இன்று நள்ளிரவு விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மாா்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய … Read more

புதுச்சேரி: “சூதாட்ட மாஃபியாக்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏனாம்” – பகீர் கிளப்பும் அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க.வின் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, இந்தியாவில் பிற மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக சிறப்பான ஆட்சியை நமது முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி வருகிறார். இந்த நேரத்தில் கூட்டணியில், பொறுப்புமிக்க பதவியில் உள்ளவர்கள் தங்களுடைய பதவிக்கு என்ன பொறுப்பு இருக்கிறதோ அதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒருசிலர் ஆவல் மிகுதியில் அரசின் திட்டங்களையும், தங்களுக்கு சம்பந்தமில்லாத நிதி மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் … Read more

இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3…

ஸ்ரீஹரிகோட்டா:  ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07மணிக்கு தொடங்கியது. LVM3-M2 பணியானது NSIL மூலம் ஒரு வெளிநாட்டு வாடிக்கையாளர் OneWebக்கான பிரத்யேக வணிகப் பணி என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்தது எல்.வி.எம்.  இந்த மார்க் 3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. இந்த வகை ராக்கெட் … Read more

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளிடம் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- சுப்ரீம் கோர்ட்டு வேதனை

புதுடெல்லி நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த ஷாகீன் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. பர்வேஷ் வர்மா, முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என … Read more

தீபாவளி ஸ்பெஷல் குழம்பு ரெசிப்பிஸ்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தீபாவளி என்றாலே ‘நான் வெஜ்’ இல்லாமலா? அசைவப் பிரியர்கள் எல்லோருமே தீபாவளி அன்று அமாவாசை இல்லாத பட்சத்தில், மட்டன் குருமா, ஆட்டுக்கால் பாயா… என்று வீட்டில் செய்யச் சொல்லி நிதானமாக சாப்பிடுவது ப(வ)ழக்கம் அவர்களுக்காக இதோ அந்த ரெசிபிகள் சுலபமான முறையில்… ஈஸி … Read more

வெறுப்பு பேச்சுகள் பேசுபவர் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையல், வெறுப்பு பேச்சுகள் மீதான நடவடிக்கைக்கு புகார்கள் வரும் வரை காவல் துறை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிராகவும் வெறுப்பு பேச்சுகள் பேசப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள்,  அவ்வாறு நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில், இந்துக்கள் மீதான வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. பாஜக ஆளும் உ.பி., உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான … Read more

ஜெ. மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும்: ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர் மீது விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோவை செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூடு பற்றி தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பழனிசாமி பொய் கூறியுள்ளார் என தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சன் முயற்சி?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: 2024 ல் பார்லிமென்ட் தேர்தலில் தன்னால் மட்டுமே , கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியும் என எம்.பி.,க்களிடம் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தரப்பினர் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.ரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த ஜூலையில் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத … Read more

இந்திய கரன்சிகளில் காந்திக்கு பதில் நேதாஜி படம் இடம் பெற வேண்டும்: இந்து மகாசபை வலியுறுத்தல்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பினை நடத்தினார். இதன்பின்னர் அவர் பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்கு எந்த வகையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை. அதனால், இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்ட வீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்த வழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். காந்திஜியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் … Read more