல் ஃபைனான்ஸ் – 7

உங்கள் சம்பாத்தியத்தில் உங்களுக்கு எத்தனை சதவிகிதம்? இது என்ன வித்தியாசமான கேள்வி என்கிறீர்களா? ஒருவரின் சம்பளத்தில் அல்லது சம்பாத்தியத்தில் அவருக்கு என 10 சதவிகித தொகையை தனியே முதலிலேயே எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதனை ஆங்கிலத்தில், ‘Pay Yourself First 10% Rule’ விதிமுறை என்பார்கள். முதலீடு சம்பாதிக்கும் பணத்தை எப்படி சேமிக்க வேண்டும்? – வழிகாட்டும் ஜப்பானியர்கள்! | பர்சனல் ஃபைனான்ஸ்-6 குறைந்தபட்சம் 10% பணம்..! ‘பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்’ (The Richest Man … Read more

ஜப்பானை 6.1 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கம்!

ஆசிய நடானான ஜப்பானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தின் கோர தாண்டவம் சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இதுவரை 47,000 பேர் நிலநடுக்கங்களினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் உறவினர், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஜப்பானையும் தாக்கிய நிலநடுக்கம் இந்த நிலையில் ஆசிய நாடான ஜப்பானை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் 60 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், வடகிழக்கு ஜப்பான் … Read more

விருதுநகர் சிவகாசி அருகே கண்மாயில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் சிவகாசி அருகே கண்மாயில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிந்துள்ளனர். திருந்தங்கல் பெரியகுளம் கண்மாயில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர்கள் யோசபு, கார்த்திக் உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது பெருமைக்கு உரிய விசயம்: கெஜ்ரிவால்

புதுடெல்லி, டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கும் தொடர்பு உள்ளது என கூறி, அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை … Read more

`பிரச்சனன்னா அம்மாக்கிட்ட சொல்லு; டெல்லியே ஆனாலும் பார்த்துடலாம்' நெகிழ வைத்த போட்டோவும் பின்னணியும்

பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச அளவிலான கால்பந்துத் தொடர் ஒன்று கடந்த வாரம் நேரு மைதானத்தில் நடந்தது. இந்திய பெண்கள் அணியும் நேபாள பெண்கள் அணியும் மோதிய இந்த நட்பு ரீதியிலான தொடரின் இரண்டு போட்டிகளுமே சமனில் முடிந்திருந்தது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நேபாளுக்கு எதிராக ஆடிய இந்திய அணியில் மொத்தம் நான்கு தமிழ் வீராங்கனைகளும் ஆடியிருந்தனர். இந்திய அணியின் கேப்டனே இந்துமதி என்கிற தமிழ்ப் பெண்தான். முதல் போட்டியில் இந்துமதியே ஒரு … Read more

பிரான்ஸில் துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரின் நாக்கை கடித்த பெண்மணி! பின்னர் நடந்த சம்பவம்

பிரான்ஸில் 57 வயது பெண் மீது பாலியல் அத்துமீறல் செய்தவரின் நாக்கை கடித்து, அதனை காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துஷ்பிரயோக முயற்சி தெற்கு பிரான்ஸிலுள்ள மார்சேயில் இருந்து வடக்கே 100 கிமீ தொலைவில் உள்ள எவிக்நோன் என்ற பகுதியில், பெண்கள் தங்களது நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு தனது நாயை 57 வயதான பெண்மணி ஒருவர் நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் அவரை … Read more