தசரா, ஆயுத பூஜை, தீபாவளி: செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 20ந்தேதி வரை கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தசரா, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால்,  செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 20ந்தேதி வரை  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நவராத்திரி பண்டிகை, தசரா, சரஸ்வதி பூஜை, தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செப். 22 முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட  இருப்பதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்: … Read more

வாக்கு திருட்டு விசாரணை தொடர்பாக கர்நாடக சிஐடி-க்கு தேர்தல் ஆணையம் தரவுகள் அளிக்கவில்லை; ராகுல் காந்தி

திருவனந்தபுரம், 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது வாக்கு திருட்டு நடைபெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணியின்போது 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதன் மூலம் தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கர்நாடகாவின் … Read more

Dadasaheb Phalke Award: "சினிமாவை சுவாசிக்கும் உண்மையான கலைஞன்" – மோகன்லாலை வாழ்த்திய மம்மூட்டி

இந்திய சினிமா துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு இன்று (செப்டம்பர் 20) அறிவித்திருக்கிறது. தாதாசாகேப் பால்கே: இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம் ராஜா ஹரிச்சந்திரா. 1913-ல் வெளியான மௌன படமான (silent movie) இப்படத்தை இயக்கியவர் தாதாசாகேப் பால்கே என்றறியப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (1870 – 1944). இவரே இந்திய சினிமாவின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். தாதாசாகேப் பால்கே இந்திய … Read more

30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய ஸ்மார்ட் ஐடி கார்டு…

30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய ஸ்மார்ட் ஐடி கார்டுகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலை ஊழியர்கள் என பல லட்சம் ஊழியர்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். மாநிலத்தில் சுமார் 85 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் 35 லட்சம் பேர் வெளிமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான நலத்திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், … Read more

பலவீனமான பிரதமர்: எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அமெரிக்கா, எச்-1பி விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எம்.பியுமான ராகுல் காந்தி, மோடியை சாடியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு, ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்தியாவுக்கு மிகவும் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவையும், தற்போது அமெரிக்காவில் எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தியதன் செய்தியையும் இணைத்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் … Read more

கிங் கோலியின் ஆல் டைம் ரெக்கார்டை தகர்த்த குயின் மந்தனா; ஆஸ்திரேலியாவைப் புரட்டியெடுத்த ஸ்மிருதி!

இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா vs இலங்கை போட்டியுடன் தொடங்கவிருக்கிறது. அதற்கு முன்பாக, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் சொந்த மண்ணில் இந்தியா ஆடி வருகிறது. இந்தத் தொடரானது இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு 40 ஆண்டுகளாக வரலாற்றை மாற்றியமைக்கும் அரிய வாய்ப்பு. அதாவது, 1983 முதல் இதுவரை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட 10 ஒருநாள் தொடரிலும் இந்தியா தோல்வி மட்டுமே அடைந்திருக்கிறது. … Read more

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திமுக அரசும் துரோகம் இழைக்கிறது! கம்யூ. தலைவர் சவுந்தராஜன் குற்றச்சாட்டு

சென்னை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் துரோகம் இழைக்கிறது என சிஐடியு  தலைவர் சவுந்தராஜன் நேரடியாக குற்றம் சாட்டி  உள்ளார். தமிழக அரசின் அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பணி​யாற்​றும் தொழிலா​ளர்​கள் தங்​களின் நியாய​மான கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் ஓய்​வு​பெற்ற தொழிலா​ளர்​களின் பணபலன்​களை வழங்க கோரி​யும் கடந்த 30 நாட்​களாக தமிழகத்​தின் அனைத்து பணிமனை​கள் முன்​பும் காத்​திருப்பு போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.  தமிழ்நாடு அரசு பிற துறை​களுக்கு நிதி ஒதுக்​கு​வது​போல் போக்​கு​வரத்து துறைக்​கும் அரசு நிதி ஒதுக்​க … Read more

ரூ.1,000 கோடியில் சபரிமலை ஐயப்பன் கோவில் சீரமைப்பு: பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம், கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி பம்பையில் இன்று காலை தொடங்கியது. இதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசியதாவது: “காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நாம் சிந்திக்க வேண்டும். 2019ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின்போது, தேவசம்போர்டின் தினசரி செயல்பாடு கூட நெருக்கடியில் இருந்தது. அந்த நேரத்தில், அரசாங்கம், வாரியத்துக்கு ரூ.140 கோடி … Read more

பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்; கடலில் தவறி விழுந்த வாலிபர்… காயம் இன்றி உயிர் தப்பிய அதிசயம்!

மதுரை பரவை பகுதியை சேர்ந்த இளைஞர் வரதராஜன். வங்கி ஊழியரான இவர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நேற்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்துள்ளார். மதுரை பாசஞ்சர் ரயிலில் ராமேசுவரம் வந்த வரதராஜன் இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின்னர் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராடி சுவாமி தாரிசனம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 6.30 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். … Read more

விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட முதல் ‘வந்தே பிரைட்’ சரக்கு ரயில்கள் தயார்

சென்னை: விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட முதல்  ‘வந்தே பிரைட்’  சரக்கு ரயில்கள் இயக்கு வதற்காக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. “வந்தே பிரைட்” என்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற இந்தியாவின் முதல் அரை-அதிவேக இரயிலைக் குறிக்கிறது. இது விமானப் பயணத்திற்கு இணையான வசதிகளுடன், பயண நேரத்தைக் குறைப்பதற்காக இந்திய ரயில்வேயால் தயாரிக்கப்படுகிறது. முதல்கட்டமாக சரக்கு ரயிலுக்காக இரண்டு ரயில்கள், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையான … Read more