மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த சம்பவம்… 9 வயது சிறுமி: நடுக்கத்தில் இருந்து மீளாத பிரித்தானிய குடும்பம்

குடியிருப்புக்குள் நுழைந்துவிடாமல் இருக்க முயற்சிக்கையில், வாடகை கொலையாளி துப்பாக்கியால் சுட்டுள்ளான். மார்பில் குண்டு பாய்ந்து சரிந்த சிறுமி ஒலிவியாவை அள்ளிக்கொண்டு தாயார் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். பிரித்தானியாவில் வாடகை கொலையாளியின் துப்பாக்கி குண்டுக்கு 9 வயதான அப்பாவி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது சிறுமி Olivia Pratt-Korbel தூக்கத்திற்கு தயாராகியுள்ளார். அப்போது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க, சிறுமியின் … Read more

இலவசங்கள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி;

புதுடில்லி : ‘அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்த விவாதம் நிச்சயம் தேவை’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக நிதி அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான தியாகராஜன் கூறியுள்ள கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. ‘தி.மு.க., மட்டும் தான் அறிவாளியா’ என, நீதிபதிகள் குட்டு வைத்துள்ளனர்.’தேர்தல்களின்போது இலவச அறிவிப்புகள் வெளியிடும் கட்சிகளை முடக்க வேண்டும்; கட்சி சின்னத்தை முடக்க வேண்டும்’ என கோரி, அஸ்வினி உபாத்யாய் என்ற … Read more

2 மாதங்களில் 28,000 கிமீ பயணம்… ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-ஆல் ஏற்பட்ட பிரச்சனை!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களை சினிமா ரசிகர்கள் தெரியாமல் இருக்க முடியாது. அவர் இயக்கிய ‘ஜாஸ்’, ‘ஜுராசிக் பார்க்’ உள்பட பல திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் கடந்த 2 மாதங்களில் சுமார் 28 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் விமானம் கடந்த இரண்டு … Read more

5000 ஓட்டங்கள்! தெறிக்கவிட்ட புஜாரா..வீடியோ

புஜாரா 109 முதல் தர போட்டிகளில் 5000 ஓட்டங்கள் குவித்துள்ளார் தனது கடைசி 8 போட்டிகளில் புஜாரா 614 ஓட்டங்கள் குவித்து மிரட்டியுள்ளார் கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய வீரர் புஜாரா 132 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார். ராயல் லண்டன் ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் சஸ்செக்ஸ் மற்றும் மிடில்செக்ஸ் அணிகளில் மோதின. இந்தப் போட்டியில் சஸ்செக்ஸ் அணியில் விளையாடி வரும் இந்திய வீரர் புஜாரா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 75 பந்துகளில் … Read more

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க குழு; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

பெங்களூரு: விநாயகர் சதுர்த்தியையொட்டி கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- மின் இணைப்பு கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது இயல்பு. சிலைகளை வைக்க அரசு அனுமதி வழங்குவது முக்கியமானது. இதனால் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து இந்த அனுமதியை வழங்க வேண்டியுள்ளது. அதனால் மாநகராட்சிகள் மற்றும் இதர நகர உள்ளாட்சி அமைப்புகளில் கீழ்கண்ட … Read more

சென்செக்ஸ்: 2 மாதத்தில் மோசமான சரிவு.. முதலீட்டாளர்களே உஷார்..!

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மும்பை பங்குச்சந்தை 2 நாள் தொடர்ந்து சரிந்து 6.57 லட்சம் கோடி இழப்பையும், 2 மாத்தில் மோசமான சரிவைப் பதிவைச் செய்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 151.12 புள்ளிகள் உயர்வுடன் துவங்கினாலும் 2 நாள் சரிவில் பெரும் முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரையில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகளவில் உள்ளது. 59,000 புள்ளிகளுக்கு கீழ் … Read more

சிவசேனா சின்னம் பிரச்னையை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்| Dinamalar

புதுடில்லி : சிவசேனா கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சின்னம் தொடர்பாக நாளை வரை எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என, தேர்தல் கமிஷனுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில், கடந்த ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் தனியாக பிரிந்தனர். பெரும்பான்மையை இழந்ததால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை … Read more

மெட்ரோ பயணிகள் செல்போன் மூலம் டிக்கெட் பெற வசதி

பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மெட்ரோ சேவை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையே பயணிகள் மெட்ரோ நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக செல்போன் மூலம் மெட்ரோ ரெயில்களுக்கு டிக்கெட் எடுக்கும் வசதியை கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே செல்போன் செயலியை பயன்படுத்தி கட்டணத்தை கொடுத்து டிக்கெட் எடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. … Read more

ஏன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மக்களின் பெஸ்ட் சாய்ஸ்.. உங்களுக்கு தெரியுமா?

இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன. வங்கி முதல் பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் என பல முதலீட்டு திட்டங்களும் உள்ளன. ஆனால் இன்றும் சாமானியர்கள் மத்தியில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அஞ்சலக திட்டங்களுக்கு தான். ஏன் என்ன காரணம்? எதற்காக இது சிறந்ததொரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு திட்டங்கள், பாதுகாப்பானதாக பார்க்கப்படுகின்றதே என்ன காரணம்? செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. கிரெடிட் … Read more

பா.ஜ., பிரபலம் மாரடைப்பால் மரணம்| Dinamalar

பணஜி : ஹரியானாவைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத், 42, கோவாவில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.ஹரியானாவைச் சேர்ந்த சோனாலி போகத், ஹிந்தி சினிமா, ‘டிவி’ நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இவர், சமூக வலைதளத்திலும் பிரபலமானவர். ‘பிக் பாஸ்’ எனப்படும் ‘டிவி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். பா.ஜ.,வில் இணைந்த அவர், 2019 சட்டசபை தேர்தலில் ஆதம்புர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கோவாவுக்கு தன் ஊழியர்களுடன் சென்ற அவர், ஹோட்டலில் இருந்தபோது, நேற்று முன்தினம் இரவு … Read more