மத்திய அரசின் உதவித்தொகை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தேசிய வெளிநாட்டு உதவித்தொகையின் மத்திய அரசு திட்டத்தின் கீழ், பழங்குடியினர், சீர்மரபினர், நாடோடி இனத்தவர், பகுதியளவு நாடோடி இனத்தவர், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் ஆகிய பிரிவினர் பயன்பெறலாம். படிப்புகள்: இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு துறையிலும் உயர்நிலை … Read more

தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

பெரும்பாவூர், திருவனந்தபுரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது தீவிரம் அடைந்து உள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையின் முடிவில், உண்மை நிச்சயம் வெளிவரும். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு … Read more

இங்கிலாந்து ராணியை விட செல்வந்தர் அக்‌ஷதா மூர்த்தி.. தேநீர் சப்ளை செய்தது ஏன் தெரியுமா?

இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட சொத்து மதிப்பு அதிகம் வைத்திருப்பவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகளும், முன்னாள் பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மனைவியுமான அக்‌ஷதா மூர்த்தி என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் பிரிட்டன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் ரிஷி சுனக். இந்த நிலையில் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி பத்திரிக்கையாளர்களுக்கு தேநீர் வழங்கிய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அக்‌ஷதா மூர்த்தி இங்கிலாந்து ராணியை விட … Read more

பொறியியல் முதல் செமஸ்டரில் 62 சதவிகிதம் தோல்வி – காரணங்கள் என்னென்ன?!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. பொறியியல் மாணவர்களில் 38 சதவிகிதம் பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதி 62 சதவிகித மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்திலோ, சில பாடங்களிலோ தோல்வியடைந்துள்ளனர். பொறியியல் கல்லூரி பொறியியல் மாணவர்களில் இத்தனை சதவிகிதம் பேர் தேர்வில் தோல்வியடைந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றிலும், அவை தொடர்புடைய அறிவியல் … Read more

மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலில் அறநிலையத்துறை நியமித்த செயல் அலுவலருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

மதுரை: மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலில், அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட, செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. விதிப்படி 3பேரை அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என உத்தர விட்டு வழக்கை தள்ளிவைத்தார். தமிழ்நாட்டில் வருவாய் வரும் பெரும்பாலான கோயில்களை தமிழகஅரசு கையப்படுத்தி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அதுபோல, தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. மேலும் ஆதீனங்கள் தலைமையில் செயல்படும் … Read more

தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் காணப்படுகிறது.

கனமழையால் பாதிப்புமுதல்வர் இன்று ஆய்வு| Dinamalar

பெங்களூரு,: : கர்நாடகாவின், பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. மழையால் சேதங்கள் ஏற்பட்ட குடகு, கடலோர மாவட்டங்களை, முதல்வர் பசவராஜ் பொம்மை, இன்று நேரில் பார்வையிடுகிறார்.இது தொடர்பாக, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:மாநிலத்தில் பத்து நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. வெள்ளப்பெருக்கால் வீடுகள் இடிந்தது, மண் சரிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. சேதமடைந்த பகுதிகளை, இன்று நேரில் பார்வையிட செல்கிறேன்.குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவின், கார்வார் செல்கிறேன். அங்கேயே அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, நிவாரண … Read more

ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதான ஆர்.பி.ரவிச்சந்திரன் தமிழக கவர்னர் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அப்போது நீதிபதிகள், பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ரவிச்சந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் … Read more

அதானி வருகையால் ஆட்டம் கண்ட ஏர்டெல் பங்குகள்… எல்லாத்துக்கும் இதுதான் காரணம்!

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த ஏலத்தில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் திடீரென அதானி குழுமம் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறைகளுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை ஏலம் எடுப்பதற்காக இந்தியாவின் முன்னணி … Read more

“மக்களைத் தேடி மருத்துவம்; நாடு முழுக்க செயல்படுத்த மத்திய அமைச்சர்‌ விருப்பம்” – மா.சுப்பிரமணியன்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் உலக மக்கள்தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது‌. இதைத்தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் ரூ.4.8 கோடி செலவில் பணி முடிக்கப்பட்ட 18 துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனை கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்து பேசினர். மக்கள் தொகை தின விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Read more