வரும் 7 ஆம் தேதி சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை வரும் 7 ஆம் தேதி சென்னையில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமலும், மக்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் … Read more

திருப்பூர்: தலை நசுக்கப்பட்டு இளம்பெண் படுகொலை; தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பெண்ணின் தலை மற்றும் கைகளில் கற்களால் அடித்து நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெண்ணைக் கொலை செய்யப் பயன்படுத்திய கல் உள்ளிட்டவற்றில் பதிவான … Read more

இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுகள் நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் … Read more

கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், ‘பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படுகிறதா?’ என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இப்போது திருச்சி மாவட்டத்தில் கிட்டதட்ட 104 டிகிரி வந்துவிட்டது. இப்போதைக்குப் பள்ளி திறப்பு ஜூன் 2-ம் தேதி என்று அறிவித்து உள்ளோம். கோடை வெயில் அந்த சமயத்தில் … Read more

பீர் விலை மீண்டும் உயர்வு : கர்நாடக அரசு மீது மதுப்பிரியர்கள் அதிருப்தி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை 2, 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அவற்றின் விலையை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பீர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் பீர் விலை உயா்த்தப்பட்ட நிலையில் 2 மாதங்களில் மீண்டும் அவற்றின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது. தற்போது 195 … Read more

60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

கிட்டத்தட்ட 20 வருடங்களா நீங்க நல்லா உழைச்சாச்சு! கொஞ்சம் காசும் சேர்த்து வச்சுட்டீங்க. சிலர் வீடும் வாங்கியிருப்பீங்க, அதுக்கு சிலர் இ.எம்.ஐ-யும் கட்டிட்டு இருப்பீங்க. ஒருபக்கம் குழந்தைகளின் படிப்பும் போயிட்டு இருக்கும். ஆனா இப்போ உங்களோட மிகப்பெரிய கேள்வியே, ஒரு 55-60 வயசுல என்கிட்ட இப்ப மாதிரியே காசு இருக்குமா? வயசான காலத்துல மாசாமாசம் நம்மளோட தேவைகளை எப்படி பூர்த்தி பண்ணுறது?  வயசான காலத்துல ஃபிக்சட் டெப்பாசிட்ல காசு போட்டு வைக்கலாம்னா குறைஞ்ச வட்டிதான் கிடைக்கும். வாடகைப் பணம் வரும்னு பார்த்தா எல்லார்கிட்டயும் வாடகைக்கு விட வீடோ, கடையோ, வாகனமோ … Read more

ம.பி.யில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடல்… ரிஸார்டுகளாக மாறும் கல்லூரி வளாகங்கள்…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் தொழில்துறைக்கு பொருத்தமில்லாத பாடப்பிரிவுகளால் மாணவர் சேர்க்கை குறைந்ததை அடுத்து இந்தக் கல்லூரிகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 300 லிருந்து 140 ஆகக் குறைந்துள்ள, அதே நேரத்தில் இடங்கள் 95,000 லிருந்து 71,000 ஆகக் குறைந்துள்ளன. ஒரு காலத்தில் புதுமைகளுக்குப் பெயர் பெற்ற ரதிபாத்தில் அமைந்துள்ள கார்கி அறிவியல் … Read more

`வீட்டில் டார்ச்சர்' – டியூசனுக்கு வந்த மாணவனுடன் எஸ்கேப் ஆன ஆசிரியை – நடந்தது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது பெண் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தினார். அவரிடம் 5-வது வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவனும் டியூசன் படித்துள்ளான். 23 வயது பெண்ணிடம் அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். ஆனால் அப்பெண் தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். டியூசனுக்கு வந்த மாணவர்கள் அனைவரும் நின்றுவிட்ட நிலையில் 11 வயது மாணவன் மட்டும் டியூசனுக்கு வந்து கொண்டிருந்தான். இதனால் இருவருக்கும் இடையே … Read more

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு… சாதியையும் சேர்த்து கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல வருட தாமதங்களுக்குப் பிறகு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதை முடிக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது. 2020 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்படவிருந்த புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ காலக்கெடுவை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. “சாதி கணக்கெடுப்பைச் சேர்ப்பதா இல்லையா என்ற ஒரே காரணத்தால் தாமதம் ஏற்பட்டு வந்த … Read more

“எல்லாமே மாறிவிட்டது'' – 16 வருடத்துக்குப் பிறகு இந்தியா வந்த நபரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்க காண்டன்ட் கிரேயேட்டர் ரால்ஃப் லெங். இவரின் குழந்தைப்பருவம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. அதற்குப் பிறகு சில காரணங்களால் அவர் தன் குடும்பத்துடன் மீண்டும் இங்கிலாந்து சென்றுவிட்டார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவர், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தன் குழந்தைப் பருவத்தை கழித்த இந்திய வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘என் சிறுவயதில் வசித்த இடத்துக்குப் போகப்போகிறோம்’ என தன் பார்வையாளர்களை … Read more