பிரேசிலின் 'மீட்பர் கிறிஸ்து' சிலை மீது தாக்கிய மின்னல்! அதிர்ச்சியில் ஆழ்த்தும் வைரல் படங்கள்

பிரேசிலின் ‘மீட்பர் கிறிஸ்து’ (Christ the Redeemer) சிலை மீது மின்னல் தாக்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. மின்னலால் தாக்கப்பட்ட உலக புகழ்பெற்ற சிலை இயற்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் உங்களை வாயடைத்து வியக்க வைக்கும். அதிர்ஷ்டவசமாக, கேமராக்கள் மற்றும் சமூக ஊடக தளங்களின் இருப்பு, உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், இதுபோன்ற ஒரு வகையான நிகழ்வுகளைப் பார்த்து ரசிக்க உங்களை அனுமதிக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் பிரேசிலில் நடந்தது. மீட்பர் கிறிஸ்து, பிரேசிலில் உள்ள … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு| Earthquake in Assam: 4 on the Richter scale

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கவுகாத்தி: அசாமில் இன்று(பிப்.,12) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. துருக்கி, சிரியா கடந்த சில தினங்களுக்கு முன் உலுக்கியது. இதை தொடர்ந்து இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ள நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று(பிப்.,12) லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் … Read more

மாணவிகள் பாலியல் கொடுமை வழக்கு; மதரசா ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் சிறை விதித்த கேரள நீதிமன்றம்!

கேரளாவில், மாணவிகளை பாலியல் கொடுமை செய்த வழக்கில், மதரசா ஆசிரியருக்கு 169 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 6.4 லட்சம் அபராதம் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பலாத்காரம் | மாதிரிப்படம் கேரளாவின் எர்ணாகுளம் அருகே ஆலுவாவை சேர்ந்தவர் யூசுப், வயது72. இவர், கோட்டயம் மாவட்டம், கடுத்துருத்தியில் மதரசா பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டில், மதரசாவுக்கு வந்த மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, அவர்களை பாலியல் கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது … Read more

மனைவியை காணவில்லை என புகாரளித்த நபர்..விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை

இந்திய மாநிலம் ஜார்கண்டில் மனைவியை கொன்று புதைத்த நபர் கைது செய்யப்பட்டார். மாயமான மனைவி ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ் பரன்வால் என்ற நபர் கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியை காணவில்லை என்று பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடந்தி வந்தனர். இந்த நிலையில் புகார் அளித்த மனிஷ் தன் மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது. மனைவியை கொலை செய்த அந்த நபர், தனது … Read more

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தை அடுத்து ஒசூர் அருகே தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் சோதனை

ஒசூர்: திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தை அடுத்து ஒசூர் அருகே தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் சோதனை தீவிரம் படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருகே 4 இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் சுமார் ரூ.75-லட்சம் கொள்ளை நடந்துள்ளது. பெங்களூரு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனையிட்ட பின்பே அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடையை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்| A herd of wild elephants damaged the shop

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான சொக்கநாடு எஸ்டேட் சவுத் டிவிஷனில் புண்ணியவேலின் மளிகை கடையை காட்டு யானை கூட்டம் உடைத்து ரூ.20 ஆயிரம் மதிப்பில் பொருட்களை சேதப்படுத்தின. அங்கு மளிகை கடை நடத்தி வரும் புண்ணியவேலு கடையுடன் சேர்ந்து உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு வந்த இரண்டு குட்டிகள் உள்பட ஐந்து காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அரிசி, சீனி மூடைகள், … Read more

துருக்கி: "குழந்தைகளுக்குப் பசியோ, குளிரோ ஏற்படக்கூடாது"- சேமிப்பு பணத்தை அனுப்பி நெகிழவைத்த சிறுவன்

துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் திங்களன்று ஒரேநாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று அதிபயங்கர நிலநடுக்கங்கள், துருக்கி, சிரியா மட்டுமின்றி உலக நாடுகளையே அதிரவைத்தன. பெரியவர்கள், கர்ப்பிணிகள், மழலைகள் என கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட அனைவரையும் மீட்கும் பணி ஒருவாரமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுவரையில் மட்டும் சுமார் 28,000 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டிவருகின்றன. துருக்கி நிலநடுக்கம் இந்த நிலையில் கடந்த ஆண்டு துருக்கியில் நிலநடுக்கத்திலிருந்து தப்பிப் பிழைத்த … Read more

மகாராணியால் கௌரவிக்கப்பட்ட இந்தியருக்கு பிரித்தானியாவில் வந்த சோதனை., மக்கள் ஆதரவு

பிரித்தானியாவில் மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியால் கௌரவிக்கப்பட்ட இந்தியர், இப்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ராணியால் கௌரவிக்கப்பட்டவர் பிரித்தானியாவில், கோவிட்-19 தொற்றுநோய்களின்போது 50 குடும்பங்களுக்கு இலவச உணவை வழங்கியதற்காக, மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியால் கௌரவிக்கப்பட்டவர் 42 வயதான விமல் பாண்டியா. சட்டப்பூர்வ விசா போரில் தோல்வியடைந்த அவர், இப்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் நடவடிக்கையை எதிர்கொள்கிறார். Madhyamam பாண்டியாவுக்கு ஆதரவாக முன்வந்த குழு இதைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் … Read more

இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் வீட்டுக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு வீட்டுக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் இல்லமான ஓக்ஓவர் அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த வீட்டில் அதிகாலையில் தீப்பிடித்து எறிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.