“சேது… என் நண்பன்… நந்தா… நானேதான்!” – பாலா #AppExclusive

“நந்தா ரெடியாகிட்டான். இன்னும் க்ளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி” எடிட்டிங்கில் இருந்து எழுந்து வருகிறார் டைரக்டர் பாலா. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற டைரக்டர்.  தீபாவளி ரேஸில் முரட்டுக் குதிரையாக களம் இறங்கப்போகிற நந்தா பற்றி பாலாவிடம் பேசியதிலிருந்து.  “நந்தா யாரு?”  “மனசுக்கும் புத்திக்கும் மத்தியில வண்டி ஒட்டறதுதான் வாழ்க்கை நட்பு. உறவு, காதல்னு ஆரம்பிச்சு எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் அழுக்கு இருக்கு. ஒரு தாய் தன் பிள்ளை மேல வைத்திருக்கிற பாசத்தைத்தான் உலகத்திலேயே உசத்தியான விஷயமா … Read more

ஜூலை-11: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 51-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 51-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முதியோர் மருத்துவமனையில் டாங்கி தாக்குதல்: குற்றத்தை மறைக்க ரஷ்ய வீரர்கள் செய்த அவலமான செயல்

உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ரஷ்ய ராணுவம் நடத்திய டாங்கி தாக்குதலில் 56 பேர் வரை கொல்லப்பட்டதாக அந்த பகுதியின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர், Serhiy Hayday தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 140 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், லுஹான்ஸ்க்கின் கிரெமென்னாயா பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதியோர்களை குறிவைத்து ரஷ்ய … Read more

ஜூலை-11: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் கடந்த  50-வது நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகன் கைது..!

பரான், ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் கெர்கெடா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹயலால் (வயது 70) என்பவர் கடந்த ஜூன் 30-ந்தேதி அவருடைய குடிசைக்கு அருகிலிருந்த வயலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அவரது மகன் ஹேம்ராஜ் (வயது 35) தனது தந்தையை கோடரியால் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதும் தனியாக குடிசை அமைத்து வசித்து வந்ததும், சட்டவிரோதமாக நாட்டு மதுபானம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. குடும்பத்துக்கு அவப்பெயர் … Read more

மூன்றாவது டி20 போட்டி..இங்கிலாந்து அணி திரில் வெற்றி: கோப்பையை கைப்பற்றியது இந்தியா!

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில், இன்று டிரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம் மைதானத்தில் வைத்து மூன்றாவது டி-20 போட்டிகள் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,372,908 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,372,908 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 560,588,991 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 533,558,340 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,814 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வங்கி அதிகாரி அடித்து கொலை அவசர புத்தி செக்யூரிட்டி கைது| Dinamalar

எச்.ஏ.எல். : திருடன் என தவறாக நினைத்து, வங்கி அதிகாரியை இரும்புத்தடியால் அடித்து கொலை செய்த, செக்யூரிட்டி கைது செய்யப்பட்டார். ஒடிசாவைச் சேர்ந்த அபினாஷ், 24, அங்குள்ள வங்கி கிளையொன்றில், மேலாளராக பணியாற்றினார். பயிற்சிக்காக பெங்களூரு வந்திருந்தார். முனேனகொப்பலுவில், தன் அண்ணனின் நண்பர்கள் இருந்த அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில், இரவு பார்ட்டிக்கு சென்ற இவர், ஜூன் 5 அதிகாலை 3:00 மணியளவில், குடிபோதையில் அறைக்கு புறப்பட்டார். ஆனால், அவருக்கு வழி தெரியவில்லை. வழி தவறி எச்.ஏ.எல்.,லின், ஆனந்த … Read more

இலங்கை ஜனாதிபதியிடம் போராட்டக்காரர்கள் கிண்டலாக மூன்வைத்த கேள்வி? வைரலான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம்

இலங்கை ஜனாபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவரது வீட்டில் சின்ன பின் மொபைல் சார்ஜர் இல்லையா? என அவரது இணைய பக்கம் மூலமாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் குதித்தனர். இவ்வாறு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம், ஜனாதிபதி கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முழுவதுமாக கைப்பற்றும் அளவிற்கு பூதாகரமாக வெடித்தது. … Read more