சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

வேலூர்: சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ் மிகவும் பழைமையான மொழி, சக்தி வாய்ந்த மொழி, நிச்சயம் ஒரு நாள் தமிழில் பேசுவேன் என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம் என வேலூரில் ஆளுநர் கூறியுள்ளார்.  

250 கி.மீ., பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு நகரவாசிகள் மசாஜ்: வீடியோ வைரல்| Dinamalar

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூரில் உள்ள பாண்டுரங்க விட்டலர் கோயிலுக்கு 250 கி.மீ., தூரம் பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு, நகரவாசிகள் வழியில் சமாஜ் செய்து சேவை செய்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூர் நகரில், பாண்டுரங்க விட்டலருக்கு கோயில் அமைந்துள்ளது. அவரின் பக்தர்கள், ஆண்டுக்கு ஒரு முறை, துளசி மணி மாலை அணிந்து, வைணவத்தை சேர்ந்த ஞானேஸ்வர் மற்றும் துக்கராம் சமாதிகள் உள்ள புனேயின் ஆளந்தி மற்றும் … Read more

இந்தியாவின் மிக சொகுசான 6 ரயில்கள் எது தெரியுமா.. அதன் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ரயில் பயணம் என்றாலே பலருக்கும் விருப்பமான பயணங்களில் ஒன்றாக இருக்கிறது. இது பாதுகாப்பானது என்பதோடு, கட்டணமும் குறைவும் என்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒரு போக்குவரத்தாகவும் உள்ளது. எனினும் இந்திய ரயிலிலும் பிரம்மாண்ட வசதிகள் கொண்ட சொகுசு ரயில்களும் உள்ளன. இந்தியாவின் நீளமான ரயில் எது தெரியுமா.. எவ்வளவு கட்டணம்? அந்த ரயில் அப்படி என்ன வசதிகள் உள்ளன? அது எந்தெந்த ரயில்கள்? எவ்வளவு கட்டணம்? மற்ற முக்கிய விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். தி … Read more

சசிகலா கார்மீது விழுந்த ஸ்கேன் தடுப்பு கட்டை; மறியலில் இறங்கிய ஆதரவாளர்கள்! – திருச்சியில் பரபரப்பு

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, ஜூலை 8-ம் தேதி நள்ளிரவு விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு காரில் வந்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் 4 கார்களில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இரவு சுமார் 11:45 மணியளவில் திருச்சியை அடுத்த துவாக்குடி சுங்கச் சாவடியில், சசிகலா ஆதரவாளர்களின் 4 கார்களும் ஸ்கேன் செய்யப்பட்டு வெளியேறியிருக்கின்றன. சசிகலாவினுடைய கார் வந்தபோது, சுங்கச் சாவடியில் இருந்த ‘ஃபாஸ்ட் டேக்’ ஸ்கேன் கட்டை சசிகலா காரின் கண்ணாடி மீது … Read more

சொத்தில் பங்கு தராமல் பிரபு, ராம்குமார் ஏமாற்றினர்! சிவாஜி மகள்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சிவாஜி கணேசனின் சொத்துக்களில் உரிமை வழங்க கோரி அவரின் மகள்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 18ம் திகதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் சொத்துக்களில் பங்கு தராமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் … Read more

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடம்

சென்னை: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பக்ரீத் இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக … Read more

பக்ரீத் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து| Dinamalar

புதுடில்லி: நாடு முழுவதும் இன்று பக்ரீத் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதுடன் அனைத்து பள்ளிவாசல்களிலும் , முக்கிய நகர மைய இடங்களிலும் முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி, பிரதமர் : பக்ரீத் பண்டிகைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில்:அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஈத்-உல்-அதா நல்வாழ்த்துக்கள். இந்த … Read more

மட்டன் ஆம்லெட் புலாவ், இறால் வறுவல் புலாவ், மட்டன் & பீன்ஸ் கப் கேக் இட்லி- வீக் எண்டு ரெசிப்பீஸ்

மட்டன் ஆம்லெட் புலாவ் ஆம்லெட் செய்ய… முட்டை – 6 மட்டன் கீமா – அரை கப் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் – 2 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாயத்தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 மீடியமாக நறுக்கிய தக்காளி – 2 ஏலக்காய் – 2 பட்டை … Read more

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 57 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: தெற்கு பாகிஸ்தானின் பாலூசிஸ்தான் மாகாணத்தில் கனமழை பெருவெள்ளத்தில் 8 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 57 பேர் உயிரிழந்தனர். விடிய விடிய பெய்த மழையால் குடியிருப்பு கூரைகள் இடிந்து விழுந்து பலர் படுகாயம் அடைந்தனர். கனமழை பெருவெள்ளத்தில் அணைகளின் மதகுகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ள நீரில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அடித்துச் செல்லப்பட்டதில் 57 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா சொத்துக்களில் 50% பங்கு கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஜெயலலிதா சொத்துக்களில் 50% பங்கு கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியான  ஜெயம்மாவின் மகன் என வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.