நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து முதன்முறையாக ரூ.5.55க்கு விற்பனையாகிறது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதன் காரணமாக நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வருமுன் காப்போம்! கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்… காரணங்கள், தீர்வுகள்!

தடுப்பூசி மூலம் தடுக்க முடிந்த, ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் 95 சதவிகிதம் சரி செய்ய முடிந்த, ஒரே புற்றுநோய் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மட்டுமே. ஜனவரி மாதம், சர்வதேச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம். இந்நேரத்தில், செர்வைகல் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான காரணம் முதல், தீர்வு வரை முழுமையாகத் தெரிந்து கொள்ள, காவேரி மருத்துவமனையின் (சீலநாயக்கன்பட்டி, சேலம்) மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவர் சத்யா சுதாகரிடம் பேசினோம். Cervical Cancer … Read more

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து ஆறுநாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ்பெற்றனர். சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். … இந்நிலையில் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து தங்களு…

விஜயகாந்த் சந்திப்பு… எமோஷனான தொண்டர்கள் ; `இதுதான் திராவிட மாடலா?’ – திமுக அரசை சாடிய பிரேமலதா

புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் தன் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். விஜயகாந்தை பார்பதற்காக காலை 9 மணியிலிருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் தலைமையகத்திற்கு வரத் தொடங்கினர். அதில் சிலர் குழந்தைகளுடன் குடும்பமாக விஜயகாந்தை காண வந்திருந்தனர். மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதை சார்ந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி தலைமையகத்துக்கு … Read more

ஜன.3 முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வரும் ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

சென்னை: மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை கோரிய வழக்கை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீடு செய்யப்பட்டால் தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆபாசப்படம் பார்க்கும் கணவன்; பாதிக்கப்படும் மனைவி… தீர்வு என்ன?- காமத்துக்கு மரியாதை | S 3 E 23

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த படங்கள் தற்போது உள்ளங்கைகளுக்கு வந்துவிட்டன. அடுத்தவர் கண்களுக்கு பயந்து பயந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது எந்த இடத்தில் வேண்டுமானாலும் போர்னோகிராபி பார்க்க முடியும் என்கிற சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். அளவுக்கு மீறினால் நல்ல விஷயங்களே நஞ்சாகி விடுகையில், போர்னோகிராபி  பார்ப்பதால் வருகிற தீமைகளைச் சொல்லவும் வேண்டுமோ?  நம் வாசகர் ஒருவர், `நான் அடிக்கடி போர்னோகிராபி பார்ப்பேன். எனக்கு கல்யாணமாகிடுச்சு. எனக்கு செக்ஸ்ல விருப்பமே இல்ல. மனைவி மேல ஈடுபாடே வர மாட்டேங்குது. என் பிரச்னைக்கு தீர்வு இருக்கா?’ என்று கேட்டிருந்தார். அவருடைய பிரச்னைக்கு பதில் சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் … Read more

சீனாவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மரணம்: உடலைக் கொண்டுவர போராடும் குடும்பத்தினர்

சீனாவில் மருத்துவம் பயின்று வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவன் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் உதவி கேட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால், பொருளாதாரத்தில் நலிவடைந்த அவரது குடும்பத்தினர், அவரது உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய மாணவர் அப்துல் ஷேக் தனது மருத்துவக் கல்வியின் முடிவில் சீனாவில் … Read more

ஈஷா மையத்தில் மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவை: ஈசா யோகா மையத்திற்கு வந்து கடந்த மாதம் மாயமான பெண் சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் கடந்த டிசம்பர் 11ம் தேதி கோவையில் செயல்பட்டு வரும் பிரபல யோகா மையத்தில் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி பயிற்சிக்கு வந்த சுபஸ்ரீ திடிரென மாயமானதாகக் கூறப்பட்டது. மேலும் செம்மேடு பகுதியில் சுபஸ்ரீ வேகமாக ஓடும் காட்சிகளும் வெளியாகின. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் 6 … Read more