தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்றும், நாடு முழுவதும் இதுவரை 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், 4ஜி சேவை குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில் அளித்தார். அப்போது,  நாட்டில் 93 சதவீதம் கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் … Read more

திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி திடீர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகளின் அறைகளில் போதைப்பொருள், செல்போன் போன்றவை உள்ளதா என ஆய்வு செய்தார். சிறைகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் சிறைவாசிகளிடம் டிஜிபி கேட்டறிந்தார்.   

முதல் டெஸ்ட்: 177 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலிய அணி| First Test: Australia bowled out for 177 runs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. இந்திய சுழல்வீரர் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று (பிப்.,9) நடக்கிறது. ‛டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் ‛பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் … Read more

அண்ணா பல்கலையில் அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்கள் நியமனம்! அன்புமணி ராமதாஸ் கடும் கண்டன்ம்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு முறையாக பணி நியமனம் செய்யாமல், அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. இது  அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அவுட் சோர்சிங் முறைப்படியே பணியாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பணியாளர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகளை கண்டறிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மக்களுக்கு … Read more

சேலம் காட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சேலம்: சேலம் அருகே காட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பிரபல ரவுடி அன்பழகன், கூட்டாளிகள் அஜித்குமார், மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

வரியை திரும்ப பெறணும்: பா.,ஜ., காங்., ஆர்ப்பாட்டம்| Rollback of tax hike in Kerala budget: PA, J, Congress protest

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டயம் ஆட்சியர் அலுவலகம், கணையனூர் தாலுகா அலுவலகம் முன், இன்று(பிப்.,09) பாஜ., மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். … Read more

க்ளாராவின் காதல் பரிசு! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மரமேரி மாத்யூவுக்கு இன்று தேவாலயத் தோப்பில் வேலை. தலையில் கட்டிய முண்டாசும், இடுப்பில் கட்டிய பாளைக் கூடுமாய் தேவாலயத்தின் முன் மண்டபம் கடந்து கொல்லைப்புறம் போகும் மாத்யூவை, தேவாலயத்துக்குப் பிரார்த்தனைக்கு வந்தக் க்ளாரா பார்த்தாள். மாத்யூவின் கண்களும் கலந்தன க்ளாராவோடு. ‘செய்யும் தொழிலே … Read more

ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா?

டெல்லி: பயணிகளின் ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு  ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ரயில் டிக்கெட் முன்புதிவு  ஐஆர்சிடிசி ,இணைதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பலர் வெளி இடங்களுக்கு செல்ல 3 மாதங்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், கடைசி நேர தவிர்க்க முடியாத காரணங்களால் ஏராளமானோர் முன்பதிவுகளை ரத்து செய்கின்றனர். இதற்காக குறிப்பிட்ட அளவு பணம் நமது புக்கிங் … Read more

மதுரை பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார்

மதுரை: மதுரை பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் .பயிற்சி தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ,இந்திய மாணவர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.