106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

சென்னை: நெல்மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில், 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ. 105.08 கோடி மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து,  , … Read more

ஓசூரில் பெயிண்ட் ஆலையில் 50-க்கும் மேற்பட்ட பேரல்கள் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு

கிருஷ்ணகிரி: ஓசூரில் பெயிண்ட் ஆலையில் 50-க்கும் மேற்பட்ட பேரல்கள் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவலப்பள்ளி சாலை பாரதியார் நகரில் தனியார் பெயிண்ட் ஆலையில் 50-க்கும் மேற்பட்ட ஆயில் பேரல்களில் தீ பிடித்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பெயிண்ட் ஆலையில் பேரல்களில் பிடித்த தீயை அணைத்தனர்.

"மாட்டின் அனுமதி வாங்காததால்…!'' – விலங்குகள் நலவாரியத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“ ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிந்து, வெள்ளிக்கிழமைதான் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போதுதான் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எங்களைவிட பலமான கட்சி தி.மு.க என்பதால், அவர்கள் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். கார்த்தி சிதம்பரம் என் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் … Read more

ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்திம் அருகே  ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் தேதி புங்கம்பள்ளி கிராமத்தில் மூன்று மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல், ஆம்புலன்சை முந்திக் கொண்டு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல கிலோ மீட்டர் வரை ஆம்புலன்ஸ்-க்கு வழி விடமால் கார் சென்றுள்ளதை அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், அந்த காருக்கு அபாரதம் விதித்தனர். … Read more

துருக்கியில் பிப்.6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவிப்பு

அங்காரா: துருக்கியில் பிப்.6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மாலத்யா நகரில் உள்ள ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் இருந்து இந்தியாவை சேர்ந்த விஜய்குமாரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்த விஜய்குமார், உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயக்குமார் கண்பார்வையை இழந்தால் திமுக அரசாங்கம் பொறுப்பேற்குமா? – சீமான் கேள்வி!

திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஜெயக்குமார் கண்பார்வையை இழந்தால் அதற்கு தி.மு.க அரசு பொறுப்பேற்குமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஜெயக்குமார் , திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். சீமான் அவருக்கு கண்பார்வை குறைபாட்டால் சிகிச்சை செய்யப்பட்டபோது, விரைந்து அதனை முடிக்கக்கோரி உளவுத்துறையினர் நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். அதனால் அவசரகதியில் மருத்துவம் செய்யப்பட்ட … Read more

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் சிக்கி உள்ளனரா? இந்திய தூதர் தகவல்

அங்காரா: துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் சிக்கி உள்ளனரா? என்று இந்திய தூதர் வீரேந்தர் பால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், துருக்கியில் 3000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். நில நடுக்கம் பாதித்த பகுதிகளில் இருந்து பெரும்பாலானவர்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். அவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில், இந்தியர்கள் யாரும் சிக்கி கொண்டிருப்பதாக எந்த தகவலும் வெளியாகவிலை என்று கூறினார்.

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1.50 கோடி வழங்கக் கோரி ஃப்ளோரா மதியாஸகேன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஜி.ஜி.மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2013-ல் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோராவின் கருப்பையில் கட்டி வளர்வதாகக் கூறி அறிவை சிகிச்சை செய்துள்ளனர். 

திரிபுராவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கிறது: எதிர்கட்சிகளை கடுமையாக சாடினார் மோடி| Election campaign heats up in Tripura: PM Modi slams opposition parties

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அகர்தலா: திரிபுராவில் சேர்தல் பிரசாரத்தில் காங்., ., இடதுசாரி உள்ளிட்ட எதிர் கட்சிகளின் ஊழல்களை கடுமையாக சாடி பிரதமர் மோடி பேசினார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் பிப்.,16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில், பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், … Read more