மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். டயர் வெடித்து சாலையில் வேன் கவிழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படூர் கிராமத்திலிருந்து சென்னை வேளச்சேரிக்கு திருமணத்துக்காக சென்றபோது வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது

இந்தியாவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து| World leaders congratulate India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரஷ்யா அதிபர், நேபாள பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி ரஷ்ய அதிபர் புடின் குடியரசு தின வாழ்த்துகளை ஏற்று கொள்ளுங்கள். பொருளாதாரம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சாதனை அனைவராலும் அறியப்பட்டது. உலக ஸ்திரத்தன்மைக்கும், பிராந்திய மற்றும் சர்வதேச திட்டங்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கு இந்தியா ஆக்கப்பூர்வமான பணிகளை … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: “விடுதலை பெற்றும் சிறப்பு முகாமில் வதைப்பதா?" – அரசுக்கு சீமான் கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தம்பி ராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி முருகன், தம்பி சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள்கூட இல்லாது, அவதிப்பட்டு வரும் செய்தி பெரும் வேதனையளிக்கிறது. சிறைக்கொட்டடியிலிருந்து விடுதலைபெற்ற அவர்கள், அதனைவிடக் கொடுமையான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு, வதைக்கப்படுவது எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. சீமான் தம்பி ராபர்ட் பயசும், … Read more

கொடிநாள் நிதியை அதிகளவில் திரட்டியதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதிக்கு ஆளுநர் பரிசு

சென்னை: கொடிநாள் நிதியை அதிகளவில் திரட்டியதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதிக்கு குடியரசு தின விழாவை ஒட்டி நடைபெறும் தேநீர் விருந்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசு வழங்கினார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த ஊர்திக்கான முதல் பரிசை தமிழ்நாடு காவல்துறை தட்டிச் சென்றது. தமிழ்நாடு காவல்துறை ஊர்திக்கான பரிசை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

ஆக்ரா: திடீரென இடிந்து விழுந்த 6 வீடுகள்; 4 வயது குழந்தை பலி – அகழ்வாராய்ச்சி பணிகள் காரணமா?

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா ரயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் திலா மைதான பகுதியிலுள்ள தரம்சாலாவில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென அந்தப் பகுதியில் ஆறு வீடுகள் மற்றும் ஒரு கோயில் இடிந்து விழுந்திருக்கின்றன. இடிந்து விழுந்த வீடுகள் இந்தச் சம்பவம் குறித்து இடிந்த வீட்டின் உரிமையாளர்களில் ஒருவரான முகேஷ் சர்மா, “காலை 7.05 மணிக்கு விபத்து நடந்தது. இந்தப் பகுதி மிகவும் மேடானது. எங்கள் வீடுகளுக்கு அடுத்ததாக தரம்சாலா இருக்கிறது. அங்கு அகழ்வாராய்ச்சி … Read more

கே.எல்.ராகுல் திருமணம்! பரிசுத்தொகை எவ்வளவு கோடி தெரியுமா?

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், நடிகை அதியா ஷெட்டி திருமணம் திங்கள்கிழமை மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. கே.எல்.ராகுல் திருமணம்  அதியாவும், ராகுலும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் இருவரும் தங்களது காதலை முறைப்படி வெளியுலகத்துக்கு அறிவித்தனர்.   மும்பையிலிருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் கண்டாலா பகுதியில் உள்ள அதியாவின் தந்தை சுனீல் ஷெட்டிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், அதியா – கே.எல். … Read more

சென்னை தீவுத்திடலில் ராட்டினத்தில் திடீரென பழுது

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் ராட்டினத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. மிகப்பெரிய அளவிலான ராட்டினத்தில் பழுது ஏற்பட்டதை அடுத்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் சேதம் தவிர்க்கபப்ட்டுள்ளது. ராட்டினம் உடனடியாக நிறுத்தப்பட்டு அதில் இருந்தவர்கள் பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.

இந்திய பாக்., எல்லையில் இனிப்பு பரிமாற்றம்| Exchange of Sweets at India-Pak border

அமிர்தசரஸ்: இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அட்டாரி – வாகா எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். இந்திய வங்க தேச எல்லையில் புல்பாரி என்ற இடத்தில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். அமிர்தசரஸ்: இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அட்டாரி – வாகா எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறி … Read more

ஜூடோ ரத்தினம்: ரஜினியின் `பாயும் புலி' படத்தை ஜூடோவுக்காகவே எடுத்தோம் – எஸ்.பி.முத்துராமன்

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ஃபைட் மாஸ்டராக கோலோச்சிய ஜூடோ ரத்தினம் இன்று மாலை காலமானார். தொடர்ந்து 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம். `தாமரைக்குளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘கொஞ்சும் குமரி’ படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகம் ஆனார். அதிலும் ஏ.வி.எம். நிறுவனத்தின் ஆஸ்தான மாஸ்டர். ரஜினி, கமல் என டாப் ஹீரோக்களை ஆக்‌ஷன் ஹீரோக்களாக்கியது இவரின் கைவண்ணம்தான். … Read more

60,000 இலவச இரயில் டிக்கெட்கள்… பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வெளியிடவிருக்கும் ஒரு திட்டம்

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையில் இந்த ஆண்டு கோடையில் பயணிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாக உள்ளது. 60,000 இலவச இரயில் டிக்கெட்கள் ஆம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள், வரும் கோடையில் 60,000 இலவச இரயில் டிக்கெட்களை வழங்க இருக்கின்றன. பயணத்தை ஊக்குவிப்பதற்காகவும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கிடையில் ஒரு கலாச்சாரப் பரிமாற்றத்தை உருவாக்குவதற்காகவும் இந்த திட்டம் வெளியாக உள்ளது. இத்திட்டத்தை பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Clément Beauneம், ஜேர்மன் போக்குவரத்துத்துறை அமைச்சரான … Read more