முதல் பெண், இரண்டாவது இந்தியர்: ஐ.எம்.எஃப் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுநர்களின் சுவரில் கீதா!

வாழ்க்கையின் பயணங்களில் நாம் விட்டுச்செல்லும் தடயங்கள் மிகவும் முக்கியமானவை. இத்தடயங்களே நம்முடைய சாதனைகளை உரக்கச் சொல்லும். அவ்வாறு வரலாற்றில் தற்போது தன்னுடைய தடத்தை பதித்துள்ளார், இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத். இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF – International Monetary Fund)-ன் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுநர்களின் பட்டியல் சுவரில் இடம்பெற்ற முதல் பெண் மற்றும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டிலிருந்து … Read more

ரகசிய திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி: அடுத்து நிகழ்ந்த சோகம்

தமிழக மாவட்டம் தர்மபுரியில் ரகசிய திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் கொல்லப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா. இவரும் குளிக்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழரசும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சினேகாவுக்கு கடந்த வாரம் வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவானதால் காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தது. அதன் பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி … Read more

டெல்லி மதுபான கடைகளில் பிரபலமான மற்றும் பிரீமியம் ரக பீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உத்தரவிட வேண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு….

டெல்லி மாநகர மதுபான கடைகளில் பிரபலமான பிராண்டுகள் மற்றும் பிரீமியம் ரக பீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க மறுத்தது டெல்லி உயர் நீதிமன்றம். கோடை காலத்தில் பீருக்கு தட்டுப்பாடு நிலவுவதை காரணம் காட்டி அரசுக்கு எதிராக மதுபான கடை உரிமையாளர் ஒருவர் கடந்த வாரம் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, மதுபான பிராண்டின் பிரபலம் என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது என்றும், … Read more

அதிமுகவின் இரு தரப்பினரும் திட்டமிட்டே மோதலில் ஈடுபட்டுள்ளனர்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சிவகங்கை: அதிமுகவின் இரு தரப்பினரும் திட்டமிட்டே மோதலில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிப்புக்குள்ளானது என அமைச்சர் கூறியுள்ளார். அரசியல் கட்சிகளின் பொதுக்குழு ஒன்றும் புதிதல்ல, ஆனால் இதுபோன்ற மோதல் புதிதாக உள்ளது என கருத்து தெரிவித்தார்.

புதிய பார்லி. கட்டிடத்தில் பிரம்மாண்ட தேசிய சின்னம் : பிரதமர் மோடி திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரை முகப்பில், வெண்கலத்தால் ஆன இந்திய தேசிய சின்னத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் ரூ. 971 கோடியில் புதிய பாராளுமன்ற கட்டடம் கட்டப்பட்பட்டு வருகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடம், வரும் காலத்தில் இரு சபைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக லோக்சபாவிற்கு 888 உறுப்பினர்களும், ராஜ்யசபாவிற்கு 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் கட்டப்படுகிறது. … Read more

ரெக்கை இல்லாமல் பறந்த எரிபொருள் விலை.. ஆனாலும் நஷ்டம் ஏற்படலாம்.. ஏன்..!

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையானது அதன் உற்பத்தி செலவினங்களுக்கு கீழாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,அது எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள், 10,700 கோடி ரூபாய் நஷ்டத்தினை எதிர்கொள்ளலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. புள்ளி கோலத்தில் மாதம் ரூ.75,000 வருமானம்.. அசத்தும் ஸ்ரீரங்கம் தீபிகா.. எப்படி தெரியுமா..? குறைந்த விலையில் விற்பனை இது குறித்து ஐசிஐசிஐ … Read more

நாயின் வாயில் இரும்புச்சங்கிலி கட்டி போடப்பட்ட பூட்டு; லாவகமாக அகற்றிய தீயணைப்புத்துறையினர்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள தட்டார்மடம் பகுதியில் கடந்த பத்து நாள்களாக நாய் ஒன்று வாயில் இரும்புச் சங்கிலியால் சுற்றப்பட்டு, பூட்டு போட்டு பூட்டிய நிலையில் உணவருந்த முடியாமல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் நாயைப் பிடித்து இரும்புச் சங்கிலியை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது கடிக்கப் பாய்ந்து வந்துள்ளது. இரண்டு மூன்று நாய்களை நிறுத்தி அழைத்த போதிலும் குரைத்தபடியே அலறி ஓடிச் சென்றுள்ளது. பிஸ்கட் அளித்து ஈர்க்கப்பட்ட நாய் … Read more

சண்டிமல் விளாசிய சிக்ஸர்..மைதானத்திற்கு வெளியே இளைஞரை தாக்கிய பந்து! வைரலாகும் வீடியோ

 இலங்கை வீரர் தினேஷ் சண்டில் அடித்த பந்து ஒன்று, மைதானத்திற்கு வெளியே பறந்து சாலையில் நடந்து சென்ற இளைஞரை லேசாக தாக்கியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், தினேஷ் சண்டிமல் இரட்டை சதம் விளாசி மிரட்டினார். சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்ட அவர் இறுதிவரை களத்தில் நின்று 206 ஓட்டங்கள் எடுத்தார். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை அவர் சிதறடித்தார். சண்டிமல் 189 ஓட்டங்களில் இருந்தபோது, அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசினார். … Read more

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வணங்கான்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு….

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்திற்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. #SURIYA41 என்ற பெயரில் மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார், மலையாள நடிகை நமீதா பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 15-க்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.