ADMK – BJP: `தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமை மாற்றம்?' – அமித் ஷா விசிட்டும் அதிமுக ஆப்சென்ட்டும்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக ஜனவரி 4-ம் தேதி தமிழ்நாடு வந்தார். புதுக்கோட்டையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா’வில் பங்கேற்றுப் பேசியதும், அதையொட்டி நடந்த சம்பவங்களும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்த விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக திருச்சி விமான நிலையம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க, கூட்டணிக் கட்சித் தலைவரான அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி … Read more

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்திக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ-வாகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அப்போது சண்முகசுந்தரம், தனக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் உங்களுடைய மகனுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் … Read more

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு…

மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.  மேலும்,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.  அத்துடன் இந்த விஷயத்தில், மாநில அரசு இந்த அளவிற்கு கீழ் நிலைக்கு செல்லக்கூடாது என்றும் கண்டித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் … Read more

ஜனநாயகன் சென்சார் : `மறு தணிக்கை; நிர்பந்திக்க முடியாது' – நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?

அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நீதிபதி பி.டீ.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, சில காட்சிகளை நீக்கினால் … Read more

மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து! உயர்நீதிமன்றம்..

சென்னை: மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து  செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த செயல் இளம் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் என்றும் சாடியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசுப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் … Read more

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? – வனத்துறை விளக்கம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் டிரோன் கேமிராக்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தெர்மல் டிரோன் எனப்படும் இரவில் உயிரினங்களை அடையாளம் காணும் கேமிராக்கள் மூலம் புலியின் இருப்பிடத்தை கண்டறிந்து கண்காணிக்கத் தொடங்கினர்‌. உயிரிழந்த இளம் ஆண் … Read more

ரூ. 4 லட்சம் கோடி ஊழல்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில்  மூத்த அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.  அப்போது,  திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஊழல் தொடர்பான ஆதாரங்களை அளித்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், , தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read more

60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா!

வேலையின் நிமித்தமாகவும், வணிகத்தின் நிமித்தமாகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்து வருகிறார்கள், தமிழர்கள். ஒவ்வோர் ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அயலகத் தமிழர் மாநாடு இப்படி இடம் பெயர்ந்து செல்லும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை, வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ நடைபெற உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, … Read more