தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில்  இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்தது.    

குஜராத், மஹாராஷ்ட்டிராவில் கொட்டுது கனமழை: 7 பேர் பலி| Dinamalar

ஆமதாபாத்: குஜராத் , மஹாராஷ்ட்டிரா, தெலுங்கானாவில் பலத்த மழையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜராாத்தில் கனமழைக்கு 7 பேர் பலியாகினர். அணைகளில் கிடுகிடுவென நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆமதாபாத் நகரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 219 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக அங்கு … Read more

அமெரிக்காவில் வாழ எவ்வளவு பணம் வேண்டும்..?!

இந்தியாவில் பலருக்கும் அமெரிக்கா என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும். படித்து முடித்து அமெரிக்கா சென்று விட வேண்டும் என நினைப்பதுண்டு. பொதுவாக அமெரிக்கா உலகின் காஸ்ட்லியான நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனினும் மக்கள் அதிகம் விரும்பும் நாடாகவும் உள்ளது. என்றேனும் யோசித்தது உண்டா? அமெரிக்காவில் வாழ எவ்வளவு பணம் வேண்டும் என்று? விளாடிமிர் புதினின் புதிய ஆயுதம்.. நடுங்கும் ஐரோப்பா.. அமெரிக்கா வருமா..?! யார் வசதியானவர்கள் சிஎன்பிசி அறிக்கையின் படி, அமெரிக்கர்கள் 7,74,000 டாலர்கள் வைத்திருந்தால், நிதி … Read more

இலங்கை: நாளைய தேதியிட்டு ராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்ட கோத்தபய ராஜபக்சே?!

இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்துவருகிறது. அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை, கொழும்பில் எதிர்க்கட்சிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எனப் பலர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை இந்த நிலையில், … Read more

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார் கோட்டாபய! வெளியான தகவல்

தனது பதவி விலக கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 ஆம் திகதி என குறிப்பிட்டு நேற்று கையொப்பமிட்டுள்ளார். இராஜினாமா கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவர் அதை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளார். மேலும் அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என கூறப்படுகின்றது. Source link

மேகதாது அணைக்கு எதிரான தமிழகஅரசு மனுக்கள் மீது 19-ந் தேதி உச்சநீதி மன்றம் விசாரணை!

டெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில், அதுகுறித்து,  காவிரி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிரான தமிழகஅரசு மனு மீது வரும் 19-ந் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விசாரிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதுகுறித்து விரைந்து விசாரணை நடத்த தமிழகஅரசு சார்பில்,  மூத்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை … Read more

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்குங்கள்: தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையீடு..!!

சென்னை: இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையீடு செய்திருக்கிறார். இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானது செல்லாது என அறிவிக்க கோரியும் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் மீது தாக்குதல்| Dinamalar

கன்னூர்; கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. கன்னூர் மாவட்டம் பையனூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது நேற்று நள்ளிரவில் மர்ம மனிதர்கள் குண்டு வீசியுள்ளனர். இதில் அலுவலக காம்பவுண்ட் சுவர் சேதமுற்றது. போலீசார் விசாரித்து வருகின்றனர். கன்னூர்; கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. கன்னூர் மாவட்டம் பையனூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது நேற்று நள்ளிரவில் மர்ம மனிதர்கள் குண்டு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… … Read more

இந்தியா – ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று காலை வர்த்தகத்திலேயே, ஜூன் மாத பணவீக்க தரவுகள் வெளியாகும் நிலையில் புதிய வரலாற்று உச்சமாக 79.63 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இந்தியா முதல் அமெரிக்கா வரையில் அனைத்து நாடுகளும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதில் உறுதியாக இருக்கும் வேளையில் விரைவில் அடுத்த கட்ட வட்டி உயர்வை உலக நாடுகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கியமான அறிக்கையை … Read more

அதிமுக-வில் அரங்கேறிய முக்கோண காட்சிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?

அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 11) தொடங்கியதும் அதிமுகவில் இதுவரை இருந்த இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டது, இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அதிமுக செயற்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் பொதுக்குழுவிலும் நிறைவேற்றப்பட்டன. அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை பொதுக்குழுவைத் தலைமை தாங்கி நடத்தித் தருமாறு எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். அதை கே.பி. … Read more