நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

200 கிமீ ரேஞ்சு.., PMV Eas-E குவாட்ரிசைக்கிள் விற்பனைக்கு வந்தது

மும்பையை தலைமையிடமாக கொண்ட மின்சார வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம் PMV எலக்ட்ரிக் நிறுவனம் Eas-E என்ற பெயரில் மினி கார் அல்லது குவாட்ரிசைக்கிள் மாடலை ரூ.4.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய EV மைக்ரோகாரை இந்தியாவில் தனிநபர் வாகனப் பிரிவில் மிக மலிவான மின்சார காராக விளங்குகின்றது. இரு வயது வந்தோர் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் குவாட்ரிசைக்கிள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. PMV Eas-E குவாட்ரிசைக்கிள் Eas-E மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்பட்டு வருகின்றது. … Read more

Doctor Vikatan: கடலை, கிழங்கு உணவுகளால் வாயுத்தொல்லை வருவதைத் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: கிழங்கு மற்றும் சன்னா போன்ற உணவுகளை உட்கொண்டதும் வாயுத் தொந்தரவு வருவது ஏன்? வாயுத் தொந்தரவுக்கும் உணவுகளுக்கும் தொடர்புண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம் கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர் சன்னா எனப்படும் கொண்டைக்கடலை, ராஜ்மா, கிழங்கு வகைகள் போன்றவற்றைச் சாப்பிடும்போது வாயுத்தொல்லை வருவதாக பலர் சொல்வதுண்டு. இவற்றைச் சமைக்கும் முறை என்பது முக்கியம். பச்சைப்பயறு, ராஜ்மா, சோயா, சன்னா என எந்தக் கடலை வகையானாலும் 6 முதல் 8 மணி நேரம் … Read more

கார்த்திகை மாதம்… மாலை போட்டு விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சென்னை: கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதத்தை தொடங்கினர். மாலை அணிவதற்கு தமிழ்கத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளல கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து சபரிமலை செல்ல தயாராகி வருகின்றனர். சபரிமலையில் நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று சபரிமலை கோவில் மண்டல பூஜை துவங்கியது.

சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

சென்னை: சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து இயக்கப்படுகிறது. குளிர்சாதனம் இல்லாத இருக்கை, படுக்கை வசதி கொண்ட ULTRA DELUXE பேருந்து கட்டணம் ரூ.1,500. சென்னை – பம்பை உட்கார்ந்து செல்லக்கூடிய NSS பயணத்திற்கான கட்டணம் ரூ.1,100. ஜன. 20ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் படங்கள் கசிந்தது

வரும் நவம்பர் 25ஆம் தேதி இந்திய சந்தையில் வெளிவரவுள்ள புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் படம் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது. முன்னதாக வரும் நவம்பர் 21 ஆம் தேதி இந்தோனேசியா சந்தையில் இன்னோவா ஹைக்ராஸ் ஜெனிக்ஸ் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. Toyota Innova Hycross புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் புதிய இன்னோவா அதன் முந்தைய மாடலின் தோற்ற அமைப்பில் இருந்து சற்று மாறுபட்டு எஸ்யூவி போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.  குரோம் பாகங்கள் சேர்க்கப்பட்டு … Read more

டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்று நடந்தது என்ன?! – விசாரணையில் வெளியான தகவல்கள்

மும்பையை சேர்ந்த ஸ்ரத்தா என்ற பெண் டெல்லியில் கடந்த மே மாதம் அவரின் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கொலையை செய்த ஸ்ரத்தாவின் காதலன் அஃப்தாப் பூனாவாலா, ஸ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியை சுற்றி வீசியதாக டெல்லி போலீஸாரிடம் தெரிவித்துள்ளான். போலீஸாரின் விசாரணையில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “மே 18ம் தேதி கொலை நடந்த தினத்தன்று இரவு 8 மணிக்கு வீட்டிற்கு … Read more

சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை: சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கன மழையால் பெரும்பாலான பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பல பள்ளிகள் நிவாரண முகாம்களாகவும் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து … Read more

சென்னையில் ஒரே பயணச்சீட்டு முறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னையில் பலவகை போக்குவரத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்திடும் வகையில் ஒரே பயணச்சீட்டு முறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவம்பர் 20ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.