கேரளாவில் வரதட்சணை கொடுமை, சாதி பாகுபாட்டால் பெண் தற்கொலை; கணவர் உள்பட 3 பேர் கைது

கொச்சி, கேரளாவின் திருச்சூரில் குன்னம்குளம் பகுதியில் வசித்து வந்த தம்பதி சுமேஷ் மற்றும் சங்கீதா. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களில் சங்கீதா தலித் பிரிவை சேர்ந்தவர். சுமேஷ் ஈழவா பிரிவை சேர்ந்தவர். இந்நிலையில், எர்ணாகுளம் மத்திய போலீசார் கூறும்போது, சங்கீதாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும், சாதி பாகுபாடு செய்தும் வந்துள்ளனர். இந்த கொடுமை பொறுக்க முடியாமல், அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். திருமணம் முடிந்த 2 வாரத்தில் கொச்சியில் … Read more

பாப்பாத்தி அம்மன் கோயில்: மரமே கோயிலாக விரிந்திருக்கும் மர்மம்; காரிய சித்தி கண்டறிய அதிசயச் சுனை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் என்னும் கிராமத்தில் இயற்கை அழகு நிறைந்த ஒரு மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாப்பாத்தி அம்மன் திருக்கோயில். கோயில் என்றால் இங்கு அழகிய கட்டுமானம், கோபுரம் என்று எதுவும் கிடையாது. ஒரு மரமே விரிந்து பரந்து கோயிலாக மாறி இருக்கிறது. இங்குக் கோயிலைக் கட்ட முயன்றாலும் அது முடிவதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோயில், மண்டபம், கோபுரங்கள் ஆகியன எழுப்ப அந்த அம்மன் விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர். பாப்பாத்தி அம்மன் கோயில் வற்றாத … Read more

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணை தொடரும் சர்ச்சை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணான லீனா மணிமேகலை தொடர்பில் இந்திய நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கனடாவின் ரொறன்ரோவில் ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் ரிதம்ஸ் ஆஃப் கனடா என்ற திருவிழா நடைபெற்து. இதன் ஒரு பகுதியாக சுயாதீன பட இயக்குநர் லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் லீனா, கையில் சிகரெட்டுடன் இருக்கிறார். இதனையடுத்து இந்துக்கடவுள்களை … Read more

நீட் தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களின் ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால், தனி அறையில் அமர்ந்து … Read more

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாங்கனி இரைத்தல் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை 4 வாரங்களில் இடித்து அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள குடிசைப்பகுதியை 4 வாரங்களுக்குள் இடித்து அகற்றுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல், ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை இடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தீ குளிப்பு போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதால், குடிசைகளை அப்புறப்படுத்த அக்டோபர் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டார். … Read more

குருவே சரணம்; கைமேல் பலன் கொடுக்கும் குருபூர்ணிமா வழிபாடு கடைப்பிடிப்பது எப்படி?

ஆனி மாதப் பௌர்ணமி குருபூர்ணிமாவாக வழிபடப்படுகிறது. இந்த நாள் குருவழிபாட்டுக்கு ஏற்ற நாள். குருவருளே திருவருள் என்பது ஆன்றோர் வாக்கு. இறைவழிபாடு எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று குருவழிபாடும் முக்கியம். குருவே நம் துயர் நீக்குபவர். நம் குற்றங்களை அறிந்து மன்னித்து ஏற்று இறையருள் நோக்கி நடத்துபவர். தகுதியில்லாத நம்மைத் தகுதிப் படுத்துபவர். குழந்தையைத் தகப்பன் எப்படிக் கைபற்றி அழைத்துச் செல்வானோ அதேபோன்று கனிவோடு வழிநடத்துகிறவர். நல்லாசிரியனாக உடன் இருந்து பாடம் நடத்துபவர். அப்படிப் பட்ட … Read more

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.08 லட்சம் கன அடியாக இருப்பதால், அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய சின்னத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு| Dinamalar

புதுடில்லி : புதிய பார்லி., கட்டடத்தின் உச்சியில் வைத்துள்ள தேசிய சின்னத்தில், சிங்கம் கர்ஜிப்பது போல மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில், 19.6 அடி உயரம், 9,500 கிலோ எடை உள்ள வெண்கலத்தாலான இந்திய அரசின் தேசிய சின்னத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.அசோக சக்கர பீடத்தில் நான்கு சிங்கங்கள் நிற்கும் இந்த தேசிய சின்னம் குறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இது பற்றி … Read more

தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு – மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்

பெங்களூரு, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நல்லாட்சி நிர்வாகம் குறித்த மாநாட்டில் மத்திய அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் மற்றும் பொது குறைதீர் துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசியதாவது:- “நாட்டில் மோடி பிரதமரான பிறகு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சான்றிதழ்களின் உறுதி தன்மையை நிரூபிக்க உயர் அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் பெற வேண்டும் என்று இருந்தது. அதை பிரதமர் மோடி பதவி ஏற்று மூன்றே மாதத்தில் ரத்து செய்தார். அது ஒரு புரட்சிகரமான … Read more