சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை: சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கன மழையால் பெரும்பாலான பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பல பள்ளிகள் நிவாரண முகாம்களாகவும் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து … Read more

சென்னையில் ஒரே பயணச்சீட்டு முறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னையில் பலவகை போக்குவரத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்திடும் வகையில் ஒரே பயணச்சீட்டு முறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவம்பர் 20ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹனுமன் கோயில் வடிவத்தில் கேக்: `கமல்நாத் இந்துகளின் மனதை புண்படுத்திவிட்டார்” – குற்றம்சாட்டும் பாஜக

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், தனது சொந்த ஊரான சிந்த்வாராவுக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றார். அங்கு கமல்நாத் ஆதரவாளர்கள் அவரின் 76-வது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தனர். கமல்நாத்துக்கு நவம்பர் 18-ம் தேதிதான் பிறந்த நாள். ஆனால் சொந்த ஊருக்கு வந்ததால் அங்கேயே பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்து கேக் வாங்கி வரப்பட்டது. கமல்நாத் ஆதரவாளர்கள் வாங்கி வந்த கேக் ஹனுமான் கோயில் வடிவத்தில் இருந்தது. அதனை கமல்நாத் வெட்டி தனது பிறந்தநாளை … Read more

கடவுளின் பெயரால் ஹரி, மேகன் என்ன செய்தார்கள்? விருது தொடர்பில் விளாசிய அரச வாழ்க்கை வரலாற்றாசிரியர்

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும், மதிப்புமிக்க மனித உரிமைகள் விருதை பெற என்ன செய்தார்கள் என அரச வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் விளாசியுள்ளார். ரிப்பிள் ஆஃப் ஹோப் விருது  ராபர்ட் கென்னடி மனித உரிமைகள் அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் விழாவில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோருக்கு ரிப்பிள் ஆஃப் ஹோப் விருது வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அரச வரலாற்று ஆசிரியர் ஏஞ்சலா லேவின் கடுமையாக விளாசியுள்ளார். அவர் … Read more

மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம்

மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், வரதராஜபுரத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள நளங்குடியில் ஏழு அண்ணன் மார்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள் கன்னியம்மன். அழகான தோற்றம் கொண்ட இவரை, திருமணம் செய்ய ஆங்கிலேய ஆட்சியாளர் ஒருவர் விரும்பியுள்ளார். இதற்கு ஏழு அண்ணன் மார்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமணம் செய்துதர மறுத்தால் ஆங்கிலேயர்களின் கொடுங்கோலான ஆட்சியாளர்கள் விதிக்கும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதையும் உணர்ந்தனர். இதனால் ஏழு அண்ணன் மார்களும் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.18 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.09 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ-17: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.