36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்யலாம்: ஸ்பைஸ்ஜெட் வழங்கும் வசதி!

வீட்டில் இருந்துகொண்டே இணையத்தின் உதவியால் ஆன்லைன் மூலம் எந்த ஒரு பொருளையும் வாங்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அடுத்த கட்டமாக விமானத்தில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கூட ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. விமானத்தில் பறந்து கொண்டே ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை இந்தியாவில் தரும் முதல் விமான நிறுவனமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாசா ஏர்வேஸ், ஜெட் ஏர்வேஸ் என்ட்ரி.. விமான … Read more

சர்க்கரை நோய் தீர சித்தர்கள் காட்டிய வழிபாடு; தஞ்சை அருகே அதிசயக் கோயில்!

நம்பிக்கையே சிறந்த மருந்து என்பார்கள் பெரியவர்கள். அவ்வகையில், கட்டுக்குள் அடங்காத சர்க்கரை நோயால் கஷ்டப்படும் அன்பர்களுக்கு, `நோய் தீரும்’ என்று நம்பிக்கை அளிக்கும் இடமாகத் திகழ்கிறது ஒரு சிவாலயம். அந்தக் கோயிலின் சிவலிங்க மூர்த்தம் கரும்பு வடிவில் திகழ்கிறது என்பது வியக்கவைக்கும் தகவல்! அது எந்தக் கோயில், அங்கே என்ன பரிகாரம்… எப்படிச் செய்ய வேண்டும்… தெரிந்துகொள்வோமா? கோயில்வெண்ணி கரும்பேஸ்வரர் கரிகால் சோழருக்கும் பாண்டியருக்கும் நடைபெற்ற வெண்ணிப் போர் சரித்திரப் பிரசித்திபெற்றது. இந்தப் போர் நடைபெற்ற இடம்தான் … Read more

உலகளாவிய அவசரநிலை? 1600 கடந்த தொற்றாளர்கள் எண்ணிக்கை: WHO அவசர கூட்டம்

உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1600 கடந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பானது அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது. குரங்கம்மை தொற்றானது 39 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1600 கடந்துள்ளது. இந்த நிலையில், குரங்கம்மை தொடர்பில் அவசர கூட்டத்திற்கு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதுடன், எதிர்வரும் 23ம் திகதி விரிவான விவாதம் முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளது. இதனிடையே, தற்போதைய சூழலில் குரங்கம்மை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைவருக்கும் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை: ராகுல் கோரிக்கையை ஏற்றது அமலாக்க துறை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரிய ராகுல் கோரிக்கையை அமலாக்க துறை ஏற்றுக் கொண்டது. நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 3 நாட்களாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய் சோனியா காந்தியை பார்க்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்று நேற்று அவரிடம் … Read more

எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்காக சிறப்பு பேனா தயார்| Dinamalar

புதுடில்லி : ‘ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் சிறப்பு பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு ஊதா நிற மையைப் பயன்படுத்த வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம், 18ல் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாநிலங்களில் தேர்தலை நடத்தும் உதவி அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்போரின் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், சட்ட … Read more

மதுரையில் இருந்து 2வது தனியார் ரயில்: எந்த ஊருக்கு செல்கிறது தெரியுமா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையிலிருந்து ஷீரடிக்கு இந்தியாவின் முதல் தனியார் ரயில் இயங்கியது என்பதை பார்த்தோம். அந்த வகையில் இரண்டாவது தனியார் ரயிலாக மதுரையிலிருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யாராஜ் நகருக்கு இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவிலுள்ள பாரம்பரியமான இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கவும் இந்த ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை – ஷீரடி தனியார் சிறப்பு ரயில்: கட்டணம் எவ்வளவு? என்னென்ன … Read more

திரெளபதி முர்மு, தமிழிசை, அனுசுயா… பாஜக-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ரேஸில் யார் யார்?!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியோடு முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜூலை 18-ம் தேதி இதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. 233 மாநிலங்களவை எம்.பி-க்கள், 543 மக்களவை எம்.பி-க்கள், இந்தியா முழுவதுமிருக்கும் 4,033 எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளின் மதிப்புகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் கணக்கு… வெற்றி சாத்தியமாகுமா?! குடியரசுத் … Read more

லண்டன் விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்: நகரும் படிக்கட்டில் நடந்த துயரம்

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நகரும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஈஸிஜெட் பயணி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த நபர் ஊனமுற்றவர் என தெரிய வந்துள்ளது. குறித்த பயணி விமானத்தில் இருந்து வெளியேற, அவருக்கு உதவ சிறப்பு உதவிக்காக காத்திருந்த நிலையில், நகரும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தாமதத்தால் அவர் ஆத்திரமடைந்ததாகவும், மதியம் 12.50 மணியளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானத்தில் இருந்து இறங்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. … Read more

ஜூன் 17: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 26வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 26-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.