5 ஜி ஏலம் மூலம் அரசுக்கு ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு

டில்லி அரசுக்கு 5 ஜி ஏலம் மூலம் ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கி உள்ளது.  இதில் 75 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது.  ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா நெட் ஒர்க்ஸ் என நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.  இதில் அதானி நிறுவனம் தனி பயன்பாட்டுக்காக ஏலத்தில் பங்கேற்றுள்ளது. ஏலத்துக்கான … Read more

ஜூலை-27: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பைக் டாக்சி டிரைவராக பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர்.. காரணத்தை கேட்டால் அசந்துவிடுவீர்கள்!

பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பைக் டாக்சி டிரைவர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது பலர் அறிந்ததே. இவர்களுக்கு நல்ல வருமானம் வருகிறது என்பதும் பெரிய நகரங்களில் இது ஒரு முழுநேர தொழிலாகவே பலரால் பார்க்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பெங்களூரு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் ஒருவர் வார இறுதி நாட்களில் பைக் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவர் இந்த பணியை ஏன் செய்கிறார் என்ற காரணம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சாப்ட்வேர் … Read more

'சின்னக் குயில்' சித்ரா! #AppExclusive

தமிழ்த்திரை இசையுலகில் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமாகிவிட்ட சித்ராவை திருவனந்தபுரம் நகரின் கிழக்குப் பகுதியான கரமனையில், ஜட்ஜ் ரோட்டின் இறுதியிலுள்ள அவருடைய எளிமையான வீட்டில் சந்தித்தோம். சிவப்பான வட்ட முகம், அதில் தவழும் புன்னகை, எளிமையான தோற்றம் – இவைதான் 22 வயது சித்ரா. நாம் சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். Playback Singer Chitra’s Exclusive  ”கழிஞ்ச வருஷத்துச் சிறந்த பாடகியாக கேரள கவர்ன்மென்ட் என்னை செலக்ட் பண்ணியிருக்கு. காலையில பேப்பரைப் பார்த்து விஷயத்தைத் தெரிந்துகொண்டேன்” … Read more

அம்பாசமுத்திரம் ஸ்ரீ காசிநாதர் ஆலயம்

அம்பாசமுத்திரம் ஸ்ரீ மரகதாம்பாள் உடனாய ஸ்ரீ காசிநாதர் அருளும் திருத்தலம். கங்கை நதிக்கரையில் காசியும், காசியில் ஸ்ரீ விஸ்வநாதரும் அருள் பாலிக்கின்றனர். கங்கை ஆறு தண்பொருநை ஆற்றில், அதாவது தாமிரபரணி ஆற்றில் கலந்து வருவதாக திருநெல்வேலி புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த கங்கையையும் காசியையும் இணைத்து இத்திருத்தல மூர்த்திக்கு ஸ்ரீ காசிநாதர் என்ற திருநாமம் வந்ததாகக் கூறப்படுகிறது. அம்பாசமுத்திரத்தில் காசிப முனிவர் சிவபெருமானை வேண்டி ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தில் தோன்றிய சிவபெருமானிடம், காசிப முனிவர், தான் … Read more

சொந்த வீட்டை விற்ற மார்க் ஜூர்க்கர்பெர்க்.. 3 மடங்கு லாபம்.. என்ன விலை தெரியுமா?

உலக பணக்காரர் பட்டியலில் 15வது இடத்தில் இருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது சொந்த வீட்டை மூன்று மடங்கு லாபத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டின் மதிப்பின்படி மார்க் ஜூர்க்கர்பெர்க் அவர்களுக்கு 67.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளது. இந்த நிலையில் அவர் தனக்கு சொந்தமான சான்பிரான்சிஸ்கோவில் உள்ள வீட்டை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீட்டை அவர் என்ன விலைக்கு வாங்கினார்? தற்போது எந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார் என்பதை … Read more

ஒன் பை டூ

வினோஜ் பி. செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க. “இது அர்த்தமற்ற கேள்வி. கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வ திலிருந்து, அதைக் கொண்டுவந்து சேர்ப்பது வரை அனைத்து வேலை களையும் முழுமையாகச் செய்வது மத்திய அரசுதான். இவற்றில் எதையுமே செய்யாமல் பெட்ரோல், டீசல் விற்பனையில் பணத்தை மட்டும் மாநில அரசு வாங்கிக் கொள்கிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்தால் விலை குறையும் என்று மத்திய அரசு சொல்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் இதே தி.மு.க அரசுதான். இவர்கள் தேர்தல் … Read more

உக்ரைன் படையெடுப்புக்கு மத்தியில்… ரஷ்யாவில் அசுர பலத்துடன் களமிறங்கும் சீனா

சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சீனா அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களையும் டாங்கிகளையும் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து சர்வதேச நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ள நிலையில் சீனா இந்த முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் சீனாவின் உள் மங்கோலியாவில் உள்ள மன்சூலியை விட்டு வெளியேறிய சீன இராணுவம் சார்பில் குழு ஒன்று ரஷ்யாவிற்கு செல்ல உள்ளது. இதில் இராணுவர் வீரர்கள், வாகனங்கள் மற்றும் டாங்கிகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,406,860 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.06 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,406,860 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 576,819,580 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 546,749,078 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,586  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா: 1076 பேருக்கு சிகிச்சை | Dinamalar

புதுச்சேரி, : புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து, தினசரி பாதிப்பு 200ஐ தாண்டியது. நேற்று முன்தினம் 1841 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 1,70,278 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 17 பேரும், 1059 பேர் வீட்டு தனிமையில் என மொத்தம் 1076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 254 பேர் குணமடைந்ததால், … Read more