சமூக சீர்திருத்தவாதி மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் கொண்டாட்டம்; பிரதமர் பங்கேற்பு

புதுடெல்லி, நாட்டில் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட மற்றும் முக்கிய நபர்களின், அதிலும் அவர்கள் சமூகத்திற்கு பங்காற்றியதற்கு பதிலாக சமூகம் எதுவும் செய்யாமல் விடப்பட்டவர்களை கொண்டாடும் முனைப்பில் அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, 200 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் நிலவிய சமத்துவமற்ற நிலையை எதிர்கொள்ளும் சமூக சீர்திருத்த பணியை மேற்கொள்வதற்காக ஆர்ய சமாஜம் என்ற அமைப்பை தொடங்கியவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி. 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பிறந்த இவர் ஏற்படுத்திய அமைப்பு, நாட்டில் கலாசார … Read more

இந்தியக் குடியுரிமையைத் துறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? – ஓர் அலசல்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியக் குடியுரிமையை கைவிட்டவர்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்திருக்கிறார்.கடந்த ஆண்டு மட்டும் 2,25,620 இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். கடந்த 11 ஆண்டுகளில் 2022-ம் ஆண்டு பதிவாகியிருக்கும் எண்ணிக்கையே மிகவும் அதிகமானது எனத் தெரிவித்திருக்கும் அவர், 2011-ம் ஆண்டு முதல் 2022 வரை 16,00,000-க்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்ததாகக் கூறினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மத்திய … Read more

கோல் கீப்பரிடம் தட்டிப்பறித்து தனியாளாய் கோல் அடித்த வீரர்! தெறிக்கவிட்ட பாயர்ன் முனிச் வீடியோ

பன்டெஸ்லிகா தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாயர்ன் முனிச் 3-0 என்ற கோல் கணக்கில் Vfl போச்சும் அணியை வீழ்த்தியது. தாமஸ் முல்லர் மிரட்டல் Allianz Arena மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், பாயர்ன் முனிச் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 41வது நிமிடத்தில் சீறிப்பாய்ந்த அந்த அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர், பாதி மைதானத்தில் இருந்து தனியாளாக வந்து கோல் கீப்பரிடம் இருந்து பந்தை தட்டிப் பறித்தார். பின்னர் எதிரணி சுதாரிப்பதற்குள் கோல் அடித்தார். … Read more

மகாராஷ்டிராவின் புதிய ஆளுநராக ரமேஷ் பயஸ் நியமனம்

மும்பை: மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் ராஜினாமாவை இந்திய குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு..!

சபரிமலை. மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் (ஜனவரி) 20ம் தேதி சாத்தப்பட்டது. இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் இல்லை. நாளை காலை 5 மணிக்கு … Read more

Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கு ஒருமுறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்?

Doctor Vikatan: என் வயது 59. எத்தனை நாள்களுக்கு ஒரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்? அசைவத்தில் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும்… எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம்? Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். ஸ்ரீமதி வெங்கட்ராமன் வயதைக் குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்கள் உயரம் மற்றும் எடையைக் குறிப்பிடவில்லை. ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு வயிற்றுப் பகுதியைச் சுற்றி (அப்டாமினல் ஒபிசிட்டி) … Read more

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இரண்டாவது நிலையில் உள்ள 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: வீடு புகுந்து வாலிபர் வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமா? – போலீஸ் விசாரணை

ராமநாதபுரம், காட்டு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மகன் பக்கா என்ற பிரபுதேவா (28). இவர்மீது ராமநாதபுரத்திலுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிரபுதேவா இறந்துகிடந்திருக்கிறார். கொலைசெய்யப்பட்ட பிரபுதேவா பிரபுதேவாவின் தாய் நேற்று முன்தினம் இரவு அவர் உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீடு திறந்து கிடந்திருக்கிறது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, … Read more

சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமம்

சென்னை: சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் அதிகாலையில் வாகனத்தை ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு பயணம் செய்கின்றனர். சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது. இன்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு அன்று மதியம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்கு பின்னர் கன.20-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது.