நாக்பூர் – பிலாஸ்பூர் இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மகாராஷ்டிரா: நாக்பூர் – பிலாஸ்பூர் இடையிலான 6-வது வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் முக்கியமான நகரங்களில் மட்டுமே இந்த வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் டெல்லி- வாரணாசி வழித்தடங்களுக்கு இந்த  வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

`அம்பேத்கர் மக்களிடம் பிச்சை எடுத்து பள்ளி நடத்தினார்'-சர்ச்சையாகப் பேசியதாக அமைச்சர் மீது மை வீச்சு

மகாராஷ்டிரா உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சந்திரகாந்த் பாட்டீல். இவர் அவுரங்காபாத் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசும்போது பாபாசாஹேப் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே ஆகியோர் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். “அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே ஆகியோர் பள்ளி தொடங்கியபோது அரசை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் மக்களிடம் சென்று `நான் பள்ளி தொடங்குகிறேன், தயவு செய்து பணம் கொடுங்கள்’ என்று பிச்சை எடுத்து பள்ளியை நடத்தினர்” என்று தெரிவித்திருந்தார். சந்திரகாந்த் பாட்டீல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. … Read more

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழ்நாட்டில் நிலவு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தின் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கோவை, திருப்பூர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மகனின் கழுத்தை நெரித்து கொலை; தந்தை கைது: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

மகனின் கழுத்தை நெரித்து கொலை ம.பி.,யில் கொடூர தந்தை கைது தேவஸ் ; மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலியுடன் இருந்தபோது மகன் பார்த்துவிட்டதால், சிறுவனின் கையை துண்டாக வெட்டியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர தந்தையை, போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தேவஸ் மாவட்டத்தில் உள்ள பங்கார்டா கிராமத்தைச் சேர்ந்த ௪௫ வயது நபர், ௩௫ வயது பெண்ணுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக … Read more

கோழிக்கோட்டிலிருந்து துபாய் சென்ற விமானத்தில் பாம்பு; 7 மணி நேரம் அச்சத்துடன் காத்துக்கிடந்த பயணிகள்

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று துபாய் புறப்பட்டுச் சென்றது. விமானம் துபாய் சென்றவுடன் ஊழியர்கள் சரக்கு இருந்த பகுதியை திறந்தபோது அதில் ஒரு பாம்பு இருந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்து மிகவும் பத்திரமாக பயணிகள் இறக்கப்பட்டனர். பாம்பு பிடிப்பவர்களின் துணையோடு பாம்பு பிடிக்கப்பட்டது. ஆனால் பயணிகளின் உடைமைகள் அவர்களுக்கு கிடைப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டது. பயணிகள் 7 மணி நேரத்திற்கும் … Read more

ராஜஸ்தான் மாநிலம் பல்தேவ்புரா கிராமத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

பல்தேவ்புரா: ராஜஸ்தான் மாநிலம் பூண்டியில் உள்ள பல்தேவ்புரா கிராமத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகராஷ்டிரா கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பூண்டியில் … Read more

மதுராந்தகம் அருகே அரசு பேருந்து, நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து, நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். நாமக்கல் சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. சிகிச்சைக்காக அனைவரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"உதயநிதியை அமைச்சராக்குங்கள்; அவர் நடித்த படங்களை பார்க்கச் சொல்லாதீர்கள்!"– அண்ணாமலை தாக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க-வின் பல்வேறு அணிகள் பிரிவுகள் சார்பில் ’மாற்றத்திற்கான மாநாடு’ நடந்தது.  இந்த மாநாட்டில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர்  பொன் பாலகணபதி, முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில்  பேசிய அண்ணாமலை, “தமிழக அரசின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது. ’டார்க்கெட்’ வைத்து கல்லா கட்டும் அமைச்சர்கள், தமிழகத்தை சாராயம் ஓடும் மாநிலமாக மாற்றியுள்ளனர். மாநாட்டில் … Read more