கேரளாவில் பறவைக் காய்ச்சல்: 6,000 பறவைகள் அழிப்பு| Avian flu in Kerala: 6,000 birds killed

திருவனந்தப்புரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன. இதற்கிடையில், கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து உறைந்த கோழிகளை தீவுகளுக்கு கொண்டு செல்வதற்கு லட்சத்தீவு நிர்வாகம் தற்போது தடை விதித்துள்ளது. திருவனந்தப்புரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன. இதற்கிடையில், புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கை; `ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள்'- மாநிலங்களை அறிவுறுத்திய மத்திய அரசு

கொரோனா நோய்த்தொற்று பரவல் தணிந்து உலக அளவில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், கொரோனா முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது உலக மக்களை சற்றே அச்சமடையச் செய்திருக்கிறது. இந்த நிலையில், உலகளாவிய கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, வரும் செவ்வாய்க்கிழமை (27-ம் தேதி) முதல் இந்தியாவிலுள்ள சுகாதார நிலையங்களில் `ஒத்திகைப் பயிற்சிகள்’ (Mock Drills – பேரிடர் காலத்தில் … Read more

செய்யாறு மற்றும் அதன் சற்று வட்டார கிராமங்களில் மிதமான மழை

திருவண்ணாமலை: செய்யாறு மற்றும் அதன் சற்று வட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது அனக்காவூர், வெம்பாக்கம், செங்காடு, மங்கால் கூட்டு சாலை இரும்பந்தாங்கள் ராந்தம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.  

கொரோனா பரவலை தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி: மத்திய அரசு முடிவு| Rehearsal program the day after tomorrow to prevent the spread of Corona: Central Government decision

புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த, நாளை மறுநாள்(டிச.,27) நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா அந்நாட்டில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் புது வகை கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாளை மறுநாள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடை பெரும் என மத்திய சுகாதார துறை … Read more

துலாம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பேதம் இல்லாமல் அனைவரிடமும் ஒரே தன்மையில் பழகும் துலாராசி நேயர்களே… துன்பங்கள் வரும்போதெல்லாம் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்பவர்கள் நீங்கள் தான். அப்படிப்பட்ட உங்களுக்கு வரும் 2023 ஆங்கிலப் புத்தாண்டு எப்படி அமையப் போகிறது என்பதைக் காணலாம். ராசிக்கு 7-ம் வீடான மேஷ ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாக இருக்கிறது. இதுவரை பிரகாசிக்காமல் இருந்த தங்களின் தனித்திறமைகள் தற்போது வெளிப்படும். முகத்தில் … Read more

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ்வில் பயங்கரம்: பலர் காயம் பெண் ஒருவர் பலி

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தன்று பப் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ஈவ்வில் துப்பாக்கி சூடு பிரித்தானியாவின் விர்ரலின்(Wirral) உள்ள வாலேசி (Wallasey)கிராமத்தில் இருக்கும் லைட் ஹவுஸ் விடுதியில் நேற்று இரவு பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இரவு 11.50 மணிக்கு பிறகு நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் ஒருவரும், மூன்று ஆண்களும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Sky News ஆனால் சிகிச்சை பலனின்றி … Read more

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இலங்கை கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. த்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

"சாதியின் பெயரால் தொடக்கூடாது, கோயிலில் நுழையக்கூடாது என்பதெல்லாம் நொறுக்கப்பட்டுவிட்டது" – ஸ்டாலின்

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய `Karunanidhi A life’, மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய `A Dravidian Journey’ ஆகிய இரு புத்தகங்களின் தமிழாக்க புத்தகங்களான `கலைஞர் மு.கருணாநிதி வரலாறு’, `திராவிடமும் சமூக மாற்றமும்’ வெளியீட்டு விழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் இதில் முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் புத்தகங்களை வெளியிட்ட பின்னர் மேடையில் உரையாற்றிய ஸ்டாலின், “திராவிடம் என்றாலே சமூக … Read more

விவாகரத்து முடிந்த, கணவனை இழந்த பெண்களே இலக்கு! 20 பெண்களிடம் மோசடி.. சிக்கிய கல்யாண மன்னன்

விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து 20 பெண்களிடம் மோசடி செய்த கல்யாண மன்னன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமண தகவல் மையம் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான்சி ராணி (20). இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் ஜான்சி ராணி தாயாரின் அறிவுறுத்தலையடுத்து மறுமணத்திற்கு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். சில நாட்களில் பரமக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆரோக்கியராஜ் (26) என்பவர் ஜான்சி ராணியை தொடர்பு கொண்டு பேசினார். … Read more