அறிமுக டெஸ்டிலேயே 12 விக்கெட்டுகள்! அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை இமாலய வெற்றி

காலேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. சண்டிமலின் இரட்டை சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 554 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 190 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் பந்துவீச்சில் அச்சுறுத்திய அறிமுக வீரர் பிரபத் ஜெயசூர்யா, இரண்டாவது இன்னிங்சிலும் அவுஸ்திரேலிய … Read more

திருப்பதி கோவிலில் நாளை  5 மணி நேரம் தரிசனம் ரத்து….

திருமலை: திருப்பதியில் நாளை 5 மணி நேரம் பக்தர்களுக்கு  தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. திருப்பதியில் தினசரி பலஆயிரம் பேர் ஏழுமலையான தரிசனம் செய்து வரும் நிலையில், ஆனிவார ஆஸ்தானம்  நாளைத் தொடர்ந்து, நாளை (12ந்தேதி)  5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும் ஆனிவார ஆஸ்தானம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. … Read more

சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கை செல்லும்.: உயர்நீதிமன்றம்

சென்னை: சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி ரூ.1,600 கோடி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி எடுக்கப்பட்ட நடவடிக்கை செல்லும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

2022ல் அதிக சம்பள உயர்வு வாங்கி ஊழியர்கள் யார் தெரியுமா..?

இந்தியாவின் டாப் 500 நிறுவனங்களின் மொத்த ஊழியர்களின் சம்பள தொகையின் அளவு 2022 ஆம் ஆண்டில் 10.8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகப்படியான தொகை என்பது மட்டும் அல்லாமல், 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) பட்டியலிடப்பட்ட முதல் 500 நிறுவனப் பங்குகளின் செயல்திறனைக் குறிக்கும் குறியீடான நிஃப்டி 500-ன் மொத்த ஊழியர் செலவு கடந்த ஓராண்டில் … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட மேற்கூரையில் 20அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தேசிய சின்னம்! பிரதமர் மோடி திறந்து வைத்தார் – வீடியோ

டெல்லி: தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிட மேற்கூரையில் 9500 கிலோ எடையில் 6.5 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட வெண்கலத்திலான தேசிய சின்னம அமைக்கப்பட்டுள்ளது. அதனை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை பிரபல நிறுவனமான டாடா நிறுவனம் கட்டி வருகிறது. இந்த இந்த புதிய கட்டித்திற்கான … Read more

பிரித்தானிய சாலையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்… சிறுவனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

பிரித்தானியாவின் லிவர்பூல் நகர மையத்தில் கிறிஸ்மஸ் விளக்குகள் ஏற்றப்பட்ட இரவில் அவா வைட்(12) என்ற சிறுமியை குத்திக் கொன்ற டீனேஜ் சிறுவனுக்கு குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரித்தானியாவின் லிவர்பூல் நகரத்தில் கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் விளக்குகள் ஏற்றப்பட்ட நவம்பர் 25ம் திகதி இரவில் அவா வைட், தன்னையும் தனது நண்பர்களையும் படமெடுப்பதையும் நிறுத்துமாறு சிறுவர்கள் குழுவிடம் கூறியதை அடுத்து, அவா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில், ஸ்னாப்சாட் வீடியோவில் ஏற்பட்ட … Read more

அதிமுகவின் இருதரப்பு தலைவர்கள், கட்சி அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: அதிமுகவின் இருதரப்பு தலைவர்கள், கட்சி அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாக்க காவல்துறையினர் குவிக்க பட்டனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக காவல்துறை அறிவிப்பு தெரிவித்துள்ளது. 

இலங்கை-யை காப்பாற்ற எவ்வளவு பணம் தேவை தெரியுமா..?

இலங்கை பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்த நிலையில் மக்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்து, ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஜனாதிபதி மாளிகையில் மக்கள் படுக்கை அறையில் படுப்பது முதல் ஸ்விமிங் பூலில்ல குதித்து விளையாடுவது வரையில் பல சேட்டைகளைச் செய்து வருகின்றனர். அனைத்தையும் தாண்டி ஜனாதிபதி-யின் சமுகவலைதளக் கணக்கில் ஒருவர், வீட்டில் சின்னப் பின் சார்ஜர் இல்லையா எனக் கேள்வி கேட்டது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. ஜோக்குகளைத் … Read more

பணம் குறித்து பலரும் பொய் சொல்வது ஏன்? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

வயது, எடை, விருப்பங்கள் பற்றி மிகவும் கலகலப்பாக, இயல்பாகப் பேசுபவர்களுக்குக்கூட தன் வருமானம், செலவு, சேமிப்பு, கடன் இவை பற்றி பிறரிடம் அவ்வளவு இயல்பாகப் பேச முடிவதில்லை. தன் வாழ்க்கைத் துணையிடம் அத்தனை விஷயங்களையும் பகிர்ந்துகொள்பவர்கள்கூட பணம் பற்றிப் பேசும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பதுடன், சில சின்னச் சின்ன பொய்களைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக் கிறார்கள். இந்தப் பொய்களுக்குக் காரணம், பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் உணர்வுகள் சம்பந்தப்பட்ட வையாகவும் இருப்பதுதான். செலவு செய்தல் கிரெடிட் கார்டு … Read more

மக்கள்தொகை அதிகரிக்கிறது, என்னைப்போல் திருமணம் செய்துகொள்ளாமல் இருங்கள்! இந்திய அமைச்சர்

இந்திய மாநிலம் நாகாலாந்தின் அமைச்சர் மக்கள் தொகை அதிகரிப்பதால் தன்னை போல் அனைவரும் திருமணம் செய்துகொள்ளாமல் இருங்கள் எனக் கூறியுள்ளார். உலக மக்கள்தொகை தினமான இன்று, நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா இணையத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள்தொகைப் பெருக்கத்தின் பிரச்சனைகளில் விழிப்புணர்வுடன் இருப்போம். மற்றும் குழந்தைப்பேறு குறித்த தகவல்களை அறிந்த தேர்வுகளை புகுத்துவோம். இல்லையெனில் என்னைப் போலவே சிங்கிளாக (திருமணம் செய்துகொள்ளாமல்) இருங்கள். அப்போது தான் ஒன்றாக இணைந்து நிலையான எதிர்காலத்திற்கு … Read more